ஏப்ரல் 21, 2012

குறளின் குரல் - 16



April 21, 2012

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
                                     (குறள் 4: கடவுள் வாழ்த்து அதிகாரம்)




Transliteration: 
                  vENDudal vENDAmai ilAnaDi sErndArkku
                  yAnDum idumbai ila.

vendudal – Desire
vENDAmai – Dislike
ilAnaDi – One who does not have (the desire or dislike)
sErndArkku – who seeks and be close to such person (devoid of desire and dislike)
yANDum – always
iDumbai – disappointments or ensuing things bringing unhappiness…

Ethics of living has been repeatedly discussed in different cultures in different ways. Most often emphasized value for human evolvement is, an “unbiased approach” to looking at things and be devoid of strong preferences or dislikes of and for things, people, ideas, and dogma.

God is like water, colorless or tasteless. The same water with additives for taste of different kinds, ore depending on the vessel's property that it is contained in, can assume color, taste etc.

Only when a person desires or despises something strongly, ensuing disappointments and unhappiness sets in.  Only when somebody is able to get to the state of desire free mind, there will not be any source of unhappiness. There is a well known saying in tamizh “ Asai aRumingaL, Asai aRumingaL, IsanOdAyinum Asai aRumingaL”(ஆசை அறுமின்கள், ஆசை அறுமின்கள், ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்) .This advocates one side of being devoid of desire even with the God, but does not preach that you should not have the devotion at all. It only talks about the extreme state here.

Once again, subtle meaning is that, if you seek out the desire-free (not desire-less or more) souls on this earth, in their company, you will learn how to be like them and so be without the feeling of deception, disillusionment, discontentment, disappointments etc.

“Seek the company of the soul free of desire
 And be without the consequences that are dire”

இன்றெனது குறள்:
விழைதலும், இன்றியும் அற்றார் துணையில்
நுழையும் இடுக்கணுண் டோ?

தமிழிலே:




வேண்டுதல் – உருவப் பொருள்களின் மீதான பற்றும், விருப்பமும், ஒரு சார்பான நிலைப்பாடும்
வேண்டாமை – உருவப்பொருள்களின் மீதான பற்றின்மை, வெறுப்பு, மறு சார்பான நிலைப்பாடும்
இலானடி – இல்லாத நடுவு நிலையாளர் – இது உலகியலோர்க்கு இயலாததாகையால், மறைபொருளாம் இறைக்கு ஏற்றிச் சொல்லப்பட்டது.
சேர்ந்தார்க்கு – அவரின் அணுக்கத்தை அடைந்தவர்க்கு
யாண்டும் – எப்பொழுதும்
இடும்பை இல – துன்பந்தரும் பொருளேதும் இல்லை (அவர்கள், சமநோக்கு நிலையையும், எல்லாவற்றையும் காலக்கோட்டின் குறுகிய சாளரத்தினை (ஜன்னலினை), கடந்து செல்லும் தற்காலிகம் என்று உணர்ந்த நிலையினையும் அடைந்தவர்கள்)

சகுண நிர்குணனான இறைவன் இது வேண்டும், இது வேண்டாம் என்கிற விருப்பு-வெறுப்பினைக் கடந்தவன்.  அவனின் தாளினை சேர்ந்தவர்களுக்கு எப்போதும் துன்பம் கிடையாது.

விருப்பு வெறுப்பைக் கடந்தவனாகிய இறைவனின் சரண் அடைபவர்களுக்கு, அவ்விறைவனின் குணநலனாகிய  வேண்டுதலும், வேண்டாமையும் இல்லாத தன்மையும் சேர்ந்துவிடுவதால், அவர்களுக்கு யாதொரு துன்பமும் எப்போதும் சேராது. 



தமிழ் ஞானிகள் சொல்லியிருப்பதுபோல், “ஆசையறுமின்கள், ஆசையறுமின்கள், ஈசனோடாயினும் ஆசையறுமின்கள்”. எந்த வித எல்லை கடந்த மனவுணர்ச்சிகளுக்கும், ஆசைகளுக்கும், விருப்பங்களுக்கும் இடம் கொடாமல், அதே சமயம், அவற்றை நிராகரிக்காமலும், தாமரை  இலை நீரைப் போல், பாதரசத்தைப் போல் ஒட்டாமல் இருப்பவரது அணுக்கம், அந்த இறைபொருளின் துணையில், நமக்கு வரும் துன்பம் எதுவுமில்லை.

வேணுமென்கிற ஆசையும். அதனால் இன்பம் என்கிற எண்ணமும், கிடைக்காததனால் விளையும் ஏமாற்றமும், கோபமும் வேண்டாமென்கிற வெறுப்பும் , துன்பம் அளிப்பவையாதலால். இவை விலக்கிவிட்டால் துன்பமில்லா பெருவாழ்வே கிட்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...