ஏப்ரல் 15, 2009

சமீபத்தில் நான் ரசித்தவை

எனக்கு மிகவும் பிடித்த ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர்கள் 70களின் பிரபலமாயிருந்த பஞ்சாப் ஷாம்சௌராஸி கரானாவைச் சார்ந்த உஸ்தாத் சலாமத்-நஸாகத்கான்சகோதரர்கள். என்னுடை 12 வயதிலிருந்து அவர்கள் இசையைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். சலாமத்கானுக்கு மிகவும் கனமான நினைத்தைப் பேசக்கூடிய சாரீர வசதி. விளம்பம், மற்றும் துரிதகால சங்கதிகளில் சிறிது கூட பிசிறு தட்டாமல், துல்லியமான அதிரடி ரவை, பிருகாக்களுடன் கூடிய சங்கீதம். நஸாகத், சன்னமான, ஆனால் அதிவேக சங்கதிகளை உதிர்க்கும் சாரீர வசதி.. மூன்று ஸ்தாயிகளிலும் சிறிதுகூட பிரயாசைபடாமல் சஞ்சரிக்கும் லாவகம்.. கிடுகிடுவென்று உச்சஸ்வரங்களை எட்டுவதும், பங்கீ-ஜம்ப் என்பதுபோல் அதல பாதாளத்துக்கு குதிப்பதும் இவருடைய பிரத்தியேக பிரயோகங்கள். சத்தியமாக எனக்குத் தெரிந்து எந்த இசைக்கலைஞர்களும் இதுவரை சாதிக்காதவை. உண்மையிலேயே பிரமிப்பூட்டும் சங்கீத ஸாம்ராட்டுகள்தான். 80களில் நஸாகத்தும் (இளையவர்), 90களின் இறுதியில் சலாமத்தும் மறைந்த பிறகும், அவர்களது இசை இன்னும் அவர்களது ரசிகர்களின் இதயங்களில் வாழ்கிறது.
ஈ.எம்.ஐ ரெகார்டுகளில் 70களின் வெளிவந்த அவர்களது ஆபோகி கானடா, காவதி, மிஸ்ரகமாஜ், மார்வா, பூர்யாதனஸ்ரீ போன்ற ராகங்கள் இன்னும் காதுகளிலேயே ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
யூ-ட்யூப் வந்த பிறகு, பலருடைய சொந்த சேகரிப்பிலே இருந்த பல அரிய ஒலி நாடாக்களும், வீடியோக்களும், சக ரசிகர்களை சென்றடைய வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் நான் மூழ்கி எடுத்த முத்துக்கள் இதோ…!
நீங்களும் கேட்டு மகிழலாம்..!
http://www.youtube.com/watch?v=2cuVbGC94QM - சலாமத்-நஸாகத் - பாகேஸ்ரீ
http://www.youtube.com/watch?v=N2cecpeCTbA&feature=related
- சலாமத்கான் – பதினோரு வயது வயதில் பாடியது
http://www.youtube.com/watch?v=aTj451U7pYI&feature=related – உஸ்தாத் சலாமத், நூர்ஜஹானுடன் – மொஸீகர் படத்தில் பாடியது
http://www.youtube.com/watch?v=A1z_xs_gC-8&feature=related - உஸ்தாத் சலாமத், நூர்ஜஹானுடன் – மொஸீகர் படத்தில் பாடியது - ஜூகல்பந்தி
http://www.youtube.com/watch?v=KGz18qTELCg&feature=related
http://www.youtube.com/watch?v=b2L67CMnOy8&feature=related - ப்ரத்யேக ரசிகர்கள் -1
http://www.youtube.com/watch?v=5NwiIqxnj-s&feature=related - ப்ரத்யேக ரசிகர்கள் -2

http://www.youtube.com/watch?v=yFdfH1Bq8Wo&feature=related - சலாமத்-நஸாகத்
http://www.youtube.com/watch?v=c7GErB3UTj0&feature=related
http://www.youtube.com/watch?v=Vq1ePCUFIfY&feature=related
http://www.youtube.com/watch?v=Lj14mFPg89E&feature=PlayList&p=D35C48610B138B89&playnext=1&playnext_from=PL&index=12
http://www.youtube.com/watch?v=n58YSW3I-PY&feature=related
http://www.youtube.com/watch?v=j_aKD2DODgg&feature=related
http://www.youtube.com/watch?v=wxW3wFGfQEc&feature=related

எனக்கு பிடித்த உஸ்தாத் அமீர்கான், உஸ்தாத் ரஷீத்கான், கிஷோரி அமோங்கர், ஷோபா குர்த்து, ராஜன் – சாஜன் சஹோதர்களைப் பற்றியும் அவர்களின் சங்கீத சிகரங்களைப் பற்றியும் பின்பு எழுதுகிறேன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...