ஜூலை 02, 2014

குறளின் குரல் - 804

2nd Jul 2014

உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.
                        (குறள் 798: நட்பாராய்தல் அதிகாரம்)

உள்ளற்க - நினையாதீர்
உள்ளம் - ஊக்கத்தைக்
சிறுகுவ - குறைக்கும் செயல்களை
கொள்ளற்க - கொள்ளாதீர்
அல்லற்கண் - துன்பத்தே
ஆற்று அறுப்பார் - எதிர்கொள்ளும், நீக்கும் வழிகளைச் சொல்லாது, கைவிடுகின்றவர்
நட்பு - நட்பினை

எவ்வாறு ஊக்கத்தினைக் குறைத்தோ, கெடுத்தோ செய்கின்ற செயல்களை ஒருவர் நினைத்துப் பார்க்கக்கூடாதோ, அதேபோன்று, துன்பம் வந்தபோது விலக்குகின்ற அல்லது எதிர்கொள்ளும் வழிகளைச் சொல்லி ஆற்றுப்படுத்தாது கைவிடுகின்றவர் நட்பையும் கைகொள்ளாது கைவிடுதல் வேண்டும் என்கிறது இக்குறள்.

இரண்டு கருத்துக்களுமே அவற்றின் வழிநின்று செய்யவேண்டுவனவற்றையே சொன்னாலும், எப்படி ஊக்கமும் நட்பும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவாயின என்பது வள்ளுவருக்கே வெளிச்சம். பொருத்தமில்லா உவமையாகவே தோன்றுகிறது. ஊக்கத்தைக் குறைத்து ஆக்கத்தைக் கெடுக்கும் செயல்களைச் செய்தால் துன்பம் வருவது இயற்கை. ஒருவேள அவ்வாறு செய்யாதீர் என்று எச்சரித்துவிட்டு, பிறகு அவ்வாறு செய்து துன்பம் வரும்போது உதவாத நட்பை கைகழுவுவதுபற்றிச் சொன்னாரோ?

Transliteration:

uLLRka uLLam siRuguva koLLaRka
allaRkaN ARRaruppAr naTpu

uLLRka – never think of (deeds)
uLLam – enthusiasm
siRuguva - diminishing
koLLaRka – never have
allaRkaN – when grief sets in
ARR(u) aruppAr – that which does not help to remove or at least face with courage
naTpu – such friendship

Like how a person should not even think of deeds that diminish ones fervor, one should not have friendship that does not help to remove or at least face with tact, when grief sets in, says this verse.

Though both thoughts says what one must adopt in his life, it is difficult to see how they are related in a metaphorical context to each other. Perhaps only vaLLuvar knows. Perhaps the connection is an implied one here! It is true that deeds done to diminish a person’s fervor are to be avoided and when done despite, may bring grief;  when such grief sets in, the friendship that does not help to resolve needs to be cut off.

“Fervor diminishing acts must, one avoid even if strife
 So must be the friendship, that does not help in grief”

இன்றெனது குறள்:


ஊக்கம் குறைக்கும் செயல்களும் துன்பத்தே
நீக்காது நீங்குநட்பும் நீக்கு

Ukkam kuRaikkum seyalgaLum thunbaththE
nIkkAdu nIngunaTpum nIkku

ஜூலை 01, 2014

குறளின் குரல் - 803

st Jul 2014

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.
                        (குறள் 797: நட்பாராய்தல் அதிகாரம்)

ஊதியம் என்பது ஒருவற்குப் - ஒருவருக்கு ஈட்டம் அல்லது வருவாய் என்பது
பேதையார் - அறிவிலிகளின்
கேண்மை - நட்பை
ஒரீஇ விடல் - கொள்ளாது கைவிடுதலாம்; கொண்டிருந்தால் துறப்பதாம்.

