அக்டோபர் 23, 2014

குறளின் குரல் - 917

92: ( Wanton women- வரைவில் மகளிர் )

[One of the oldest of professions has been the service of sexual favors to men for money or exchange of other favors. This chapter is about what Tamil euphemism as called such women, for centuries as “common woman”, or in more prevalently term “prostitutes”. Even the word “varaivil” is euphemism for being not confined to the moral code set for woman. Though general feministic ideas always raise a flag in defiance, asking why should it be different and demand a fair and equal moral code for both sexes, they forget that it is nature’s design to create two different beings to for world to create, recreate, procreate and flourish; though nature has not set what the boundaries of duties and codes for each sex, through evolution the world has come to its practices of what we see. Though it has been cursed for centuries and moralists have spoken about derisively, to eradicate the profession, none has really worked. The egos between men and the many wars that have been fought acorss the breadth and width of world geography, many families have been left distraught and alone without men to take care of. The economic needs to feed self or children has pushed them to the corners of the society to sell whatever they have, again to the exploiting men that have made it as a service. It is sad that vaLLuvar dubbed as the “world poet” had not really researched the societal reasons and causes that have led to the profession]

23rd Oct 2014

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்.
                        (குறள் 911: வரைவில் மகளிர் அதிகாரம்)

அன்பின் விழையார் - அன்பின் காரணமாக ஒருவரை விரும்பாது
பொருள் விழையும் - அவரிடமுள்ள பணத்துக்காக அவரை விரும்புகின்ற
ஆய்தொடியார் - அழகிய பெண்களிர்
இன்சொல் - பேசுகின்ற இனிமையான சொற்கள்
இழுக்குத் தரும் - ஒருவருக்கு மாசு தருவனவாக அமையும்

பெண்வழிச் சேரல் அதிகாரத்தில் பெண்களைச் சார்ந்து வாழ்வதையும், வாழ்பவர்களையும் பற்றி இடித்துரைத்தே எல்லா குறள்களும்  எழுதப்பட்டன. ஆனால் அது சமூகத்தில் சிறிய அங்கம் என்பதை, அதைப்பற்றி பல இலக்கிய மேற்கோள்கள் இல்லாமையே சுட்டுகிறது. இவ்வதிகாரத்தைப் பற்றி பல இலக்கிய மேற்கோள்கள் உள்ளன என்பதாலேயே, வரைவில் மகளிர் என்பாருடைய தொன்மையும் நமக்குப் புலனாகிறது.

அன்பின் காரணமாக ஒருவரை விரும்பாமல், ஒருவருடைய பொருளுக்காக அவரை விரும்புகிற அழகான பெண்கள் கூறுகிற இனிமையான மொழிகள், பிடித்தமானவையாக இருப்பினும், அவருக்கு மாசு தருவதாகவே அமையும். கையில் காசு தீர்ந்தவுடன் விலகுகிற பெண்களால், பொருள் நட்டமும், மன வருத்தமும் வருவது மட்டுமல்லாது, சமூகத்தில் இழிவும் வருவது உறுதி.

புறநானூற்று வரிகள், “தீதில் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப் பல்லிருங் கூந்தல் மகளிர் ஒல்லா முயக்கிடைக் குழைகஎன் தாரே” என்கிறது வரைவில் மகளிரை.

ஏறக்குறைய சமகால நீதி நூலான நாலடியுரும் பலவாறு இவர்களது இயல்பைக் கூறுகிறது. அது, “அவரன்பும் வாரி அறவே அறும்” என்றும், “அவரன்பும் கையற்ற போதே அறும்” என்றும், “கொடுப்பது ஒன்றில்லாரைக் கொய் தளிரன்னார் விடுப்பர் தங்கையால் தொழுது” என்றும் கூறுகிறது.

Transliteration:

Anbin vizhaiyAr poruLvizhaiyum AithodiyAr
Insol izhukkuth tharum

Anbin vizhaiyAr – Not desiring man because of love
poruLvizhaiyum – but desiring what wealth and gifts he brings to the table
AithodiyAr -  the beautiful women
Insol – the sweet speak they do
izhukkuth tharum – only will bring shame to men.

