மே 01, 2012

குறளின் குரல் - 23


May 1, 2012

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
                                                    (குறள் 11: வான்சிறப்பு அதிகாரம்)

Transiliteration:
vAn ninRu ulagam vazhangi varudhalAl
than amizhdham endRuNar pAtRu.

vAn ninRu – the sky that gives us the rains without failing the seasons
ulagam – this world
vazhangi varudhalAl -  gives as a gift (without failing)
than  - it is (the sky)
amizhdham – nectar that gives the boon to live for ever (because of rains the world lives and continues on, else it will dry and perish eventually)
endRuNar – To realize
 pAtRu. -  worthy of (realizing)

“World continues life with the unfailing rains from the sky
Beware without that ambrosia the same would dry and die”

In this self-centric, self-serving world, people that think of the help done by someone without expecting anything in return are a rare breed, but vaLLuvar lived by what he believed in and preached to the world. As we will see later in a different chapter of “nandRi aRidhal”, he truly lived by what he wrote, “ennandRi kondrArkkum uyvunDAm uyvillai sei nandRi kondRa magarkkU”. To dedicate the whole chapter to praise the sky that rains for us to live in this World, a thought, which has not crossed any other poet in any other culture, shows him in great light.

Now he moves from the invisible to visible, abstract unseen to concrete seen, from the Godhead to his construed kind act or gift for the world. The whole chapter of “vAn siRappu” (வான் சிறப்பு) is gravitating on the the gift of rain from the clouds, the importance of water for the survival this world. As we see the world moving towards commoditizing the nature’s gifts one by one, we need to start thinking of how humanity can survive by depeleting the resources one by one at this speed.. The dooms day predictions, if not in 2012, will become true one day not far in the future, if the collective will of humanity does not move towards a self-replenishing, balanced eco-system revival. Today, it is water, and tomorrow it may be the air we breath!

In this verse, vaLLuvar states that we need to realize that the world is continuing its life without perishing because the ambrosial rains, skies pour during the right seasons, without fail. Since the world is immortalized and the life on earth is sustained because of rains it is likened to ambrosia, nectar that makes a person live forever.

தமிழிலே:
வான்நின்று – வான் தன்னிலிருந்து பருவம் தவறாமல் பெய்யும் மழையை
உலகம்  - இவ்வுலகிற்கு
வழங்கி வருதலால் – கொடையாகக் கொடுப்பதால்
தான் – அதுவே
அமிழ்தம்  - அமுதம் போல  சாகா வரந்தருவது. (மழை பெய்யாமல் போனால், உலகம் அழிந்துபடும் என்பதால், உலகத்திற்கும், உலகத்துயிர்களின் சுழற்சிக்கும் ஆதாரவமுதே மழையாம்)
என்றுணரற் – என்று தெளிவதற்கு
பாற்று - உரியது

சுயமையம் மற்றும் சுயநலம் சார்ந்த, உலகத்தில், பிறருக்காக வாழும் பெருந்தகையாளர் மிகவும் குறைவு, அரிது.  வள்ளுவரோ, தன் வாய்மொழியின் படி வாழ்ந்து காட்டியவர் என்பதற்கு, இவ்வதிகாரமே சான்று. “என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு” என்று எழுதியதுமட்டுமல்லாமல், அதன்படி வாழ்ந்து காட்டியவராக இருத்தல் வேண்டும்.

நன்றி என்பது நம்மைச் சார்ந்த சமூகத்தினருக்கு மட்டுமல்ல. நம்மிடமிருந்து நன்றியை எதிர்பார்த்து செய்பவர்களுக்கு மட்டுமல்ல. வலது கை அளித்தது இடது கைக்கு தெரியாமல் செய்யும் வள்ளன்மை மிக்கவர்களுக்கும், அவர்களே நன்றியை எதிர்பாராவிட்டாலும், தெரிவிப்பதுதான். அதுவே உயரிய பண்புமாம்.

வானம் நமக்கு வற்றாமல், பருவந்தவறாமல் வழங்கும் கொடையே மழை. அதற்காக அந்த வானம் நம்மிடம் நன்றியை எதிர்ப்பார்க்கிறதா? ஆனாலும் அந்த வானத்துக்கும் நம் நன்றியறிதலைக் காட்டும் மனிதப் பண்பின் சிகரம்தான் இந்த அதிகாரம். மழை, அதனால் பெருகும் நீர், அதனால் பெருகும் வளமென்று, நீண்டுகொண்டே செல்லும் கொடைச் சங்கிலியை நெகிழ்ந்து நினைந்து ஒரு அதிகாரம் செய்திருக்கிறார் வள்ளுவர்.

ஆனால் இன்றோ இயற்கை அளித்தக் கொடைகளை வர்த்தகமயமாக்கி, மேலும் நாம் வாழும் சூழலை நரகமாக்கிக் கொண்டிருக்கிறோம். நேற்று நிலத்துக்கு விலை கொடுத்தோம், இன்று நீருக்கு விலை கொடுக்கிறோம். நாளை காற்றுக்கா? தெரியவில்லை!

இக்குறளில், வானம் பொழிவதால் உலகம் உயிர்ப்புடன், இன்றும் சாகா வரம் வேண்டி அமுதம் உண்டதைப் போலிருக்கிறது என்று கூறப்படுகிறது. உலகம் உய்ய பெய்யும் மழையே உலகுக்கு அமுதம் எனலாம். உலகத்தின் உயிர்ப்பிலேதான் அழியாத மனித, மிருக தாவர இனங்களும் இருக்கின்றன. எனவே இந்த தொடரும், சாகா நிலைக்கும் காரணமாகிய அமுதம் வானிருந்து பெய்யும் மழைதான்.

சம்பந்தர் தேவாரத்தில் “பெய்தவன் பெருமழை உலகம் உய்யச்செய்தவன்” என்று கூறப்பட்டுளதையும் கவனிக்கவேண்டும் (நன்றி: கி.வா.ஜ-வின் ஆய்வு பதிப்பு)

“அமிழ்துதிகழ் கருவிய கணமழை” என்று வரும் பதிற்றுப்பத்து பாடலும் மழையினை அமிழ்தென கூறியதும் கவனிக்கத்தக்கது. (நன்றி: கி.வா.ஜ-வின் ஆய்வு பதிப்பு)

இன்றெனது குறள்:
வான்வழங்கும் வள்ளன்மை தானமிழ்தாம் பெய்மழையால்
வாழுலகம் என்றறிவோம் நாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...