அக்டோபர் 28, 2012

குறளின் குரல் - 199

28th October, 2012

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
                              (குறள் 190: புறங்கூறாமை அதிகாரம்)

Transliteration:
EdhilAr kuRRampOl thangkuRRam kANgiRpin
thIdhuNDO mannum uyirukku

EdhilAr – others
kuRRampOl – like finding their faults
thangkuRRam – faults in self
kANgiRpin - if finds (thankuRRam)
thIdhuNDO – will any harm come?
mannum  - the births that continue for eternity
uyirukku  - and the soul that stays for ever.

If a person knows how to find his/her own mistakes/misdeeds like others, then will there be any harm to his/her permanent soul? – vaLLuvar ends this chapter with this question.

Those who find fault in them first will only try to mend theirs as well as others when they find faults in them and wiill not get a cheap pleasure of slander. They will be people of “just thoughts” and will not indulge in slanderous talks.

The ending of “mannum uyirkku” has been interpreted as “permanent life force”. Is there any such thing as a permanent life? Every life begins and lives its life and perishes whenever its fated end is. Hint here is the permanence of a soul, which is a dogmatic belief of the society.  Just person’s permanent soul will not face any harm in the successive births is what is hinted by vaLLuvar here.

Parimelazhagar, superficially says “permanent life”, which has not been further explained and leaves room for doubts. This verse has been suggested as a way of avoiding slander. Since it is the last verse of this chapter, vaLLuvar ends it with a thought provoking question!

“Will there be harms and hurt for a soul of eternalness
  When it can find faults of its own like it does of others?”

தமிழிலே:
ஏதிலார் - மற்றவர்களது
குற்றம்போல் – தவறுகளைக் காண்பது போல்
தங்குற்றங் – தன்னிடமிருக்கும் தவறுகளையும்
காண்கிற்பின் – ஒருவர் காண்பரேயானால்
தீதுண்டோ – தீமை வருவதுண்டோ
மன்னும் – தொடர்ச்சியாக வரும் பல பிறவிகளிலும்
உயிர்க்கு – நிலைத்திருக்கும் உயிர்க்கு

ஒருவர் மற்றவர்களிடத்தில் உள்ள குற்றங்களைக் கண்டு பேசுவதுபோல், தன்னிடம் உள்ள தவறுகளையும் காண்பாரானால், அவருடைய நிலைத்திருக்கும் உயிருக்கு தொடர்ச்சியாக வரும் பல பிறவிகளிலும் தீமைவருவது உண்டோ, என்கிறது இக்குறள்.

தன்னிடம் உள்ள தவறுகளைக் காணப் பழகி அவற்றைத் திருத்திக்கொள்ளுபவர்கள், பிறரிடம் தவறுகண்டாலும் அவற்றை திருத்தவே முற்படுவர். அவற்றைப்பற்றி அயலாரிடம் பேசும் புறங்கூறுதலை செய்து மகிழார்.

மற்றவர்கள் தவறுகளைக் காண்பதுபோல தம்முடைய தவறுகளையும் காண்பார்களானால், அவர்கள் நடுவுநிலையில் உள்ளவர்களாகவே இருப்பர். அத்தகையவர்களும் புறங்கூறுதலாகிய இழிவைச் செய்யமாட்டார்.

“மன்னும் உயிர்க்கு” என்ற முடிவிலே, நிலைத்திருக்கும் உயிர் என்று எல்லோரும் பொருள் செய்திருக்கிறார்கள். நிலையான உயிர் என்பது உண்டா? இக்குறளில் ஆன்மாவையே வள்ளுவர் குறிப்பதாகக் கொள்ளவேண்டும். உடல் அழிவது, உயிர் நிலையானது என்கிற நம்பிக்கையின்படி, புறங்கூறா (இது வெளிப்படையாகச் சொல்லப்படாமல் உள்ளுரையாக வைக்கப்பட்டது) நடுவுநிலையாளரின் நிலைத்திருக்கும்ஆன்மாவுக்கு தொடரும் பிறவிகளிலும் தீமை வருவது கிடையாது.

பரிமேலழகர், மேலோட்டமாக “நிலைப்பேறுடைய உயிர்க்கு” என்று கூறியிருக்கிறார். இதைப் புறங்கூறுதலைத் தவிர்க்கும் வழிமுறையாக சொல்லப்பட்டது. அதிகாரத்தின் இறுதிக்குறளாகையால், ஒரு சிந்திக்க வைக்கும் வழிமுறையாக இக்குறள் சொல்லப்பட்டதாகக் கொள்ளலாம்.

இன்றெனது குறள்:
மாற்றோரை தூற்றுவதும் குற்றமே என்றுணர்ந்து
ஆற்றுவார்க்கு தீதில்லை யே

mARROraith thURRuvadhum kuRRamE enRuNarndhu
ARRuvArkku thIdhillaiye

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...