மார்ச் 25, 2013

குறளின் குரல் - 347


25th March 2013

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.
                        (குறள் 338: நிலையாமை அதிகாரம்)
Transliteration:
kuDambai thaniththuozhiya puLpaRan dhaRRE
uDamboDu uyiriDai naTpu

kuDambai – The egg shell
thaniththuozhiya – to be left behind as broken and used
puL- the bird
paRandhaRRE – like it  flies away (once the purpose of shell is over) is the
uDamboDu – with the body
uyiriDai – life’s
naTpu – friendship or relationship

This verse establishes the impermanence by citing the relationship of the life in this mortal coil, which is not permanent. When the purpose of the body is over the life leaves the body like the bird flies out of nest, leaving it once it has its wings. Papanansam sivan’s song KANavENDAmO, captures this thought in the lilting words, “ OTTaichchaDalam oDunga veRRelumbuk kUTTilirundhuyir OTTam piDikkum mun” . The way ParimElazhagar has interpreted this is based on how the bird leaves when it is time to leave the shell that protects it (not the nest). He says like the bird breaks open, leaving the shell broken, useless, is how the life force leaves the body and that’s how the friendship between the life and its bearer, the body is.  This has been a favorite theme of poets of philosophical bent for ages!

We may ponder over another thought related to this. The continuation of life force in the new enviroment is hinted here too. We all witness this when the life that is formed in a shell or mother’s womb is protected until it is time to emerge in to the world with its body. The new enviroment for that life is outside world. When the body’s purpose is over, it is ready to leave and hop in to, may be, an unknown new environment, into a new body. So this verse indirectly establishes the continuity of the soul, but the disengagement with the physical form when it is ready to move on. In otherwords, the impermanence is for the body and not for the soul.

The thought has been expressed in nAlaDiyAr and aganAnURu and many other moralistic and devotional literature.

The word “kuDambai” has been interpreted by Parimelazhagar and later commentators as egg; but that must have come only after the lexicon “Pinkalandhai niganDu”. The word has been used as a nest in most old tamil literary works. However both the nest and egg connote only a temporary abode of a life.

“Like the bird’s bond before wings, with the nest
 is the bond of life with the mortal coil till its rest”

தமிழிலே:
குடம்பை - முட்டையின் கூடு
தனித்துஒழியப் - தனியாக விட்டு
புள் - பறவையானது
பறந்தற்றே - பறந்து செல்வது போலாம் (கூட்டின் தேவை முடிந்து அதை உடைத்துக்கொண்டு)
உடம்பொடு - இந்த உடம்போடு
உயிரிடை - அதோடு ஒட்டியிருக்கக்கூடிய உயிரின்
நட்பு - நட்புறவு

உடம்புக்கும் உயிருக்குமான தொடர்பின் காலவரையறையச் சொல்லி, நிலையாமையை அழுத்தமாக நிலை நிறுத்தும் குறளிது. “ஓட்டைச் சடலம் ஒடுங்க வெற்றெலும்பு கூட்டிலிருந்துயிர் ஓட்டம் பிடிக்குமுன்” என்று சென்ற நூற்றாண்டின் இசைப்பாடலாசிரியர் பாபநாசம் சிவன் அவர்களும் இக்குறளின் கருத்தையொட்டிப் பாடியிருக்கிறார். ஒரு முட்டையின் கூட்டிலிருந்து, உயிர்த்து, சிறிது வளர்ந்து பின்பு பிறந்து அந்த முட்டையின் ஓட்டை உடைத்துக்கொண்டு வெளிவந்து பறந்து செல்லும் பறவைக்கும் அதை பேணிவளர்த்து, பிறகு பிளந்து நைந்த முட்டையின் ஓட்டுக்கும் உள்ள உறவைப் போன்றதே, நமது உடலுக்கும் உயிருக்குமாய தொடர்பு. இந்த உடல் பேணி வளர்க்கும் உயிர் இவ்வுடல் நைந்து தளர்ந்தபின் பிரிந்து செல்லுவதாம். உயிர்ப்பறவைப் பிரிந்து செல்வதைப் பலகவிஞர்களும் பாடியிருக்கின்றனர்.