ஒருவர் அவர் வாழ்வில் ஈட்டிய வருமானம் என்பது நல்ல நண்பர்கள் என்பதை விட, அறிவிலிகளின் நட்பைக் கைக்கொள்ளாது தவிர்ப்பதாம். அப்படியே கொண்டிருந்தாலும் துறப்பதாம். இக்குறளின் கருத்தையே வேறுவிதமாக நட்போடு சொல்லாமல், பேதைமை மற்றும் ஊதியத்தை மையமாகக் கொண்டு பின்வரும் பேதைமை அதிகாரம் இவ்வாறு சொல்லுகிறது, “பேதைமை என்பதுஒன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல். அதாவது,பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்குக் கெடுதியானதைக் கைக்கொண்டு ஊதியமானதைக் கைவிடுதலாகும்” உள்ளுரையாக கேடு தருவதில் ஒன்றாக அறிவிலிகளின் நட்பையும் கொள்ளலாம்.

Transliteration:

Udiyam enbadu oruvaRkup pEdaiyAr
kENmai orIi viDal

Udiyam enbadu oruvaRkup – True earnings of a person is
pEdaiyAr - fools
kENmai - friendship
orIi viDal – not have in the first place; or forsake, if already is in friendship

More than having a good friend, the real earnings of a person, is to avoid first fools’ friendship; if there is a friendship already, renounce it with without remorse. A similar verse centered around foolishness and earnings is said in the chapter of “foolishness”. That verse says, the foolishness is, going for bad and letting go, the real earnings; fools friendship is to be construed as one of the bad things.

“To avoid or forsake the friendship with fools
 is the true earnings and shall avoid redicules”

இன்றெனது குறள்:

அறிவிலிகள் நட்பைத் துறப்பதே ஈட்டம்
அறிந்திதைக் கொள்வதாம் நட்பு

aRiviligaL naTpaith thuRappadE ITTam

aRindidaik koLvadAm naTpu

ஜூன் 30, 2014

குறளின் குரல் - 802

30th Jun 2014

கேட்டினும் உண்டோ உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.
                        (குறள் 796: நட்பாராய்தல் அதிகாரம்)

கேட்டினும்   - கேடு வருவதைக் காட்டிலும்
உண்டோர் உறுதி - ஊன்றி உறுதியாக காட்டக்கூடிய
கிளைஞரை - இவர் நண்பரென்று
நீட்டி அளப்பதோர் - இவருடைய நட்பு இத்தகைய நீட்சியாம் என்று அளக்கின்ற
கோல் - ஒரு நீளத்தை அளக்கும் கருவி

ஒரு நட்பின் வலிமையின் நீட்சியை சரியாக அளக்கும் கருவியானது, ஒருவருக்கு கேடு வரும்போதேயாம். “அற்ற குளத்தில் அறு நீர்ப்பறவை” போன்றோரது நட்பு, கேடுவரும் கணமே காணாது போகும்.  உறுதியாக, நீண்டிருக்கும் நட்பு கேடு வந்த காலங்களிலும் தோளோடு தோள் நின்று கேடு தரும் வலியில் பங்கு கொள்ளும். கேட்டினாலும் நன்மை விளைவதைச் சுட்டுகின்ற குறளிது.  கேடே நட்பின் உறுதியை அல்லது போலி நட்பை அறிவுறுத்துகிற அளவாக இருக்கிறது.

Transliteration:

kETTilnum uNDO uRudi kiLainjarai
nITTi aLappadOr kOl

kETTilnum – other than adversity
uNDO uRudi – is there anything else sturdy?
kiLainjarai – for friends
nITTi aLappadOr – to measue the extents of (friendship_
kOl – a scale?

To measure the extent of friendship, there is no better scale than an adverse time. As the water-dependent birds desert a waterbody, when it drains up, opportunistic friends desert immediately when the adversity and misfortune is at friend’s door step. Hence only an adversity is a true measuring scale to show the extent of a true friendship or lack of it.

“None better as a scale to measure the strength and extent of friendship,
 but adverse times, to see if a friend stays or runs away from hardship”

இன்றெனது குறள்:


கேண்மையைக் காட்டிட கேடுபோல் கோலொன்றும்
காண்பதுண்டோ தேடினாலும் ஈண்டு?

kENmaiyaik kATTiDa kEDupOl kOlenRum
kaNbaduNDO tEDinAlum INDu?

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...