நவம்பர் 24, 2012

குறளின் குரல் - 227


25th November, 2012

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
              (குறள் 218: ஒப்புரவறிதல் அதிகாரம்)

Transliteration:
iDanil paruvaththum oppuraviRku olgAr
kaDanaRi kaTchi yavar

iDanil paruvaththum – Even if there is diminished wealth not allowing unrestricted benevolence
oppuraviRku – to be so (benevolent)
olgAr – will not go lean or backout
kaDanaRi –aware of the duty of benevolence
kaTchiyavar- knowledgeable and (join with the previous word)

Even when the wealth has wilted, those who do not wean and wither away from helping others are the ones who know the proper duties of life.  ParimElazhagar says: “piRa ellAm ozhiyinum igdhu ozhiyAr enbadhAm”, which means, even if everything else has vanished, this, referring to act of benevolence, does not go away in some people, of high values and virtues.

Perhaps, Parimelazhgar was much before the times of the idiom, “seththum koDuththAn seedhakkAdhi” (even after his demise, the philanthropist SeedhakkAdhi, was giving)

There are a few verses from the works of nAlaDiyAr and pazhamozhi that express similarly.  “koDaiyodu paTTa guNanudaya mAndharkku aDaiyAvAm AnDaikkadhavu” (nAl:91).  “eRRondRum illA iDaththum kuDippiRandhAr aRRuththaR sErndhArkku asaiviDaththu URRuvAr” (nAl: 150).

Verses from pazhamozi also talk highly about such people. “ITTiya oNporuL inReninum oppuravu ARRum maniapiRandha sAnRavan” (pazha:217) where it says about a person who acts benevolent even if he does not have much to give.

It is strange but true that our own society which places benevolence in such high light, also says “Thankku minjithAn thAnamum dharmamum” meaning only excess after taking care of self can be used for charity and giving to others.

 “Even when the wealth has wilted, that who are willingly benevolent
  Are the people knowing the proper duties ordained as sacrosanct“

தமிழிலே:
இடனில் பருவத்தும் - தன் செல்வமும் வளமும் குன்றிய காலத்தும் (வழியில்லாத போதும்)
ஒப்புரவிற்கு - பிறர்கு உதவி செய்யும் உயரிய பண்பிலிருந்து
ஒல்கார் - தளரமாட்டார்
கடனறி - தான் வாழ்வதற்கு முறைமை இது என்று அறிந்த
காட்சியவர் - அறிவினர்.

தாம் ஒன்றும் பிறர்கு உதவிசெய்யுமளவிற்கு இல்லாது தன் செல்வம் குன்றினாலும், தம்முடைய வள்ளன்மையிலிருந்தும், பிறர்கு வழங்குவதிலிருந்தும் தளராதவர், வாழ்வின் முறையான கடன்களை அறிந்த அறிவினர். “பிற எல்லாம் ஒழியினும், இஃது ஒழியார் என்பதாம்”, என்பார் பரிமேலழகர். அவர் “செத்தும் கொடுத்த சீதக்காதி” என்ற வழக்குக்கு முற்பட்டவராய் இருந்திருக்க வேண்டும்.

இத்தகு பண்பினரைப் பற்றிய நாலடியார் பாடல்கள்:

இல்லா இடத்தும் இயைந்த அளவினால்
உள்ளஇடம் போல் பெரிதுவந்து - மெல்லக்
கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்கு
அடையாவாம் ஆண்டைக் கதவு. (நாலடியார் 91)
                           

பொருள் இல்லாதபோதும் தம்மால் இயன்ற அளவு, பொருள் உள்ளதுபோல் மகிழ்ந்து இயல்பாகக் கொடுக்கும் பண்பினருக்கு வானோரில்லத்து கதவு அடைபடாது, திறந்தே இருக்கும்.

எற்றொன்றும் இல்லா இடத்தும் குடிப்பிறந்தார்
அற்றுத்தற் சேர்ந்தார்க்கு அசைவிடத்து ஊற்றுவார்;
அற்றக் கடைத்தும் அகல்யாறு அகழ்ந்தக்கால்
தெற்றெனத் தெண்ணீர் படும். (நாலடியார் 150)

நீரற்ற அகன்ற ஆறு, தோண்டிய உடனே சுரந்து தெளிந்த நீரைத் தரும். அதுபோல, உயர்குடிப் பிறந்தோர் தம்மிடம் யாதொரு பொருளும் இல்லாத போதும், துன்புற்றுத் தம்மைச் சார்ந்தவர்க்கு அவரது தளர்ச்சி நீங்க ஊன்றுகோல் போல உதவுவர்.

இதேபோன்று பழமொழிப் பாடல்களும் இத்தகுப் பண்பினரைப் பற்றி இவ்வாறு கூறுகின்றன: “ஈட்டிய ஒண்பொருள் இன்றெனினும் ஒப்புரவு ஆற்றும் மனைபிறந்த சான்றவன்” (பழமொழி 217). “கூஉய்க் கொடுப்பதொன்று இல்லெனினும் சார்ந்தார்க்குத் தூஉய்ப் பயின்றாரே துன்பந் துடைக்கிற்பார்” (பழமொழி 162)

ஆனால், இப்படிச் சொன்ன நம்மவர்களே, “தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும்” என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

இன்றெனது குறள்:
வளங்குன்றி வற்றினும் வள்ளண்மை வற்றார்
உளத்தொப் புரவறிந்த வர்

vaLangunRi vaRRinum vaLLanmai vaRRAr
uLaththop puravaRindha var

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...