ஏப்ரல் 24, 2012

குறளின் குரல் - 18

April 24, 2012



பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ்  வார்
                                                     (குறள் 6: கடவுள் வாழ்த்து அதிகாரம்)
Transiliteration:
poRivAyil aindhavittAn poithIr ozhukka
neRi nindRAr nIduvazh vAr

poRi vAyil aindhu – five sensory parts of our body that are conduits for all that we see, speak, hear, smell and touch (eye, mouth, ears, nose and the body)
avittAn – one who has conquered them (the five senses) to shut the lusts arise out of them.
poithIr ozhukka neRi – path of rightful conduct devoid of falsehood
nindRAr -  stood by (the path of rightful conduct)
nIdu vazhvAr – will live long on this earth (again not the physical body, but their lasting glory)

Thirugnana Sambandar in his dEvAram (தேவாரம்) echoes a similar thought.
 “pulan aindhum poRi kalangi neRi mayangi arivazhindhdhittu”
(புலனைந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவழிந்திட்டு )

Giving in to the desires of our senses invariably drags us away from the path of rightful conduct.  It takes a monumental effort to get unused to anything that even one of our senses gets used to.  Then imagine our plight dragged in five directions by the five senses. Even those who claim that they have absolute control over things they indulge in, know it very well, that there is a point of no return for anything they indulge more – when it becomes an addiction.

The word “aviththAn” (அவித்தான்) has been used in the context of destroying the urge to use the senses for the lustful acts. When the lusts control the senses, we stray from the path of right conduct and our intellect is clouded.  

So, the common commentary gives the following meaning: “When we follow the path of the Godhead that has successfully controled the senses and follow the path of rightful conduct in ourlives, our glory will stay even beyond of our life time.”

However, the word “avithAn” could be interpreted in a way, (a) one who can control and quell the (the lusts born out of five senses) or (b) who did control them in the past. Bothways, this can’t be said of Godhead, as it implies, “ He” had a problem to startwith and  that “He” controlled. The word “avidhA” also means “ “agnjAnam” (அக்ஞானம் – ஞானமில்லாதது – மெய்ஞானத்துக்கு எதிரானது) – lack of proper, righteous knowledge.

Now if we read it back, it gives the meaning, ‘One can live the life of glory even after passing away from the world, when  the person stays the course of righteous, virtuous path devoid of the lies, deceptively perceived  as good conduct guided by five senses born out of lack of knowledge”

“poRivAyil aindhAl, avdidhhai poi, thIr ozhukka neRi” (பொறிவாயில் ஐந்தால் அவித்தை பொய் – தீர் ஒழுக்க நெறி!). There is a room to think that the words could have changed or altered for the meter over the 2000 years of its existence. 



Life of glory for who stride the righteous path to follow
Of that conquered the five senses that make us shallow

தமிழிலே:

பொறிவாயில் ஐந்து – கண், வாய், செவி, நாசி, மெய் என்னும் ஐம்பொறிகள் (மனித இயக்கத்தின் இன்றியமையாத காரணிகள்)
அவித்தான் – அழித்தவன், அறுத்தவன் (ஐம்பொறிகளால் உண்டாகும் தவறான இச்சைகளை அறுத்தவன் என்று கொள்ளப்படவேண்டிய பொருள்)
பொய்தீர் ஒழுக்க நெறி - பொய்யான, மாயையான (ஐம்பொருள்களின் பயன்பாடுகளைப் பற்றி) கருத்துக்கள் நீங்கி, உண்மையான ஒழுக்கமான வாழ்நெறி
நின்றார் – ஒழுகி நிற்றல் – வாழ்க்கை கோட்பாடக் கொண்டு வாழுதல்
நீடுவாழ்வார் – உலகில் புகழோங்கி வாழ்வார்.

திருஞானசம்பந்தர் பின்வரும் தேவாரப் பண்ணிலே, இதே போன்ற கருத்தை முன்வைத்து,

புலனைந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவழிந்திட்டு”  

என்கிறார்.  ஐம்புலன்களும் தங்கள் பயனான இயக்கத்தினின்றும் தடுமாறி, அவற்றுக்குரிய நெறி மறந்து, அதனால் அறிவழிந்த்திட்டு என்பார்..
புலன்களின் இச்சைகள் பெரும்பாலும் நம்மை நல்லொழுக்க வழிகளிலிருந்த்து விலக்குவதாகவே இருக்கின்றன. 

