நவம்பர் 08, 2014

குறளின் குரல் - 933

8th Nov 2014

உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்
(குறள் 927: கள்ளுண்ணாமை அதிகாரம்)

உள் ஒற்றி - அவர் ஒளித்துச் செய்வதை உய்த்துணர்ந்து
உள்ளூர் - ஊராரால்
நகப்படுவர்- நகைக்கப்படுவர்
எஞ்ஞான்றும் - எப்போதுமே
கள் ஒற்றிக் - கள்ளை ஊருக்குத் தெரியாமல் ஒளித்து அருந்துவதாக நினைத்து
கண் சாய்பவர்- கள்ளுண்டு தளர்ந்து, மயங்கியிருப்பவர்.

கள் குடிப்பவர்கள், தாம் ஊருக்குத் தெரியாமல் ஒளித்து அருந்துவதாக நினைத்துக் குடித்தாலும், கள்ளுண்ட மயக்கத்தில் தளர்ந்து, மயங்கியிருப்பர். அதை உய்த்துணர்ந்து ஊராரால் எள்ளி நகையாடப்படுவர். இக்குறள் கள்ளுண்பவரகள் ஒளித்தே குடித்தாலும் அவர்கள் சுயவயமின்றி தள்ளாடித் தம்முடைய நிலையைத் தாமே காட்டிக்கொடுத்துவிடுவர் என்றும் அதனாலேயே நகைப்புக்கும் உரியவராகிவிடுவர் என்கிறது.

Transliteration:

uLLoRRi uLLUr nagappaDuvar enjAnRum
kaLLORRik kaNsAi pavar

uLL oRRi – spying and knowing that they do in hiding,
uLLUr – by the people of the town
nagappaDuvar – will be laughed at
enjAnRum - always
kaL ORRik – those who think they drink toddy in hiding
kaN sAipavar – and drink toddy and lose their sense of awareness (always)

Habitual toddy drinkers, may think that they are secretively drinking unknown to the people of the town; but they would lose their sense of awareness and appropriate behavior because of their intoxication and reveal their state to everyone. Their secrets will be detected by the townsmen easily and they will be laughed at for their inappropriate behavior, says this verse.

Though thinks, his toddy drinking is secretive unknown to townsmen
his intoxicated inappropriate state would reveal, and he be made fun”

இன்றெனது குறள்:

ஒளித்துக்கள் உண்டு மயங்குவாரை ஊரே
இளிக்குமே உய்த்துணர்ந்தென் றும்

oLiththukkaL uNDu mayanguvArai UrE

iLikkumE uyththuNarnden Rum

நவம்பர் 07, 2014

குறளின் குரல் - 932

7th Nov 2014

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
(குறள் 926: கள்ளுண்ணாமை அதிகாரம்)

துஞ்சினார் - உறங்குபவர்
செத்தாரின் - இறந்தவரின்
வேறல்லர் - வேறு என கூற முடியாது.
எஞ்ஞான்றும் - அதேபோல் எப்போதும்
நஞ்சுண்பார் - விடத்தை உண்பவர்களே ஆவார்கள்
கள்ளுண்பவர் - கள்ளினை அருந்துபவர்கள்.

செத்தாரை துஞ்சினார்" என்கிறது தொல்காப்பியம். உறங்கும் நிலையென்பது உணர்வுகள் இல்லாத நிலை, இறந்த நிலைக்குச் சமம். இரண்டு நிலையிலும் வெளியில் என்ன நடக்கிறது என்று ஒருவருக்குத் தெரியாது. அதேபோலாம் கள்ளை உண்ணுதலும், நஞ்சை அருந்துவதற்குச் சமம். இரண்டுமே ஒருவரை உணர்வுகள் இல்லாத நிலைக்கே அழைத்துச் செல்லும். மெதுவாக, ஆயினும் உறுதியாக, இறுதியாக வாழ்வையே அழிக்கக்கூடியது.

நஞ்சில் இருவகை உண்டு. ஒன்று உடன் கொல்லும். இன்னொன்று மெதுவாகவே கொல்லும் தன்மையது. ஆக இரண்டுமே இறுதியில் கொல்லக்கூடியனதான். செத்தவர் விழிக்க வியலாது, தூங்கியவர் விழித்தாலும். அதேபோலே கள்ளுண்பவர் சுயநினைவுக்கு வரலாம், நஞ்சுண்டவர் வராமல் நீள் துயிலுக்குச் சென்றாலும். ஆனால் உடனிருந்தே கொல்லுமாம் நோய்போன்றதே கள்ளுண்ணலும்.