இந்த கருத்தையொட்டிய மற்றொரு கருத்தையும் சிந்திக்கலாம். ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து சென்று புது உடலில் வளருங்கருத்தும் இதனால் புலப்படுவதைக் காணலாம். கருவுற்ற உயிரெல்லாம், ஒரு கூட்டிலிருந்து வளர்ந்து, பின்பு அக்கூட்டை விட்டுப் பிரிந்து, உடலோடு மற்றொரு உலகத்தில் வளர்ந்து அங்கும் தேய்ந்து, இருக்கும் உடலைவிட்டுப் பிரியும்போது, அது வேறொரு உலகத்துக்கு சென்று புது உடலை  அடைவதும் நடக்குமல்லவா? உயிரைப் பொருத்தவரை, அதன் தொடர்ச்சி புது சூழ்நிலையில், உலகத்தில் வளர்ந்து அதைச் சார்ந்த உடலம் அழிந்தபின் வேறிடத்தில் என்பது தெரிகிறதல்லவா? நிலையாமை என்பது உடலுக்கே, ஆன்மாவுக்கு இல்லை என்பது உறுதிப்படுகிறது இதனால்.

சும்மா கூடு மரத்தில் கிடக்க, அதிலிருந்து தொலைவிலே பறந்து போய்விடும் பறவைகள் போல மக்கள் ஒருவரையும் கேளாமலே வந்து சுற்றங்களாய் ஒரு குடும்பத்தில் பிறந்து, பின்பு தம் உடம்பை உறவினரிடம் கிடக்கும்படி நீக்கி விட்டு, பேசாமலே இறந்து போய் விடுவார்கள் என்னும் கருத்தைக்கூறும் நாலடியார் பாடல் கீழே.

கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி

வாளாதே போவரால் மாந்தர்கள் - வாளாதே

சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போல

யாக்கை தமர்க்கொழிய நீத்து.

பழந்தமிழ்ப் பாடல்களில் குடம்பை என்ற சொல் கூடு என்ற பொருளிலேயே வழங்கிவந்திருக்கிறது, பரிமேலழகர் காலத்துக்கு முந்தைய பிங்கலந்த நிகண்டு மட்டுமே குடம்பைக்கு முட்டை என்ற பொருளக்கூறுவதாகவும் தெரிகிறது. இதற்கும் காரணம், குடம் போன்ற உருவில் உயிர்தாங்கும் பை என்பதனால் இருக்கலாமோ? இன்றும் கர்ப்பக்குடம், அல்லது கர்ப்பப்பை என்ற சொற்கள் வழங்கி வருவதை அறிவோம். அகநானூற்றுப்பாடலொன்று உயிர் உடலை விட்டுப்பிரிவதை பறவை கூட்டிலிருந்து பிரிவதாக உருவகம் செய்துள்ளது.

அலங்கல் அஞ்சினைக் குடம்பைப் புள்ளெனப்
   
புலம்பெயர் மருங்கிற் புள்எழுந் தாங்கு
   
மெய்யிவண் ஒழியப் போகி, அவர் 
   
செய்வினை மருங்கிற் செலீஇயர் இன்உயிரே. – (அகம் 113)

கூடு என்ற சொல் உடலென, பல சங்க இலக்கியங்களில் வழங்கி வந்திருக்கிறது.
இன்றெனது குறள்(கள்):

முட்டையின் கூட்டிற்கும் குஞ்சுக்கும் போன்றதாம்
கட்டுடலோ டிவ்வுயிர்க்கு நட்பு
muTTaiyin kUTTiRkkum kunjukkum pOnRadhAm
kaTTuDlO divvuyirkku naTpu

இறக்கை முளைத்தப் பறவைபோல் நீங்கும்
இறக்கவுடல் நைந்து, உயிர்
iRakkai muLaiththap paRvaipOl nIngum
iRakkavuDal naindhu uyir

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...