ஏப்ரல் 15, 2012

குறளின் குரல் - 12




April 15, 2012

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
                                           kuraL: 22: நீத்தார் பெருமை அதிகாரம்

thurandAr – renounced people/ascetics
perumai – glory/greatness
thuNai kUrin – If an attempt is made to measure (the meaning of the word is measure)
vaiyaththu – on this earth
iRandArai – people that have died (in this earth.. Of course they must have been born to die
                      so the state of being born is implied.) 
eNNikondaTru: - is not possible to count (the people that have died)

Sometimes, I wonder if vaLLuvar used certain words in kuraL just for rhyming reason While reading the the verse of today, from nIththAr perumai (நீத்தார் பெருமை), from the pAyiraviyal (பாயிரவியல்) of aRaththuppAl, (அறத்துப்பால்), the usage of a word “irAndArai”  (இறந்தாரை) seems to be so, just to rhyme with “thuRandAR” (துறந்தார்),

This chapter talks about the glory and greatness of people that have renounced desires of all sorts and have become people of highest virtue, mostly understood to be ascetics.  The purpose of this kuraL also seems to be somewhat vague. In the first place, “thuRandAr” (renounced people)  are not self-consumed to think about their greatness nor do they care if others are thinking about their greatness.  The greatness of such people is never quantitative and does not have to be measured for any reason. It is just enough to understand their greatness and try to follow their ideals to the possible extent.

This verse says that, attempting to describe the glory and greatness of the people of renounced path is like trying to count the number of people that have died on this earth, implying it is impossible to count. Reading through several commentaries,  simply it is not possible to understand why vaLLuvar used “ iRandar” (இறந்தார்) and not “piraNdAr” (பிறந்தார்) or simply “irundAr” (இருந்தார்).  Some commentaries just add on their own, without any valid justification, that this word implies all the people that were born and died (பிறந்திறந்தவர் எண்ணிக்கை)

Hmm.. ! Sill it is not clear why this was the word of choice!, instead of some auspicious or neutral word! May be from an ascetic point of view being born is a burden for human beings, and death is some sort of liberation and hence an auspicious word! But that does not add up also. As a person who has etched the code of living for different sections of the society, he could not have taken that kind of a stance to equate death as the true liberation too.

I am waiting for somebody to give me, if there is a different interpretation that I am missing here!

Anyways, in short this is what it is!

Immeasurable is the greatness of ascetics, as it is
Impossible to count the lives that have passed the earth

தமிழிலே:

துறந்தார் – உலகியல் பற்றுகளைத் துறந்து அறநெறி வாழ்பவர்
பெருமை – அவர்களுடைய பெருமைமிக்கச் செயல்கள்
துணைக்கூறின் – எண்ணிக்கையச் சொல்லவேண்டுமென்றால்
வையத்து – இவ்வுலகத்தில்
இறந்தாரை – இதுவரைப் பிறந்து இறந்தவர்களின் எண்ணிக்கையை
எண்ணிக்கொண்டற்று. – எண்ணுதற்குச் சமம்

சில நேரங்களில் வள்ளுவரின் சில குறள்களைப் படிக்கும் போது, வெறும் சொல்லழகுக்காக சில சொற்களை சேர்த்திருப்பாரோ என தோன்றுகிறது. பலரும் வள்ளுவரின் சொல் சிக்கனத்தை, பொருந்தச் சொல்லும் அழகைப் பாராட்டியிருந்தாலும், எல்லாவற்றையும் நுணுக்கமாக ஆராய்ந்து சொல்லிருப்பார்களா என்பது சந்தேகமே!

இந்த குறளின் பயன்பாடு பற்றிய ஐயம் எழாமலில்லை. துறந்தாரின் பெருமைகளை பிறர் கூறுவது நடக்கக்கூடிய ஒன்றுதான். அவர்கள் அளவிறந்த பெருமைகளைக் கொண்டிருப்பதாக எழுதியிருப்பது வெறும் உயர்வுநவிற்சி அணியாக மட்டும் இருக்கலாமோ? துறந்தவர்களோ அவர்கள் பெருமையை எண்ணுவதில்லை, பிறர் அறியச் சொல்வதில்லை! அதை அளக்கவேண்டிய காரணம் என்ன. வெறும் வியந்து நிற்பதற்கு மட்டும்தானா? அவர்களின் பெருமையை உணர்வதைவிட அவர்களின் பாதையை அடியொற்றி நடந்தாலே போதுமானது.

இந்த குறளின் பொருள் இதுதான். துறந்து அறவழியிலிருப்போருடைய பெருமைகளை கூறுவதென்பது உலகில் உள்ள இறந்தவர்களையெல்லாம எண்ணுதற்குச் சமம். பொதுவாக நல்ல செய்திகளைப் பற்றிச் சொல்லும் போது, கூடவே அமங்கலமான செய்திகளைச் சொல்வதை தவிர்ப்பார்கள் வழக்கத்திலே. எண்ணிக்கை என்று வரும்போது, இருந்தாரின் எண்ணிக்கையே எண்ணுதற்குக் கடினம். “இருந்தார்” என்று சொல்லியிருக்கலாமே, “இறந்தார்” என்றதற்கு பதிலாய். வெறும் சொல்லெதுக்கைக்கு மட்டுமா “இறந்தார்” என்று சொல்லியிருப்பார்?.

சில உரையாசிரியர்கள் கூறுவதுபோல, பிறப்பது நிச்சயமில்லை, ஆனால் பிறந்தவர்கள் இறப்பது நிச்சயமென்பதால், பிறந்து இறந்தவர்களைக் கொள்ளவேண்டும் என்று கூறியிருப்பது சமாதனத்துக்கு வேண்டுமானால் உதவலாம். வேண்டுமானால், துறந்தார்க்கு, இறப்பும் பிறப்பும் ஒன்று என்பதால், பிறப்பின் விருப்பைவிட, இறப்பை வெறுப்பதையும் துறந்தவர்கள் என்பதை வலியுறுத்துவதாகக் கொள்ளலாம்!

இன்றெனது குறள்:
நீத்தார்தம் நற்பெருமை மட்டறிதல் நீளுலகில்
பூத்தவையை எண்ணினாற் போல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...