செப்டம்பர் 26, 2012

குறளின் குரல் - 167


26th September, 2012

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
                  (குறள் 158: பொறையுடமை அதிகாரம்)

Transliteration:
migudhiyAn mikkavai seydhAraith thAntham
thagudhiyAn venRu viDal

migudhiyAn -  Being arrogant becase of wealth or power or effrontery/impudence
mikkavai – unfair or improper deeds
seydhAraith – those who do that (improper deeds)
thAn - – a person
tham - with his
thagudhiyAn – merit (patience, tolerance or forbearance hinted here)
venRu viDal – win them over.

Winning someone with goodness and virtues is what is implied in here, not a victory for self and loss for others.  This verse is along the line of thought expressed in “innA seydhArai oRuththal” verse.

When someone errs because of the arrogance due to wealth or power, by tolerating, and being patient, we can win them over their heart and change their behavior is what is said in this verse.

When a person is publicly humiliated for the misdeeds, then the ensuing shame triggers anger which in turn triggers enemity.  Without anybody else knowing, if we make them realize the mistake, the person will feel shame and remorse in his mind and heart and there is definite possibility of course change for the same person. When our heart is remorseful for our mistakes, then we elevate ourselves to refine. That is possible only by forbearance and unconditional love for the other persons.

ThiruvAsagam, in a simple and elegant way puts it as “pizhaiththavai poRukkai ellAm periyavar kaDamai pORRi”. Manikkavsagar says with a little bit of anger, “poRuppAr anRE periyOr siRu nAygaL tham poyyinaiyE”.

“Improper deeds done due to Insolence
 Must be won by and with innate Patience”

தமிழிலே:
மிகுதியான் – செல்வம் மற்றும் அதிகாரச் செருக்கினால்
மிக்கவை – முறையற்ற செயல்களை
செய்தாரைத் - செய்தவரையும்
தான்- ஒருவர்
தம் - தம்முடைய
தகுதியான் – மதிப்புமிக்க நிலையினை வளர்த்துக் கொள்வதால் (பொறுமை உள்ளிட்ட அறநலன்களால் வருவது)
வென்று விடல் – அவர்களை செருக்கினையும் அதனாலேயே அவர்கள் மனதையும் வென்றுவிடலாம்

ஒருவருக்கு வெற்றி என்ற போது மற்றவருக்குத் தோல்வி என்ற பொருளில் கொள்ளாமல், ஒருவர் மனதை நாம் நம்முடைய நல்ல குணத்தினால், அறப்பண்புகளால் வெற்றிகொள்வது என்று கொள்ளவேண்டும்.  இக்குறள் “இன்னாசெய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்” என்ற குறளில் கருத்தை ஒட்டியதுதான்.

செல்வம் மற்றும் அதிகாரச் செருக்கினால் முறையற்ற செயல்களை ஒருவர் செய்திருந்தாலும் தம்முடைய பொறுமையென்னும் மதிக்கத்தக்கத் தகுதியால் ஒருவர் தவறுசெய்தவர்களின் மனதை வென்றுவிடலாம், அவர்கள் நல்வழி திருப்பிவிடலாம் என்பது பொருள்.

ஒருவரை தன் செயல்களுக்காக வெட்கச்செய்வது பலர் முன்னிலையில் என்றால் வெட்கியவருக்கு, அவமானமும் அதனால் ஆத்திரமும் உண்டாகி பகைதான் விளையும், வேறூன்றும். ஆனால் வேறு யாரும் அறியாமல் தவறு செய்தவர்கள் அவர்கள் மனதளவில் வெட்கும் படி செய்வதைத் தான் வள்ளுவர் கூறுகிறார்.  நம்முடைய மனது என்று நம் செய்கிற தவறுகளுக்காக வருந்துகிறதோ அன்றே நாம் உயர்கிறோம். அத்தகைய வருத்தத்தை பொறுமையும், அன்புமே உண்டாக்கும்.

திருவாசகம் மிகவும் அழகாக, எளிதாக, “பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி” என்கிறது. மேலும், “பொறுப்பார் அன்றே பெரியோர் சிறுநாய்கள் தம் பொய்யினையே.” என்று சற்று சினந்தும் சொல்லுகிறார் மாணிக்கவாசகர். எட்டுத்தொகை சங்க நூலான நற்றிணை குறிஞ்சிப்பாடலில் கந்தரத்தனார் “தீமை கண்டோர் திறத்தும்பெரியோர் தாம் அறிந்து உணர்க என்பமாதோ” என்கிறார்

இன்றெனது குறள்:
இரும்பொறையால் வென்றிடலே நன்றாம் தகாது
செருக்கினால் செய்தாரை யும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...