ஒரு புலனின் இச்சைக்கே மிக்க முயற்சி செய்துதான் வெளியே வரவேண்டியிருக்கிறது. ஐம்புலன்களும் ஐந்து வேறு திசைகளில் நம்மை இழுக்கும் போது, அதனால் வரும் அலைவுகளை நினைக்கவே துன்பம். நானனெல்லாவற்றிலும் ஈடுபட்டாலும், ஒரு மட்டோடு இருக்கமுடியும் என்று வாய் வைராக்கியம் பேசுபவர்கள் ஏராளம். அவர்களையும் அறியாமல் இச்சை வெள்ளத்திலே இழுபட்டுச் சென்று வெளிவரமுடியாமல் தத்தளிப்பதைத்தான் பார்க்கமுடியும் பெரும்பாலும்.

“அவித்தான்” என்னும் சொல் “அழித்தான்” அல்லது “அறுத்தான்” என்ற பொருளாக பல உரையாசிரியர்கள் கூறியுள்ளனர். பல உரையாசிரியர்களும் கூறியுள்ள பொருள் இதுதான்:

“ஐம்புலன்களினால் விளையும் அவா அறுத்து, பொய்மையில்லாத ஒழுக்க நெறியின் (வாய்மையென்று சொல்லாதது, பின்னாலே சொல்லப்படும், பொய்மையும் வாய்மெய் எனப்படும் புரைதீர்ந்த விடத்து என்றுச் சொல்லப்போவதாலோ?) படி வாழ்பவர், உலகம் உள்ளளவும் அவர் புகழ் நிலைபெற வாழ்வார்”

ஆனால், “அவித்தான்” என்ற சொல்லாட்சி நெருடலாக இருக்கிறது. அதை பொருள் கொள்ளும் போது, (1) கடந்த காலத்திலேயே அவற்றை வென்றவன் என்றும் (2) அல்லது ஏதோ அவை இருந்து, இப்போது இல்லாதது போல் என்றும் – நினைக்கவேண்டியிருக்கிறது. உயர்ந்த இறைவனுக்கு இவை இருந்ததாகவும், அவற்றை அறுக்க வேண்டியிருந்ததாகவும் நினைப்பதே தவறு. அவித்தை என்பது அஞ்ஞானம், மெய்ஞானத்துக்கு எதிரானது, பொய்யானது.

ஆனால் இந்த குறள் இப்படி இருந்திருக்குமானால்:
“பொறிவாய் ஐந்தால் அவித்தை பொய் தீர், ஒழுக்க
நெறி நின்றார் நீடுவாழ்வார்”

புலனைந்தினால் ஏற்படும் அஞ்ஞானமகிய பொய் தீர்ந்து, ஒழுக்கமான நெறிகளின் படி வாழ்பவர், இவ்வுலகில் நீண்ட புகழோடு வாழ்வார் – என்கிற பொருள் பொருந்தி வருகிறது. 

ஆனால் அப்போது கடவுள் வாழ்த்து அதிகாரத்திற்கு பொருந்துமா என்ற கேள்வியெழலாம். கடவுள் என்பவன், நம்முள்ளத்திலேயே இருப்பவன். அகம்நோக்கிச் செல்பவருக்கெல்லாம் அகப்படும் மெய்ப்பொருள். கடவுள் வாழ்த்தில் சொல்லப்படும் ஒவ்வொரு குறளும் படிப்படியாக அப்படிப்பட்ட குணநலங்களைச் சொல்லி, ஒவ்வொருவரையும் உள்ளிருக்கும் கடவுளை உணரச் செய்வதாகவே கொள்ளலாம்.

இன்றெனது குறள்:


ஐம்புலன வாவறுத்தார் மெய்யொழுக்கம் பற்றினார்க்கு
வையமுள் ளாங்கும் புகழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...