ஏப்ரல் 07, 2013

குறளின் குரல் - 360


36:  (Truth Realization - மெய் உணர்தல்)
[This chapter is about inquring and realizing the everlasting truth that stays blemishless, regardless of times or place, It is possible only for truly renounced souls that are in perpetual self-inquiry to understand the higher truth of Godhead. Devoid of attachments is the prerequisite of truth realization and hence this chapter is placed after the chapter on renunciation]

7th April 2013
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.
                            (குறள் 351: துறவு அதிகாரம்)

Transliteration:
poruLalla vaRRai poruLenRu uNarum
maruLAnAm mANAp piRappu

poruLallavaRRai – those that are not truthful or entirely false
poruLenRu – to think of them as everlasting things of substance
uNarum – realizing them as such (wrongly)
maruLAnAm – dizziness of ignorance
mANAp – brings forth, ignominious misery
piRappu – such birth it will be.

To believe that which is not permanent as permanent, that which is not real as real, that which is falsity as the absolute truth will give us dizziness of ignorance and render this birth on  earth as ignominious and a miserable one. Parimelazhagar calls this as “dangerous feeling”. Why? This ignorance will make one think that there is no rebirth; and the cycle of birth and death is due to deeds of present lives or continuation of earlier births. It will also deny the presence of Godhead. Almost all the verses in this chapter and including this verse, are extentions and reinforcemens of what we have seen in the chapter on “renouncing”.

Through the Indian philosophical thought process, more than in any other culture, the concept of unreal as real, the maya has been discussed by many, more so in the bhakthi lore and literature.

Ignominious birth will befall on dizzied minds of delusion
That discerns not, to think unreal as real out of confusion

தமிழிலே:
பொருளல்லவற்றைப் - எவை மெய்ப்பொருளல்லவோ, அதாவது பொய்யானவையோ
பொருளென்று - அவற்றையெல்லா மெய்ப்பொருளாகக் கொண்டு
உணரும் - அவ்வாறு உணருகின்ற
மருளானாம் - அறியாமை மயக்கமாம்
மாணாப் - சிறப்பில்லாத, இழிந்த துன்பத்தைத்தரும்
பிறப்பு - பிறப்பாகும்.

எவை இவ்வுலகில் நிலையில்லையோ அவற்றை நிலையானவையென்று இருப்பதாக எண்ணுவது, பொய்யானவற்றை மெய்யென எண்ணுவது, இவைகளெல்லாம் நமக்கு அறியாமை மயக்கத்தை தந்து, பிறப்பைச் சிறப்பில்லாத, இழிந்த  துன்பங்களைத் தருகின்ற பிறப்பாகிவிடும். இந்த மயக்கமானது விபரீத உணர்வு என்பார் பரிமேலழகர். ஏனெனில், விபரீத உணர்வானது, மறு பிறப்பும், இருவினைபயனில்லை, கடவுளும் இல்லை என்று எண்ணும் எண்ணம். துறவற அதிகாரத்தில் சொல்லப்பட்டக் கருத்துக்களின் தொடர்ச்சியாக இவ்வதிகாரத்தின் முதற்குறள் அமைந்ததுள்ளது.

கம்பர் மாரீச வதைப் படலத்திலே,"மருளொடு தெருளுரும் நிலையர் மங்கையர் தெருளுரும் மெய்ப்பொருள் தெளிந்தி லாரினே" என்றும், சுந்தரர் ஆருர் தேவாரத்தில், “பொள்ளலிவ் வுடலைப் பொருளென்று பொருளும் சுற்றமும் போகமும் ஆகி மெள்ள நின்றவர் செய்வனவெல்லாம்” என்றும், பொருள் அல்லாதவற்றை பொருளென்று உணர்தலைப் பற்றிக் குறிக்கின்றனர்.

இன்றெனது குறள்:
பொய்ப்பொருளை மெய்ப்பொருளாய்க் கொள்ளும் மயக்கமதே
உய்த்துவிடும் துன்பப் பிறப்பு

poipporuLAi meippOruLAikk koLLum mayakkamadhe
uyththuviDum thunbap piRappu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...