மே 02, 2012

குறளின் குரல் - 24


May 2nd, 2012

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
                                             (குறள் 12: வான்சிறப்பு அதிகாரம்)
Transliteration:
thuppArkku thuppAya thuppAkki thuppArkkuth
thuppAya thUm mazhai

thuppArkku – For people to eat food
thupp(u) Aya – Good in nature (nourishment, taste etc.)
thupp(u) Akki – helping in the growth of vegetation on this earth to create food of all living beings on this earth
thuppArkkuth – for people that eat
thupp(u) AyathUm -  itself becoming a food (water that we drink is due to rains)
mazhai – rains.

In this interesting verse of vaLLuvar, there is a clever usage of word “thuppu” (துப்பு), in all the words except the last one, stemming from the root word “thuppu” meaning food. This is one of the most popular kuRaL among thamizh public speakers, mostly for it rhythmic and fascinating construction. From the effectiveness point of view, it does not score much IMHO. The words “thuppArkku” and “thuppAya” have been used twice, with the same meaning also.

Could he have used a more common known “uN” (உண்) root to construct the poem to make it readily understandable? Reading through the period-poems of Sangam, this word does not seem to have been used much either. A poet’s responsibility is to convey the thought more than being smart in the construction of poems, especially if it was intended for common folks. Anyways, I am not second guessing vaLLuvar’s intent or thought process when he wrote what he wrote.

This verse speaks about the glory of rains. Rains make the vegetation on this earth possible that gives us grains, vegetables, and fruits and the even the air we breath in an indirect way. Without rains how can plants grow and breathe CO2 and give us oxygen. If we have to treat oxygen as some sort of food for our body, then rains are the reasons for that too.  Also, water that is created out rains, itself becomes a food for every living being on this earth.

“Rains make the food good for everyone to eat
 While it self becoming a food and life’s treat.

தமிழிலே:

துப்பார்க்குத் – உணவு உண்பவர்களுக்கு
துப்பாய  - நல்ல
துப்பாக்கித் – உணவுப் பொருள்களை விளைவிக்கும் காரணப் பொருளாகி
துப்பார்க்குத் - உண்பவர்களுக்கு
துப்பாய தூஉம் – தானே உண்ணீர் உணவாக இருப்பதுவும்
மழை – மழையே!

வான்சிறப்பு அதிகாரத்தின் அடுத்து வரும் இக்குறளில், “துப்பு” என்கிற சொல் உணவு, உண்பவர், நல்ல என்ற பொருள்களில் அமைக்கபட்டிருக்கிறது. பேச்சு, மற்றும் விவாத மேடைகளில் மிகவும் கையாளப்படுகிற குறள்.

மிகவும் கவிநயத்தோடு அமைக்கப்பட்டிருந்தாலும், வெகுவாகப் பயன்பாட்டிலில்லாத சொல்லாம் “துப்பு” என்பதை ஏன் வள்ளுவர் சொல்லாடல் செய்தார் என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது. சமகால இலக்கியங்களிலோ, முன்னாலும், பின்னாலும் வந்த இலக்கியங்களிலோ, இச்சொல் கையாளப்பட்டதாகத் தெரியவில்லை. அறிந்தவர்கள் இருந்தால் தெரிந்து கொள்ளலாம்.

வெறும் கவிதை நயத்துக்காக மட்டும் அமைக்கப்பட்டிருந்தால், பொதுமக்களின் மறையெனக் கொண்டாடப்படும் ஒரு நூலிலே, வள்ளுவர் இச்சொல்லைக்கொண்டு புனைந்திருப்பாரா என்கிற ஐயப்பாடு எழுகிறது. இதைக் கூட வள்ளுவரின் வாய்மொழியை இரண்டாம் ஊகம் செய்வதற்காகச் சொல்லவில்லை.  ஒரு அறிதலுக்காகத்தான் கேட்கிறேன்.

குறளின் பொருள் இதுதான். உண்பவர்களுக்கு (துப்பார்க்கு – துப்பு ஆர் – உணவு உண்பவர்), நல்ல (துப்பு ஆய)  உணவுபொருள்கள் விளைவிப்பதும் (துப்பாக்கி – துப்பு ஆக்கி ), உண்பவர்களுக்கு (துப்பார்க்கு), உண்ணுகின்ற, நீராகவும் (துப்பாய தூஉம் – உணவாக இருப்பதுவும்) இருப்பது மழையே என்கிறார்.

இவ்வுலகில் நாம் உண்ணும் உணவுப்பொருள்கள் எல்லாவற்றுக்குமே நீர் தேவையானது. வள்ளுவர், பொதுவாக மண்ணில் விளைகின்ற பயிர்களை, காய், கனி, தானியங்களைத் தரும் தாவரங்களை, செடிகளைக், கொடிகளை, மரங்களை குறித்தாலும், புலால் உண்பவர்களுக்கும் இது பொருந்துவதாகிறது. உலகுயிர் எல்லாவற்றுக்குமே நீரின்றி வாழ்வில்லை. ஏன் நாமுண்ணும் காற்றும் கூட, தாவரங்கள் சுவாசித்து வெளியேவிடும் பிராணவாயுவால்தான்.

இன்றெனது குறள்:
உண்பார் உயிர்க்கு உணவாக்கி உண்பார்க்கு
உண்ணீர் உணவும் மழை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...