ஒரு நிலையில் இந்த ஒப்புமை சரியெனப்பட்டாலும், தூங்குதல் ஓய்வெடுத்தலே; விழிக்கும் போது உடல் புத்துணர்வு பெறுவதே இயற்கை அளித்திருக்கும் நியதி, வரம். கள்ளுண்ணல்லையும் அவ்வாறே கொள்வோரும் உள்ளனர், எனினும், கள்ளென்பது ஒருவரை மதிமயக்குறச் செய்வது, எனவே இரண்டையும் ஒப்பு நோக்க முடியாது. உவமையில் ஒரு தெளிவில்லாமை இருப்பதாகவே தெரிகிறது.

Transliteration:

thunjinAr seththArin vERellar enjnjAnRum
nanjuNbAr kaLLuN bavar

thunjinAr – One who is sleeping
seththArin – dead person
vERellar – is not different ( from dead person )
enjnjAnRum – likewise, always
nanjuNbAr – those who consume poison are similar to
kaLLuNbavar – those who consume toddy.

TholkAppiyam refers to a dead person with the word “thunjinAr”, a person of sleeping state. Sleeping is a state without any awareness of what is happening around, similar to death. Similarly, drinking toddy is compared to taking poison. Both will take a person to a state devoid of being in senses. Though slowly sometimes, will definitely, in the end, lead a person to his ruin.

There are two kinds of poisons, deadly that kills right away; and slow that acts over a long time and kills eventually. The underlying truth is that both kill. Like a person in sleep-state, a toddy drinker may come back to senses, unlike a person that consumes poison; But its addiction will sure lead a person to permanently incapacitated death is what is perhaps implied.

Though the comparison in this verse is seemingly right, sleeping is for resting the body to be rejuvenated; such is the nature and its gift. Toddy drinkers would also argue similarly; But its ill-effects of making one lose senses is not equal to being rejuvenated; The metaphorical comparisons of this verse, somehow don't seem to make sense, in someways.

Sleep and death are similar, a state of being unaware
Toddy and Poison are similar that bring death, beware”

இன்றெனது குறள்:

தூங்கலும் சாவுமொன்றே யாமதுபோல் நஞ்சாகி
தீங்கிழைக்கும் கள்ளருந் தல்

thUngalum sAvumonRE yAmadupOl nanjAgi

thIngizhaikkum kaLLarun dal

நவம்பர் 06, 2014

குறளின் குரல் - 931


6th Nov 2014

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.
                           (குறள் 925: கள்ளுண்ணாமை அதிகாரம்)

கை அறியாமை உடைத்தே - பயன் அறியாது, செயலறுதலும் அதனால் துன்பம் அடைதலும் கொள்வதாம்
பொருள் கொடுத்து - விலை கொடுத்து
மெய்யறியாமை கொளல் - தம்முடைய உடலையும், புலனுணர்வையும் இழந்து கொள்ளுதல் போலாம்.

தம்முடைய நிலையையும், குடிப்பதால் தமக்கு விளையும் இன்னல்களையும் அறியாதவர்கள், விலைகொடுத்து, குடிப்பதால் தம்முடைய உடலையும், புலனுணர்வையும் இழந்து கொள்ளல் போன்றாம். சொலவடையில் புழங்கும், “சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்ளுதல்" போலாம்.

இக் குறளில் "கையறியாமை" என்பது கையாறாமை" என்று இருந்திருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. கையறுதல் என்பது, கலக்கத்தையும் துன்பத்தையும் குறிக்கும் சொல். “கை" என்பது கரத்தால் செய்யக்கூடிய செயலையும் குறிப்பதாகும் ஆகையால், “செய்வதறியாமை" என்னும் "கையாலாகத்தன்மையை" இச்சொல் குறிப்பதாகவும் கொள்ளலாம். “குடி குடியைக்கெடுப்பதற்கு" ஏதுவாகிய, உடலுரத்தை இழக்கச்செய்தலையும் இச்சொல் குறிப்பதாகும்.

Transliteration:

kaiyaRi yAmai uDaiththE poruLkoDuththu
meyyaRi yAmai koLal.

kaiyaRiyAmai uDaiththE– without knowing the use, losing the ability to be useful, subjecting self to misery
poruL koDuththu – paying a price (for such misery)
meyyaRiyAmai koLal – losing the awareness about the body and the self

Not understanding what distress it would eventually place self, only fools would buy and drink toddy to lose awareness about their body and senses. As exists in common phrase usage, it is like “buying black-magic for self with own money”.

