ஏப்ரல் 19, 2012

குறளின் குரல் - 15


மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ்வார்
                                     (குறள் 3: கடவுள் வாழ்த்து அதிகாரம்)
  
malar – the flower ( metaphor of the flower of the mind)
misai – on it
EginAn – who is seated (on the  flower of the mind – the realized mind is likened to blossomed flower)
mANadi – the respectable feet (or simply close – “aDi” (அடி) because the learner as to be humble towards the teacher)
seRndAr – who reached (the respectable feet of the realized)
nilamisai – On this earth
nIdu vAzhavAr – will live long (their glory actually, even after they passed away)

The 3rd kural of the 1st chapter of Kural continues on the theme of praising the glory of omniscient. 

Those who approach the omniscient seated on the flower (of the mind ) and sit at the feet ( mark of humility and possibly to learn the higher knowledge ), will live on this earth with lasting glory.

If we have to assume that the one who is seated on the flower as Brahma, we may extend this to a metaphor of “the state of brahma – the self awareness that comes out of deep self inquiry. When the self is realized, such persons, even after their mortal coil has left the world, will stay alive with their glory for a long time.

It is indeed confusing to understand the reference to “malar misai EginAn” (மலர்மிசை ஏகினான்), even with all the existing commentaries. Did he refer to Brahma or Buddha who are depicted to be seated on the lotus in mythology?  Or was it just a metaphor? After all commentators can use their own imagination and try to give an exalted meaning to the verse, completely different from what the poet had intended.

Here is another way to interpret.

In yogic tradition, the attainment raising kundalini from “mUlAdhAra” to “sahasrAkArA” ( the  seat of 1000 lotus petals) is likened to the inner awakening of self.  Did he refer to such yogi’s who would lead us to a life of lasting glory, if we approached them and learn from them?  If we have to think of a reference to a GOD, then the assumption of the previous kural is rendered baseless.  It is difficult to think that he simply used “malar misai” for rhyming with the “nila misai” in second line.

“Be at the respected feet of Him seated on flower
 And the life will be that of glory and greatness forever.”

இன்றெனது குறள்:

பூவிருந்தார் புண்ணியத்தாள் போந்திருந்தால் பீடுடைய
தாவிருக்கும் பூமியின்கண் வாழ்வு

தமிழிலே :

நினைப்பவர் மனமலர் பீடத்தில் அமர்ந்தவனின் அடியினை அடைந்தவர்கள், இவ்வுலகில் உடல் நீங்கினும், நீங்கா புகழோடு வாழ்வார்.

மலர்மிசை ஏகினவனை பிரமனாகக் கொண்டால், பிரமன் பதம் என்னும் பிரமநிலை அடைவதை உருவகமாகக் குறிப்பதாகக் கொள்ளலாம். அப்படிப்பட்ட பிரமநிலை, அதாவது தன்னை உணர்ந்தவரது புகழ், இந்நிலம் உள்ளளவும் நிலைத்திருக்கும் என்பதே பொருள்.

வள்ளுவர், இந்த குறளிலும் கடவுள் என்று குறியாது, “மலர்மிசை ஏகினான்” என்று சொன்னது, சிந்திக்கக்கூடியது. மலரின்கண் அமர்ந்தோன் என்றால் மனமலரின்கண் அமர்ந்தவன் எனக்கொள்வதா அல்லது பதுமத்தின் மேலமர்ந்த பிரமனை அல்லது புத்தனெனக் கொள்வதா எனக் குழம்பலாம். அல்லது உருவகமாகக் கொண்டால், யோகசாத்திரதில் சொல்லியிருப்பது போல, குண்டலியை எழுப்பி, ஆறு சக்கரங்களைக் கடந்து சஹஸ்ராகாரம் எனப்படக்கூடிய ஆயிரமிதழ்கள் கொண்ட தாமரையின்கண் காணும் ஞான நிலையைக் குறிப்பது எனக்கொள்ளலாமா?

அப்படிப்பட்ட ஞானச்செறிவினை அடைந்தவர்களது மாட்சிமை பொருந்திய அணுக்கத்தை அடைந்தால், பூமியில் நீடுழி காலம் புகழோடு வாழலாம் (பூதவுடல் அழிந்தாலும்) என்பதை கூறியிருப்பதாக கொள்ளலாம்.

மலர்மிசை – மலரின் கண் (மன மலரின் கண் என்கிற உருவகம்)
ஏகினான் – வீற்றிருந்தவன் (ஞானம் நாம் அடைவதற்கு முன், ஞானத்தைத் தருபவன் நம் மனதில் இருக்கவேண்டும்)
மாணடி – மாட்சிமை மிக்க அடிகளை ( கற்றுக்கொள்பவர்க்கு வேண்டிய பணிவினை உணர்த்தவே அடி என்றது.)
சேர்ந்தார் – அடைந்தவர்கள்
நிலமிசை – இப்பூமியின் கண்
நீடு வாழ்வார் – நீண்ட புகழோடு வாழ்வார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...