அக்டோபர் 02, 2012

குறளின் குரல் - 173


2nd October, 2012

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
                  (குறள் 164: அழுக்காறாமை அதிகாரம்)

Transliteration:
azhukkARRin allavai seyyAr izhukkARRin
Edham paduppAkku aRindhu

azhukkARRin  - Being jealous
allavai – deeds that are not virtuous
seyyAr – won’t do (learned and knowledgeable)
izhukkARRin –  by indulging in self to be envious
Edham – the offense committed
paduppAkku – and the pain and bad repercussions of it
aRindhu –knowing and understanding that will befall on self .

In the chapter on “Right conduct” (Discipline), sixth verse goes very similar to this verse, in fact, the second line being exactly the same - “ozhukkaththin olgAr uravOr – izhukkaththin Edham paDuppAkkaRindhu”. Altering the verse slightly to apply in the context of “not being envious”, vaLLuvar has emphasized a specific facet of “right conduct” through this verse.

ParimElazhagar, in his commentary, interpretes the word “uravOr” as those who are, “strong willed”, which indicates that for right conduct, will power is an important ingredient. MaNakkuDavar, another commentator interprets the same word as “learned”, which also makes sense. After all, “strong will” and “being learned” are the two sides of the same coin. One can not be without the other for the currency to hold. Being devoid of jealous is a discipline also. What was said as the general discipline in that chapter has been said in the context of a specific discipline of “not being envious”, the only difference between these two verses.

vaLLuvar seems to have utilized the re-use methodology of today’s programming world – not only in this verse, but in many verses through out his work, which we will see in due course.

The verse says: “Realizing that the offense of being jealous of others is going to bring back pain to self, learned will not indulge in jealousy”

Since vaLLuvar wrote almost the same verse for two thoughts which are only narrowly different, I got a little over zealous to write two verses to reflect the same thought.

“Knowing the pains and bad repercussions of being envious -
 An offense, the learned will not engage in deeds not virtuous”

தமிழிலே:
அழுக்காற்றின் – பொறாமையின் காரணமாக
அல்லவை - அறமல்லாதவற்றைச்
செய்யார் – செய்யமாட்டார்கள் (கற்றறிந்த அறிவுடையோர்)
இழுக்காற்றின் – அத்தகைய இழிய செயலை செய்வதனால்
ஏதம் – ஏற்படுகின்ற குற்றத்தின்
படுபாக்கு – வருகின்ற துன்பம்
அறிந்து - தமக்கேயுறும் என்பதை அறிவதனால்

ஒழுக்கமுடமை அதிகாரத்தின்ஆறாவது குறளில் “ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் – இழுக்கத்தின் ஏதம் படுப்பாக் கறிந்து” என்ற கருத்தையே சிறிது மாற்றி பொறாமை கொள்ளாதிருத்தலினை வலியுறுத்த சொல்லியிருக்கிறார் வள்ளுவர்.  இரண்டாவது வரி முற்றிலுமாக அக்குறளின் வரியே!

உரவோர் என்பதற்கு பரிமேலழகர் மனவலிமை கொண்டவர் என்று பொருள் சொல்லியிருப்பது ஒழுக்கத்துக்கு மனத் திண்மைத் தேவை என்பதை அடிக்கோடிடுகிறது. மணக்குடவர் உரையில் உரவோர் என்பதற்கு அறிவுடையவர் என்று பொருள் கூறப்பட்டிருக்கிறது. மனவலிமையும் அறிவுடமையும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள்தான். பொறாமையின்றி இருப்பதும் ஒரு ஒழுக்கம்தான்! அக்குறளில் பொதுக்கருத்தாக “ஒழுக்கதினின்று” என்று சொல்லப்பட்டதை, இங்கு குறிப்பிட்ட “ஒழுக்கந்தவறிய செயலை, அதாவது பொறாமை உறுதலை” என்று சொல்லியிருப்பதுதான் வேற்றுமை.

மறுபயனாக்க வழிமுறையினை வள்ளுவரே செய்திருக்கிறார் என்று இக்குறளில் மட்டுமல்ல, மேலும் பல குறள்களின் வழியாகவும் பார்க்கலாம்.

கற்றறிந்தவர்கள், பொறாமையினால் விளையும் அறக்கேடு என்னும் குற்றத்தினால் தமக்கே துன்பம் சேரும் என்பதை உணர்ந்து, அதன் காரணமாக அறமற்ற செயல்களைச் செய்யமாட்டார் என்பது இக்குறளின் கருத்து.

ஒன்றே போல் இரு குணநலன்களை எழுதியதால், ஒரு பொருளுக்கு, இரண்டு குறள்கள் எழுதலாமே என்று தோன்றியதால், இரண்டு குறள்கள் இன்றும்.

இன்றெனது குறள்(கள்):
அறனல்ல செய்யார் அழுக்காற்றின் தீதை
புறந்தள்ளக் கற்றறிந் தார்
aRanalla seyyAr azhukkARRin thIdhai
puRanthaLLak kaRRaRindhAr

அறனில் அழுக்காற்றை ஆய்ந்தறிந்தோர் ஆற்றார்
பிறழ்தலின் பொல்லாங் கறிந்து
aRanil  azhukARRai aYndharindOr ARRAr
piRazdhalin pollAng gaRindhu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...