The word “kaiyaRiyAmai” could have probably been “kaiyaRAmai” which means distress and ensuing pain. On the other hand, “kai” also implies all that is done with hands and hence “kaiyaRiyAmai” would mean, “not knowing what to do” or inability to do anything useful. It can also indirectly mean toddy's ability to make one lose the physical strength and be incapacitated.

Drinking toddy to lose self awareness, paying a price
  is bringing distress to self, a self destructing vice”

இன்றெனது குறள்(கள்):

விலைகொடுத்து கள்ளுண்டு மெய்மறக்கும் மூடர்
நிலையும் பயனுமறி யார்.

vilaikOduththu kaLLuNDu meimaRakkum mUDar
nilaiyum payanumaRi yAr.

விலைகொடுத்து கள்ளுண்டு மெய்மறக்கும் மூடர்
குலைவுறுவோம் என்றுணரா தார்.

vilaikOduththu kaLLuNDu meimaRakkum mUDar

kulaivuRuvOm enRUNarA dAr.

நவம்பர் 05, 2014

குறளின் குரல் - 930

5th Nov 2014

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.
                                    (குறள் 924: கள்ளுண்ணாமை அதிகாரம்)

நாண்என்னும் - நாணம், வெட்கம் என்கிற
நல்லாள் - நல்ல பண்பு (அதையே ஒரு நங்கையாக உருவகிக்கிறார்)
புறங்கொடுக்கும் - ஒருவரை விட்டுச் செல்லும்
கள்ளென்னும் - கள்ளுண்ணும்
பேணாப் - எல்லோரும் இகழக்கூடிய
பெருங்குற்றத்தார்க்கு - பெரியகுற்றத்தை செய்வோர்க்கு.

கள்ளுண்பதாகிய, எல்லோரும் இகழக்கூடிய பெருங்குற்றத்தை செய்வோர்க்கு, வெட்கம் என்கிற நல்ல பண்பாகிய நங்கை அவரிடம் இருக்க விழையாது நீங்குவாள். நாணிலார்க்கு மாணில்லை ஆதலால், கள்ளுண்ணுவோர்க்கு மாண் இல்லை என்றும் உணர்த்துகிறார் வள்ளுவர். இக்குறள் மூலம். இதையே கலித்தொகைப் பாடல், “காணாமை உண்ட கடுங்கள்ளை மெய்கூர நாணாது சென்று நடுங்க உரைத்தாங்கு" என்று கள்குடித்தலால் நாண் அழிதலைக் கூறுகிறது.

Transliteration:

nANennum nallAL puRangkoDukkum kaLLEnum
pENAp perungkuRRath tHArkku.

NANennum – Modesty
nallAL – a fine value, virtue (vaLLuvar metaphorically calls the virtue as fine lady)
puRangkoDukkum – will leave a person
kaLLEnum – the habit of toddy drinking
pENAp – that everyone will abhor
perungkuRRathtHArkku – such a grievous crime.

Modesty, the virtue, like a fine lady, shall leave a person, that indulges in the grievous crime of being toddy thirsty, says vaLLuvar in this verse. Without modesty there is no glory to a person and hence there is no glory for those that are indulgent in toddy drinking.

Anyone indulgent in the grievous crime of being toddy thirsty,
shall be deserted by the fine value that is virtue of modesty”

இன்றெனது குறள்:

பொல்லாப் பெருங்குற்றம் கள்ளுண்ணல் செய்வோரை
நல்லாள்நாண் நங்கைநீங் கும்

pOLLap perungkuRRam kaLLuNNal seyvOrai

nallALnAN nangkainIng gum

நவம்பர் 04, 2014

குறளின் குரல் - 929

4th Nov 2014

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.
                               (குறள் 923: கள்ளுண்ணாமை அதிகாரம்)

ஈன்றாள் - குற்றங்களை மறந்து மன்னிக்கும் தாயின்
முகத்தேயும் - முகத்துக்கே
இன்னாதால் - காணப் பொறாதத் துன்பம் தருவதாகிய (எது? கள்ளுண்ணல்)
என்மற்றுச் - எப்படி மற்று அவ்வாறு இல்லாது குற்றங்களைக் கடியும்
சான்றோர் - கற்றறிந்த சான்றோர்
முகத்துக் - முன்பாக, அவர்கள் முகத்துக்கெதிரே
களி. - கள்ளுண்டு களிப்பது சரியென்று கொள்ளப்படும்?