Previous chapter discussed leaning on ladies and leading life by their design in detail, slighting men of such demeanor; but that is seen only in a small portion of the society. It is very evident by the lack of many literary quotes to support that.  At the same time, the number of literary quotes for this chapter indicate the antiquity of the age old profession of selling services for economic favors, though by the ill designs of the socitey or evolutionary nature of the societies across the globe. Lust for sexual pleasure is the basic instinct of humans; and exploitation when there is an opportunity is also the basic immorality of the sociieties; both are irradicable in someways.

Women of sweet words that do not desire someone for love, but for what they bring as gifts and wealth, will bring only shame to somebody and be a blemish to them.  Because of women that leave when wealth is depleted, loss of prosperity, loss of self-worth, and shame before the society ensue, says this verse.

Many literary examples from puranAnURu, nAlaDiyAr, kamba rAmAyaNam, chIvaga chintAmaNi have expressed the same thought in sarcastic and direct hitting ways.

“Women that desire not because of love, but because of wealth
 will bring only shameful blemish to men that seek them in stealth”


இன்றெனது குறள்:

காசுக்காய் காதலிக்கும் அன்பிலாப் பெண்டிர்சொல்
மாசுதரும் புன்சொல்லா கும்

kAsukkAi kAdalikkum anbilAp peNDrisol
mAsutharum punsollA gum

அக்டோபர் 22, 2014

குறளின் குரல் - 916


22nd Oct 2014

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.
                        (குறள் 910: பெண்வழிச்சேறல் அதிகாரம்)

எண் சேர்ந்த - வினைபால் சென்ற
நெஞ்சத்து - உள்ளத்துச் சிந்தனையும்
இடன் - அதனால் வரும் விளைபயனாம் செல்வமும் (அல்லது) திடன் என்று கொண்டால் நெஞ்சுரம் என்று கொள்ளலாம்.
உடையார்க்கு - கொண்டவர்க்கு
எஞ்ஞான்றும் - எப்போதும்
பெண்சேர்ந்தாம்  - பெண்ணைச் சேர்ந்து அதிலேயே ஒழுகும்
பேதைமை - மயக்கம்
இல் - இல்லை.

வினையும் அதை ஆற்றலுமென்று இரண்டிலுமே தம் முழு சிந்தனையையும் கொண்டவராகி, அதன் விளைபயனாக வரும் செல்வமும் கொண்டவர்க்கு ஒரு பெண்ணைச் சேர்ந்து முயங்கிக் கிடப்பதாய மயக்கம் இல்லை என்கிறது இக்குறள்.

பரிமேலழகர் “இடன்” என்பதை “பொருள்” என்று பொருள் செய்து, அதற்கு “இடனின்றி இரந்தோர்க்கு” மற்றும் “இடனில் பருவத்தும்” என்ற வரிகளை மேற்கோளாகக் காட்டிகிறார். “நெஞ்சத் திடன்”, என்பதை உள்ளத்து உரமும் என்றும் கொள்ளலாம். “எண்” என்பதும், “எண்ணம்” என்பதைக் குறிப்பதால் அது வினைக்கண் முனைந்த எண்ணம் என்று கொள்வதும் பொருந்துகிறது.

Transliteration:

eNsErnda nenjath thiDanuDaiyArkku enjAnRum
peNsErndAm pEdamai il

eN sErnda – Focused on work and the deeds there in
nenjathth(u) – mind set on that work
iDan – the resulting fruit of that labor (or) if the word is taken as “thiDan” it would mean the resolve
uDaiyArkku – one that has (wealth or resolve)
enjAnRum - always
peNsErndAm – to be lost in a woman’s company
pEdamai – such foolishness
il – is not there.

For persons being focused in the work at hand and its execution with mind set on both, with the resulting fruits of such focused effort, the foolishness of being lost in the womans’ company is not there. Other way around is also true. Those who are lost in the company of a woman can never be focused on work or be successful also.

The word “iDan” has been interpreted as “wealth” by Parimelazhagar and he cites couple of reference lines from other poetry to justify that. If the word has been interpreted as “thiDan”, it would mean the resolve that goes well with the previous work of “heart”. The word “eN” does not mean number, but, “thinking” in this verse.

