ஏப்ரல் 08, 2013

குறளின் குரல் - 361


8th April 2013

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.
                            (குறள் 352: துறவு அதிகாரம்)

Transliteration:
iruLnIngi inbam payakkum maRuLnIngi
mAsaRu kATchi yavarkku

iruLnIngi – misery causing darkness of ignorance departing
inbam payakkum – all goodness will come forth
maRuLnIngi – dizziness of ignorance, reason lures of sensory pleasures, leaving
mAsaRu - blemishless
kATchiyavarkku –  seers, realized souls

The realized souls that are set in self-inquiry seeking higher truth, and have quelled the pleasures of sensory organs by not giving into their respective desires, will see, the misery-feeding darkness of ignorance removed; and they will have all happiness-setting goodness coming to them. Again an already spoken theme in other chapters also, but put in the context of realization of truth. Though it is said all goodness in general sense here, ParimElazhagar defines the goodness as the soul attaining birthless state and the heavenly abode. That blessing has none to compare or above it. Also, he likens the darkess to the hell in his commentary.

Kambar in a verse of Kamba Ramayanam says, the desires of material wealth will make one think of ill deeds as good deeds. But the truth seeking and realizing solus will get rid of the illusion of attachment towards such material comforts and wealth.

Darkness of ignorance will leave, happiness of goodness will spring
 For those who conquer desires, with what blemishless insights bring”

தமிழிலே:
இருள்நீங்கி - துன்பம் தரக்கூடிய அறியாமையாகிய இருள் அகன்று
இன்பம் பயக்கும் - எல்லா நன்மைகளும் செறிவுடன் சேரும்
மருள்நீங்கி - மெய்யறிவை மறைக்கும் புற நுகர்வுகளுக்கான விழைவாம் மயக்கம் நீங்கி
மாசறு - குற்றமில்லாத
காட்சியவர்க்கு - மெய்யுணர்வாளர்களுக்கு

மெய்யறிவை மறைக்கும் புலன் நுகர்வு விழைவுகளாம் மயக்கங்கள் நீங்கப்பெற்ற குற்றமில்லாத மெய்யுணர்வாளர்களுக்கு, துன்பங்களைத் தரக்கூடிய அறியாமையாம் இருள் அகன்று எல்லா நன்மைகளும் செறிவுடன் வந்து சேரும், என்பது இக்குறள் சொல்லவரும் கருத்து. முன்பே வள்ளுவர் சொல்லியிருக்கும் கருத்தானாலும், மெய்யுணர்தலை மையமாக வைத்து இங்கும் சொல்லப்படுகிறது.

மெய்யுணர்வு என்பது அகம் நோக்கிய, உள்முகமான ஆன்ம சிந்தனை, உயர் பொருளை, உண்மைப் பொருளைப் பற்றி. எல்லா நன்மைகளும் என்பது பொதுவாகச் சொல்லப்பட்டதாயினும் பரிமேலழகர் அவற்றை பிறப்பு நீங்கி கிடைக்கும் நிரதிசய இன்பமான (தன்னிலும் மேம்பட்ட இன்பம் இல்லாதது) வீட்டுப் பேற்றினை குறித்தே சொல்லுகிறார். இருள் என்பதையும் நரகமென்று குறிக்கிறார்.

கீழ்காணும் கம்பனின் கார்காலப் படலப் பாடல், மெய்யுணர்வால் பொருள்கள் மீது பற்று நீங்கதலை பாடுகிறது.

தீவினை, நல்வினை, என்னத் தேற்றிய
பேய் வினைப் பொருள்தனைஅறிந்து பெற்றது ஓர்
ஆய் வினை மெய்யுணர்வு அணுக, ஆசு அறும்
மாயையின் மாய்ந்தது -மாரிப் பேர் இருள்

பொருளாசையானது தீவினையை நல்வினை என எண்ணச் செய்யும். மெய்
 உணர்வால் பொருள் மீதுள்ள பற்றாகிய மாயை நீங்கும்.  அதுபோல
 முன்பனிப் பருவம் வந்தவுடன் மழைக்காலத்துச் செறிந்த இருள் நீங்கியது
 என்பது இவ்வுவமையின் கருத்து.

இன்றெனது குறள்:

அறிவு மயக்கமற்று மெய்யறிந்தால் நன்மைச்
செறிவுறும் நீங்கி மயல்
aRivu mayakkamaRRu meyyaRindhAல் nanmaich
seRivuRum nIngi mayal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...