ஏப்ரல் 25, 2012

குறளின் குரல் - 19

April 25, 2012

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
                                                     (குறள் 7: கடவுள் வாழ்த்து அதிகாரம்)

Transilitreration:

tanakkuvamai illAdAn thALsErndhArk kallAl
manakkavalai mAtRal aRidhu

tanakkuvamai – One who is beyond the bounds of compare, match
illAdAn – who does not have ( match, comparison)
thAL – the feet
sErndhArk kallAl- those have not surrendered (at His feet)
manakkavalai – the worry or burden in the mind
mAtRal – to change or rid of
aRidhu – difficult or impossible (to get rid of)

Unless one reaches the feet of the Godhead that is beyond compare or match, it is difficult to get rid of the worries that arise in the mind

When the choice is to be with a person that is beyond compare, one tends to develop and attain the mental state of the exalted personality. When that maturity sets in a mind, the person would have truly crossed the state of being worried or devoid of it.

The pain of sorrow and the bliss of joy are alike for the enlightened souls. When we surrender to the enlightened being, the mind truly liberates itself not to see any pain anymore arising out of any worries. It is all pure bliss, bliss and bliss!

Worries of mind are hard to change unless
Resolve is there to follow the footsteps of peerless

தனக்குவமை – தனக்கு இணையென அடையாளம் அல்லது இத்தன்மையினன் என்று சொல்லக்கூடிய
இல்லாதான் – இல்லாதவன் (உவமைகளுக்கும், இணைகளுக்கும் அப்பாற்பட்டவன்)
தாள்அவனுடை அடி
சேர்ந்தார்க் கல்லால்அடைந்தவர்களைத் தவிர மற்றவருக்கு
மனக்கவலைமனத்தின்கண் ஏற்படும் கவலைகளும், அதனால் துன்பங்களும்
மாற்றல் – மாற்றுதல், விடுபடுதல் (கவலைகள், துன்பங்களிலிருந்து)
அரிதுமிகவும் கடினம், இயலாதவொன்று.

இவன் இன்ன தன்மையினன் என்று உவமைகளுக்கும் உதாரணங்களுக்கும் அப்பாற்பட்ட உத்தமப் பொருளாம் இறைகுணம் உடையவரை சேர்ந்தால், உள்ளத்தின்கண் ஏற்படும் கவலைகளும், அதனால் ஏற்படக்கூடிய மனத்துன்பங்களும், ஒருவரை அணுகாது.  மற்றவர்களுக்கு அது கடினம் என்று சொல்லப்படுகிறது.

சேர்ந்திருக்கும் பொருளைப் பற்றியே ஒன்றின் குணமும் அமைகிறது. உவமைகளுக்கு அப்பாற்பட்ட உத்தம குணத்தைச் சேர நினைக்கும் போதே, மனம் ஒரு பக்குவ நிலையை அடைந்திருக்கும். அடைந்தபின்னர் அந்த பக்குவநிலை மேலும் உயர்ந்து, மனம் கவலை, இன்மை என்னும் நிலைகளைக் கடந்திருக்கும். அப்போது எப்படி கவலைகள்  அதனால துன்பங்களும் உண்டாகும்? மற்றவர்களுக்கு இன்னும் கவலை என்ற ஒரு நிலையைப்பற்றிய நினைவு இருப்பதால் அதனால் உண்டாகும் துன்பங்களும் நிச்சயமாக உணரப்படும்.

திருநாவுக்கரசரின் திருப்புள்ளிருக்குவேளூர் திருக்குறுந்த்தொகைப் பாடல் ஒன்று இதே கருத்தை ஒட்டி, இவ்வாறு செல்கிறது.

தன்னுறுவை ஒருவர்க்கறிவொணா
மின்னுருவனை மேனி வெண்ணீற்றனைப்
பொன்னுருவனைப் புள்ளிருக்கு வேளூர்
என்ன வல்லவர்க் கில்லை இடர்களே

தன்னுறுவை ஒருவர்க்கறிவொணா என்று சொல்வதே அவனுக்கு இணையாக ஒருவனுமில்லை என்ற கருத்தில் அமைகிறது. அதேபோல் அந்த புள்ளிருக்கு வேளூர் உறை சிவனை அடைந்தவர்க்கு இடர்கள் இல்லை என்று சொல்லும் போதே, மற்றவர்க்கு அது அரிது என்பதும் பெறப்படுகிறது. இந்த உதாரணம் கூட சிவனை ஏத்திச் சொல்வதற்காக அல்ல. வள்ளுவன் கருத்தை வழிமொழிந்த கவிகள் சமகாலத்திலும், பிற்காலத்திலும் நிறைய இருந்திருக்கின்றனர், ஆனால் அவர்கள் சார்ந்த சமயம் அல்லது சித்தாந்தத்தை ஒட்டி.

இன்றெனது குறள்
ஈடில்லான் நல்லடிகள் சேர்ந்தார்க்கு என்றுமனக்
கேடில்லை, மற்றோர்க் கரிது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...