ஏப்ரல் 26, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் - 17

आलोके मुखपङ्कजे दधती सौधाकरीं चातुरीं
चूडालंक्रियमाणपङ्कजवनीवैरागमप्रक्रिया
मुग्धस्मेरमुखी घन्सतनतटीमूर्च्छालमध्याञ्चिता
काञ्चीसीमनि कामिनी विजयते काचिज्जगन्मोहिनी १७॥

ஆலோகே முக² பங்கஜே ³தீ ஸௌதாகரீம் சாதுரீம்
சூடா³லம்க்ரியமாண பங்கஜவனீ வைராக³ம ப்ரக்ரியா
முக்³ஸ்மேரமுகீ² ன்ஸதனதடீ மூர்ச்சா²ல மத்யாஞ்சிதா
காஞ்சீ ஸீமனி காமினீ விஜயதே காசிஜ் ஜக³ன்மோஹினீ 17

பார்வையிலும், தாமரைப்போன்ற முகத்திலும்  சந்திரனழகை தரித்தவள், கூந்தலுக்கு ஒப்பனையாக, தாமரைக் காட்டுக்கு எதிரியாம் நிலவை சிரத்தில் அணியாகக் கொண்டவளும் அழகு புன்னகை முகமுள்ளவளும், கனத்த தனங்களுள்ளவளும், மிகவும் மெல்லிய இடையுடையவளும், உலகை மயக்கும்  ஒருவள் காஞ்சியின் எல்லையில் விளங்குகிறாள்.

பார்வை யமுதிலும், பன்ம முகத்திலும், பால்மதிப்பூண்,
கார்கூந்தற் கொப்பமாய் கஞ்ச வனத்துப்ப கைநிலவை
தார்சிரத் தேபூண், சவியாசத் தாள்சீர் தனமுடைத்தாள்,
பார்மாலாள் மெல்லரைப் பாவையள் காஞ்சியில் பாவுவளே!

பார்வையமுது-அமுதைப்போல் குளிர் பார்வை; பன்மம்-தாமரை; பால்மதி-வெண்மதி; ஒப்பம்-அலங்காரம்; கஞ்சம்-தாமரை; தார்-மலர்; சவி-அழகு; ஆசம்-நகை,முகம்; சீர்-கனம்; மால்-ஆசைகொள்ளும், மயங்கும்; அரை-இடை; பாவுதல்-பரவுதல்;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


பார்வை அமுதிலும், பன்ம முகத்திலும், பால்மதிப்பூண், கார்கூந்தற்கு ஒப்பமாய் கஞ்ச வனத்துப்பகை நிலவை, தார் சிரத்தே பூண், சவி ஆசத்தாள், சீர்தனமுடைத்தாள், பார் மாலாள் மெல் அரைப் பாவையள் காஞ்சியில் பாவுவளே!

ஏப்ரல் 25, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் - 16

तन्वानं निजकेलिसौधसरणिं नैसर्गिकीणां गिरां
केदारं कविमल्लसूक्तिलहरीसस्यश्रियां शाश्वतम्
अंहोवञ्चनचुञ्चु किंचन भजे काञ्चीपुरीमण्डनं
पर्यायच्छवि पाकशासनमणेः पौष्पेषवं पौरुषम् १६॥

தன்வானம் நிஜகேலி ஸௌதஸரணிம் நைஸர்கி³கீணாம் கி³ராம்
கேதா³ரம் கவிமல்லஸூக்தி லஹரீ ஸஸ்ய ஶ்ரியாம் ஶாஶ்வதம்
அம்ஹோ வஞ்சன சுஞ்சு கிம்ச ஜே காஞ்சீபுரீமண்ட³னம்
பர்யாயச்ச²வி பாகஶாஸனமணே: பௌஷ்பேஷவம் பௌருஷம் 16

சுயம்புவாம் மறைவாக்குகளை தன் விளையாடலுக்காய் மேன்மாடமாய் கொண்டதும், உயர் கவிஞர்களின், கவிதைப் பயிருக்கு உற்ற வயலானதும், பாவங்களைப் வஞ்சிப்பதில் தேர்ந்ததும் இந்திர நீலமணிக்கு நிகரான மேனி ஒளியுள்ளதும், மலர்பாணனான, மன்மதனுடைய பெருமை போன்றதுமான காஞ்சியின் அணியாக உள்ள ஒரு பொருளைச் சரணமடைகின்றேன்.