“One that is focused on work, with resolve to accomplish and gain
 shall not be foolish to be lost for ever in the company of a woman”


இன்றெனது குறள்(கள்):

சிந்தனையும் நெஞ்சுரமும் கொண்டார்க்கு இல்லைபெண்
வந்திக்கும் பேதைமையென் றும்

chindanAiyum nenjuramum koNDArkku illaipeN
vandikkum pEthaimaiyen Rum

வினைக்கண் நெஞ்சும் விளைபயனும் கொண்டார்
மனைமேல் மயக்கம்கொள் ளார்

vinaikkaN nenjum viLapayanum koNDAr
manaimEl mayakkamkoL LAr

அக்டோபர் 21, 2014

குறளின் குரல் - 915

21st Oct 2014

அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்.
                        (குறள் 909: பெண்வழிச்சேறல் அதிகாரம்)

அறவினையும் - அறச்செயல்களும்
ஆன்ற பொருளும் - வினையாற்றுவதால் கிடைக்கும் பொருள் வளமும்
பிறவினையும் - மற்றவினைகளை செய்வதும்
பெண் ஏவல்  - பெண்கள் ஏவும் செயல்களிலேயே தம்மை ஈடுபடுத்திக்கொண்டு
செய்வார்கண் - அவற்றைமட்டுமே செய்வதில் முனைப்பாக இருப்பவரிடம்
இல் - இராது.

இவ்வதிகாரத்தைப் படிக்கும்போது, பெண்களைவிட, பெண் மோகத்தில் உழலும் ஆடவர்களைத்தான் இடித்துரைக்கிறது மீண்டும் மீண்டும். சிலவற்றைப் பற்றி மீண்டும் மீண்டும் சொல்வது, உள்ளத்தில் உரைப்பதற்காக என்று கொள்ளலாம்.

குறள் சொல்லும் கருத்து இதுதான்: ஒரு பெண்ணின் வயப்பட்டு அவளிடும் ஏவல்களை மட்டும் செய்வோர்க்கு, அறச்செயல்களும், மற்ற செயல்களும், தவிர தேவையான பொருள் வளமும் கிட்டாது.

வினையாற்றினால் விளைச்சல் எப்போதுமே உண்டு. ஆனால் இக்குறள் சொல்வது என்ன? பெண்ணேவலையே பேறாகக் கொண்டோர்க்கு, அவர் செய்கையில், அறச்செயல்களின் பயனும் இல்லை என்கிறார் முதலில். இரண்டாவதாக  அவருடைய செயல்களால், பொருளீட்டமும் கிடையாது. தவிர பொதுவாக, வினையாற்றுபவர்களுக்கு அவர்கள் நன்றாக அவ்வினையாற்றலால் பிறவினைகளை ஆற்றக்கூடிய கிடைக்கும் வாய்ப்புகளும் கிடைக்கும். பெண்ணேவல் செய்பவர்களுக்கு  அதுவும் கிடைக்காது. இதைத்தான் இக்குறள் சொல்லவருகிறது.

Transliteration:

aRavinayum AnRa poruLum piRavinaiyum
peNEval seivArkaN il

aRavinayum – to do virtuous deeds
AnRa poruLum – the wealth needed to effectively do them
piRavinaiyum – and to do other deeds
peNEval – servitude of women
seivArkaN - those who are indulging in only
il – is not in them (to do the above)

While reading this chapter it is very obvious that it condemns the men that are in perpetual desire of women again and again. Perhaps it is done to stress and etch the thought in men, cautioning them not to indulge spend all their time in the pursuit of women.

A person who is in control of a woman, doing what ever she wills or orders, can not have the use of virtuous deeds, or the weath earned; they will not even have other deeds to do.

What could this verse possibly mean? Most efforts yield fruitful results; but serving a woman and spending the life in her servitude, shall not have the fruits of virtuous deeds, in the first place. Secondly, there is no wealth earned through the work either. When somebody does something so well, usually they get the opportunity for more work; but in this case, even that is not likely to be there.

“Those who are forever in womens’ total servitude
 shall accomplish none, nor have wealth required”


இன்றெனது குறள்:

எச்செயல் செய்தற்கும் ஏற்றபொருள் இல்லைபெண்
இச்சிக்கும் ஏவலேசெய் வார்க்கு

echeyal seythaRkum ERRaporuL illaipeN
ichchikkum EvalEsei vArkku

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...