நவம்பர் 25, 2012

குறளின் குரல் - 228


26th November, 2012

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.
              (குறள் 219: ஒப்புரவறிதல் அதிகாரம்)

Transliteration:
nayanuDaiyAn nalkUrndhA nAdhal seyumnIra
seyyAdhu amaigalA vARu

nayanuDaiyAn – Benevolent people who are used to helping others
nalkUrndhAnAdhal – they become poor (unable to continue their duty of benevolence)
seyumnIra – their duty of benevolence
seyyAdhu amaigalAvARu - not able to continue uninterrupted

A Beautiful expression to explain a very elegant thought! A person soaked in good virtues, when he is not able to fulfill his duties accordingly, will feel poor and uneasy about it. This has been said in the context of benevolent souls here.  Those who are benevolent, they will feel very poor and incapacitatedif they are not able to help others.

Ki.vA.Ja has quoted in his research compilation, a verse from puRanAnUru  expressing the same thought – “purappOr punkaN kUra  irappOr kIyA inmaiyAn uRavE” (puRa:72:17-8)                                                                         

“Benevolent souls will feel helpless and poor
 If they can not help the needy in despair”

தமிழிலே:
நயனுடையான் - பிறர்குதவும் பெருந்தகைமயினர்
நல்கூர்ந்தானாதல் - வறுமையுடையவராக உணர்வது
செயும்நீர - அவர்கள் விரும்பிச்செய்யும் பிறர்க்குதவுதலை
செய்யாது அமைகலாவாறு - செய்யமுடியாமல் நேரும்போதுதான்

அழகான கருத்து. ஒரு நல்ல பண்பில் ஊறியவருக்கு அதைச் சார்ந்த செயல்களைச் செய்யமுடியாமல் போவது மிகவும் மனவருத்தத்தையும் கொடுக்கக்கூடியது. அவர்களை வறியவராகவே எண்ணவும் ஏங்கவும் வைக்கும். அதையே வள்ளுவரும் இங்கு சொல்லுகிறார் ஒப்புரவாளருக்கு.  பிறர்கு உதவும் பெருந்தகையாளருக்கு, அவ்வாறு உதவமுடியாமல் ஏதேனும் காரணம்பற்றி நேருமானால், அவர் தம்மை வறியராகவே உணர்வர்.

கி.வா.ஜ உரையில் புறநானூற்றிலிருந்து மேற்கோளிட்டு சுட்டியிருப்பார் இவ்வாறு: “புரப்போர் புன்கண் கூர இரப்போர்க் கீயா இன்மையான் உறவே” (புற 72:17-8)

இன்றெனது குறள்:
ஒப்புரவு ஓம்புவோர்க்கு ஓண்ணா ஒழிதலே
எப்போதும் நல்குர வாம் (நல்குரவு - வறுமை)

oppuravu OmbuvArkku oNNA ozhidhalE
eppOdhum nalgura vAm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...