தாயென்பவள் எல்லா குற்றங்களையும் மறந்து மன்னிக்கக்கூடியவள். அவளுக்கே தம்மகன் கள்ளுண்டு கிடப்பது துன்பமும், காணப் பொறாததும் ஆகும். கற்றறிந்த சான்றோர், குற்றங்களைப் பொறாத இயல்பினர். சமூகம் குற்றமில்லாது இருக்கவேண்டும் என்று விரும்புகிறவர்கள். அவர்கள் எவ்வாறு கள்ளுண்ணுபவர்களைப் பொறுத்துக்கொள்வார்கள்? என்று வினவுகிறார் வள்ளுவர்.

Transliteration:

InRAL mugaththEyum innAdAl enmaRRuch
chAnROr mugaththuk kaLi

InRAL – A mother who is generally forgiving
mugaththEyum – in front of her face
innAdAl – the pain of son drinking toddy is unbearable to her
enmaRRuch – how then, for usually unforgiving to maintain social order and justice
chAnROr – learned scholars
mugaththuk – before their face
kaLi – drinking toddy would be bearable?

A mother is usually a forgiving soul. Even she cannot bear and be painful, if she sees her son drinking toddy. How then learned scholars, that are usually unforgiving to keep the societal orders tolerate people drinking toddy before them?, asks vaLLuvar.

Even an ever forgiving mother wouldn't tolerate a toddy drinking son!
How else, unforgiving learned scholars, would just take it as some fun?”

இன்றெனது குறள்:

பெற்றாளே கள்ளுண்ணக் காணப் பொறாளாயின்
கற்றறிந்தோர் என்பொறுக்கும் அஃது?

PeRRALE kaLLUNNak kANAp poRALAyin

kaRRaRindOr enpoRukkum ahdu

நவம்பர் 03, 2014

குறளின் குரல் - 928

3rd Nov 2014

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.
                               (குறள் 922: கள்ளுண்ணாமை அதிகாரம்)

உண்ணற்க கள்ளை - கள்ளை சாப்பிடாதீர்
உணில் உண்க - அப்படி சாப்பிட வேண்டுமானால் சாப்பிடுங்கள்
சான்றோரான் - கற்றறிந்த ஒழுக்கமிக்கவரால்
எண்ணப்பட வேண்டாதார் - மதிக்கப்பட வேண்டாதவர்கள்

முதலில் கள்ளை உண்ணக்கூடாது என்று சொல்லிவிட்டு, பின்பு அப்படி உண்ண விரும்புகிறவர்கள் உண்ணட்டும், அவர்கள் கற்றறிந்து அறிவொழுக்கம் மிக்கோர்களால் மதிக்கப்பட வேண்டாமெனில் என்கிறார் வள்ளுவர். சான்றோர்கள் கள் உண்ணாதவர்கள் என்பதையும் புலப்படுத்தி, கற்றறியா மூடரே கள் அருந்துவர் என்பதையும் குறிப்பால் உணர்த்துகிற குறள்.

Transliteration:

uNNARka kaLLai uNiluNga sAnROrAn
eNNap paDavENDA dAr

uNNARka kaLLai – Don't consume toddy
uNil uNga – if you have to consume do so
sAnROrAn – by the erudite
eNNappaDa vENDAdAr – those that don't desire the respect of them (erudite)

First of all, never consume toddy. Those who don't desire the respect of erudite may do so, says vaLLuvar in this verse. He also points out that erudite scholars will not subject themselves to the intoxication of toddy and only fools would do that.

"Don't consume toddy! Unless you've no desires
 to be respected by erudite and scholarly sires”

இன்றெனது குறள்:

கற்றொழுக்கம் மிக்கோர் மதிக்கவேண்டார் உண்ணட்டும்
மற்றவர்கள் உண்ணவேண்டாம் கள்

kaRRozhukkam mikkOr madikkavENDAr uNNATTum
maRRavargal uNNAvENDAm kaL

நவம்பர் 02, 2014

குறளின் குரல் - 927

93: ( Not drinking toddy - கள்ளுண்ணாமை )

[In the last verse of previous chapter “wanton woman”, vaLLuvar had enlisted toddy and gambling as two other vices along with being in the company of harlots as the main cause of losing all wealth. This chapter and the next are about the evil of toddy consumption and gambling respectively. Toddy or any other intoxicant is mind-numbing and is certain to make anyone's brain function to be affected to act irrationally, which in turn results in loss of everything good. In this chapter, vaLLuvar lists all such ill-effects of toddy drinking]

2nd Nov 2014

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.
(குறள் 921: கள்ளுண்ணாமை அதிகாரம்)

உட்கப் படாஅர் - பகைவரால் அஞ்சப்படார், மதிக்கப்படார்
ஒளியிழப்பர் - தமக்கு உரியதாம் புகழையும் இழப்பர்
எஞ்ஞான்றும் - எப்போதும்
கட்காதல் - போதையில் ஆழ்த்தி அறிவை குலைக்கும் கள்ளின் மேல் ஆசை
கொண்டொழுகுவார் - கொண்டு அதை அருந்துவதிலேயே மனத்தைச் செலுத்தியவர்.

