ஏப்ரல் 17, 2012

குறளின் குரல் - 13

17th April, 2012

Having touched upon some of the verses randomly, in the last few days, now I feel, I want to go about doing this in an orderly fashion. The objective of the effort is to really understand this monumental work by one single person, during the time he lived and understand his motives to write what he wrote.

While there is no doubt in my mind, thiruvaLLuvar was one of the greatest individual thinker of all times, as he himself advocates, no one is beyond scrutiny. The fundamental belief is that everything that we think, say, write is based on and limited to how much we have learned, and what our cumulative biases are, who we have influenced out thought process.

 If our learning during our life time can be really exhaustive and all inclusive, and we have the ability to look at everything with a sense of balance, then what we utter can become a complete knowledge for the humanity. Given the limitations of our exposure, during our lifetimes, people of humility would definitely accept that is impossible.

It is very evident by the breadth of the subjects that vaLLuvar has touched, that he was keenly observant of lives of people, widely travelled, experienced, and an avid learner. As he himself claims, “thottanaithUrum maNarkkENi mAndharkkup kaRRanaithUrm ariVu” (தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குப் பட்டனைத்தூறும் அறிவு”.

His thought process was very different from the learned peers of his times. He wanted to write on varied subjects pertinent to life of various members of a society, in short and choicest words, which would become a reference book or a book of codes for anyone that read that.

Most of his thoughts are centered on goodness, but the proper thing to do for the society of his times. A lot of them are questionable in today’s context of how we have evolved and changed for good or worse. At best, we can understand his anguish for what he wanted in the society of his times as he probably saw all that he said were not in practice for a large part of the society.

Nobody takes an effort like this to preach to the society which is at his pinnacle of virtuous existence.

Without analyzing vaLLuvar further, I would like to start with the 1st chapter of “kadavuL vAzhththu” (கடவுள் வாழ்த்து). For the benefit wider readership, I will continue to write in English with word meanings and for my personal taste and likes, I will also write the same content in tamizh (தமிழ்) as I feel more at home.

I request the readers to critically read and give your thoughts and please feel free to point out any misunderstanding on my part. I promise you, I am committed to life-long learning and I am asking you to be partner in that journey as long as my journey is there..! 
---------------------

"agara mudhala ezhuththellAm Adhi
 bagavan mudhatRe ulagu"
                                      (kural 1: kadavuL vAzhthu chapter)

agara mudhala - the first alphabet  'a'
ezhuththellAm : for all alphabets in any languages 
Adhi bhagavan:  The God that has been there since the beginning of universe
mudhatRe - keeping the prime force for the existence and functioning
ulagu - the world we live.

'A' is the first letter of all letters of all languages of the world and so is the God head that has been since the beginning of the time.

Just like letter "A" is born out of nowhere, yet the very first sound of any living creatures that can open the mouth and make a sound, the God is also self-born from nowhere.

It is to be noted that the sacred mantrA, praNavA or "Aum" is obtained by the combination of letters "A". "U" and "M", also has the first letters "A". As much as we could infer that praNava is an all pervading sound filling the universe, the letter "A" also universal.

Letter A is the first letter of any language. Some commentators have said that vaLLuvar has referred to "adhi" and "bhagavan" as the God mother and father, (as two figures, even going to the extent of calling them as his parents) which is definitely not the case. When you compare qualitatively, only two equal objects can be compared. Unlike any other poet anywhere in the world, the thought of looking at the first and the prime letter as equal to God head is also very new and unique to vaLLuvar.

We can surmise that vaLLuvar must have observed other languages of the times and must have known them well to state this with such authority. As an interesting deviation,  bhAratiyAr, a genius of a poet of recent times, knew several languages (tamizh, sanskrit, english, french to name a few). When he writes about tamizh being the sweetest of languages known to him, he clearly implies that "among the languages that he knows", not "all the languages" - which clearly shows his humility while exhibiting his pride. 

valluvAr also has taken a religio-neutral stance in his very first verse. I am sure several religions have always existed, even during his times. Instead of pointing to a specific God, or his personal choice, or belief, he has cleverly used "Adhi bhagavan" to simply say the God that was there since the beginning of time, and cleverly conveys, whatever be the chosen religious path, the word would mean an all accepting fact. This has also clearly avoided the fights that this subscribes to a specific religious belief.