மறைவாக் குகளைதம் மாலீலைக் காயுயர் மாடமாய்கொள்,
திறக்கவி ஞர்கள்தம் தேன்கவிக் கூழ்க்கேற்றச் சேடையாகும்,
அறக்கடை நீக்கும், அரிமணி மேனிகொள், அங்கசனின்
பிறங்கலாம் காஞ்சியின் பேரணித் தாள்யான் பிடித்தனனே!

கூழ்-பயிர்; சேடை-நீர் கட்டப்பெற்ற வயல்; அறக்கடை-பாவம்; அரிமணி-இந்திரமணி; அங்கசன்-இந்திரன்; பிறங்கல்-பெருமை; பேரணி- பெருமைவாய்ந்த ஒப்பனை/அலங்காரம்

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


மறை வாக்குகளை தம் மாலீலைக்காய் உயர்மாடமாய் கொள், திறக் கவிஞர்கள்தம் தேன்கவிக் கூழ்க்கேற்றச் சேடையாகும், அறக்கடை நீக்கும், அரிமணி மேனிகொள், அங்கசனின் பிறங்கலாம் காஞ்சியின் பேர் அணித்தாள் யான் பிடித்தனனே!

ஏப்ரல் 24, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் - 15

खण्डं चान्द्रमसं वतंसमनिशं काञ्चीपुरे खेलनं
कालायश्छवितस्करीं तनुरुचिं कर्णजपे लोचने
तारुण्योष्मनखम्पचं स्तनभरं जङ्घास्पृशं कुन्तलं
भाग्यं देशिकसंचितं मम कदा सम्पादयेदम्बिके १५॥

²ண்ட³ம் சாந்த்³ரமஸம் வதம்ஸ மனிஶம் காஞ்சீபுரே கே²லனம்
காலாயஶ்ச²விதஸ்கரீம் தனுருசிம் கர்ண ஜபே லோசனே
தாருண்யோஷ்ம ²ம்பசம் ஸ்தனபரம் ஜங்காஸ்ப்ருʼஶம் குந்தலம்
பாக்³யம் தே³ஶிக ஸம்சிதம் மம கதா³ ஸம்பாத³யேத³ம்பி³கே 15

தாயே! சிரத்தில் தரித்த சந்திரப் பிறையும், காஞ்சியில் ஆட்டும், காரிரும்பின் அழகைப் பரிக்கும் மேனியும், காதோதும் கண்களும், இளமை தகிப்பால் மிளிரும் தனங்களும், முழங்கால் வரை நீள் கூந்தலும் உள்ள இறை நிலையை, தேசிகன் அருளாளல் நானடைந்த பாக்கியம் என்று எனதாக்கும்?

கலையோன் சிரத்தையும், காஞ்சியில் கேளியும், காரிரும்பைக்
குலைத்திடு மேனியின் கோலமும், காதோதி, கொஞ்சுகண்கள்
நிலையும், எழிற்சூடு நேர்மார்பும் கால்வரை நீள்முடிகொள்
நிலையை, குருவருள் நேர்ந்தென்றோ தாயே நிறையெனக்கே?

கலையோன்-பிறைச்சந்திரன்; கேளி-விளையாட்டும்; காரிரும்பு-கருமையான இரும்பு; குலை-பழிக்கும்; எழில்-அழகு

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):

கலையோன் சிரத்தையும், காஞ்சியில் கேளியும், காரிரும்பைக் குலைத்திடு மேனியின் கோலமும், காதோதி கொஞ்சுகண்கள் நிலையும், எழிற்சூடு நேர்மார்பும் கால்வரை நீள்முடிகொள் நிலையை, குருவருள் நேர்ந்து என்றோ தாயே நிறையெனக்கே?


காதோதி- காது ஓதி, அதாவது காதுகள்வரை நீண்டு கண்கள் இரகசியம் சொல்லுதல்.

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...