‘Among alphabets of languages “A” is the foremost
 As the God since universal beginning is for the world’

-----------------------------------------------

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன்முதற்றே உலகு 
                   (குறள் 1: கடவுள் வாழ்த்து அதிகாரம்)


அகர  முதல -  முதல் எழுத்தாயிருக்கிற ‘அ’கரம்
எழுத்தெல்லாம் -  எல்லா மொழிகளில் உள்ள எழுத்துக்கூட்டங்களுக்கும்            (முதலாயிருக்கிற எழுத்து)
ஆதி பகவன் – ஆதியிலிருந்து இருக்கும் இறைப்பொருள்
முதற்றே – அவ்விறைப் பொருளையே முதலாகக் கொண்டு இயங்குகிற
உலகு - உலகம்.

‘அ’ எனும் எழுத்து உலக மொழி எழுத்துக் கூட்டங்களுக்கெல்லாம் முதலெழுத்தாய் இருப்பது போல, உலகத்தின் முதலாய் இருப்பது, ஆதியிலிருந்து இருக்கும் இறைப் பொருள்.

எப்படி ‘அ’ என்பது சுயம்புவோ, இறைப்பொருளும் அப்படிப்பட்டதே என்பது பெறப்பட்ட பொருள். எங்கும் நிறைந்த ப்ரணவத்தின் பிரிவான அ+உ+ம (ஓம்) என்பதிலும், ‘அ’ முதலாய் இருப்பது கவனிக்கத்தக்கது.

ப்ரணவம் ஒலி உருவாய் எங்கும் நிறைந்தது போல் ‘அ’ காரம் எல்லாம் மொழிகளிலும் ஒரு முழுமுதலாக,எங்கும் நிறைந்ததாக இருப்பதும் பெறப்பட்ட பொருள்.

சில உரையாசிரியர்கள் கூறுவது போல, ஆதி, பகவன் என்று இருவரைப் பற்றி வள்ளுவர் நிச்சயமாகப் பேசவில்லை.  எழுத்துக்கூட்டங்களுக்கு முதல் ஓரெழுத்தாயிருக்கையில், உலகுக்கும் ஒன்றாய கடவுளைத்தான் ஒப்பு நோக்கியிருப்பார் வள்ளுவர்.  வேறு எந்த கவியும் சிந்திக்காத ஒன்றை வள்ளுவர் சிந்தித்ததாலேயே அவரை உலகம் இன்றும் சிந்திக்கிறது, சிறப்புடன் பேசுகிறது.

இக்குறளின் ஆணித்தரத்திலேயே வள்ளுவர், அன்று வழங்கிவந்த மொழிகளில் சிலவற்றையாவது அறிந்திருக்க வேண்டுமென்பதும், என்பதை நுணுக்கமாக, ஆனால், வெளிப்படையாக இல்லாமல் வெளிப்படுத்தியுள்ளார்.  இதே போன்று பன்மொழிப் புலவர் பாரதியார் கூறியதையும் பார்ப்போம்.

” யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல இனிதாவது எங்கும் காணோம்” என்று பாரதி கூறியது, பெருமையினால் கூறுவது போல இருந்தாலும், அதிலும் ஒரு பணிவுகலந்த தன்னடக்கம் இருப்பதைக் காணலாம். “எல்லா மொழிகளிலும்” என்று கூறாமல், “யாமறிந்த” என்று கூறியதில் ஒரு நியாயமான கர்வம் தெரிகிறது. இது கூட பாரதியார் மொழி பிரியராக இருந்ததைத் தான் காட்டுகிறதே தவிர மொழி வெறியராக அல்ல.

பல்வேறு மதங்கள் எப்போதுமே உலகில் இருந்திருக்கின்றன. இன்று அல்லல் படும் “மதச் சார்பின்மையை” கூட மிக அழகாக, முதல் குறளிலேயே கூறியவர் வள்ளுவர். முதல் கடவுளை, “இவன்”, “சிவன்” என்று கூறாமலும், தன்னுடைய சொந்த தெய்வத்தினை, மதநம்பிக்கை அல்லது இன்மை இவற்றைச் சொல்லாமலும், எல்லா மதத்துக்கும் பொதுவாக “ஆதி பகவன்” என்றதால், தான் தோன்றியான முதல்வன் என்று கூறி, அது எல்லாமதத்தவருக்கும் ஏற்றதாகச் செய்துவிட்டார். மிகமுக்கியமாக, இதனால், மதக் கட்சிகளும், சண்டைகளும் குறளுக்குள் வாராது தடுத்துவிட்டார்.  

இன்றெனது குறள்:

அகரம் மொழிக்கு முதற்போல் கடல்சூழ்
செகத்திற் கிறையே முதல்

(வள்ளுவரை மேலும் உள்ளுவோம்)









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...