கள்ளருந்துதல் உடலுக்குமட்டுமன்றி ஒருவர் அறிவைச் சிதைக்கும் தன்மையது. அதனாலேயே அவர்கள் பகைவர்களால் மதிக்கப்படுவதுமில்லை, அஞ்சப்படுவதுமில்லை. அவருக்குண்டாயிருந்த புகழும், அறிவுச் செறிவும் இல்லாது அழியும் என்று கள்ளருந்துதலின் தீமையைப் பொதுவாகக் கூறும் குறள் இது. இவ்வாறு குடியைக் கெடுக்கும் குடியைப் பற்றி, அறநெறிச் சாரப்பாடல் சொல்லி, அதை விட்டொழிக்க வலியுறுத்துகிறது.

ஒளியும் ஒளிசான்ற செய்கையும் சான்றோர்
தெளிவுடையார் என்று உரைக்கும் தேசும் - களியென்னும்
கட்டுரையால் கோதப்படுமேல் இவையெல்லாம்,
விட்டொழியும் வேறாய் விரைந்து.

Transliteration:

uTkap pADAar oLiyizhappar enjAnRum
kaTkAdal koNDOzhugu vAr

uTkap pADAar – Not feared by enemies or respected
oLiyizhappar – will lose even the repute and radiance they have
enjAnRum - always
kaTkAdal – those who have love for toddy
koNDOzhuguvAr – and live their life consuming it''

Being obsessed with toddy is not only injurious to health, but will destroy thinking of anyone; and they will not be respected or feared by their enemies. Apart from that, they will lose their radiance of glory; Thus saying the ill-effects of toddy, vaLLuvar begins this chapter.

Lustful of toddy shall lose respect, fear of all
always; the brilliance, too shall fade and fall

இன்றெனது குறள்:

கள்ளாசைக் கொண்டார்க்கு அஞ்சார் பகைவரென்றும்
ஒள்ளிமையும் நீங்கிடு வர்.

KaLLAsaik koNDArkku anjAr pagaivarenRum

oLLImaiyum nIngiDu var

நவம்பர் 01, 2014

குறளின் குரல் - 926

1st Nov 2014

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.
                               (குறள் 920: வரைவில் மகளிர் அதிகாரம்)

இருமனப் பெண்டிரும் - உள்ளத்தை ஒருவருக்கும் உடலை வேறொருவருக்குமென்று செய்யும், வஞ்சப் பரத்தையர்,
கள்ளும் - சிந்தையை மயக்கும் போதையூட்டும் கள்
கவறும் - சூதாட்டம் ஆகிய மூன்றும்
திரு நீக்கப்பட்டார் - செல்வம் நீக்கப்பட்டாரோடு
தொடர்பு - நட்பாக இருப்பவை.

உள்ளத்தையும் உடலையும் வெவ்வேறு இடங்களில் வைத்திருக்கும் வஞ்ச நெஞ்சுடைய பரத்தையர், சிந்தையை மயக்குறுத்துவதும் போதையைத் தருவதுமாகிய கள், மற்றும் சூதாட்டம் ஆகிய மூன்றுமே செல்வமானது நீங்கியவர்களோடு நட்பாக இருப்பவை. வளத்தை இழந்தவர்களிடமே இவை மூன்றும் தொடர்பில் இருப்பதென்பது, இவற்றைக்கொண்டிருப்பதாலேயே ஒருவர் வளங்களையும், செல்வத்தையும் இழப்பார் என்பதைக் குறிக்கத்தான்.

இம்மூன்றையும் குறிக்கும் திரிகடுகப்பாடலொன்று, வேசியரைச் சேர்வதாகிய நீசத்தன்மையும், கள்ளுண்டலாகிய பிறர் எச்சிலை யுண்பதும், பொய்யை மேற்கொள்வதாய சூதாடுமிடத்திற் சேர்வதும் அறவழி நில்லாதார் தொழில்களாம் என்கிறது. அப்பாடல்:

"புலைமயக்கம் வேண்டிப் பொருட்பெண்டிர்த் தோய்தல்
கலமயக்கம் கள்ளுண்டு வாழ்தல் - சொலைமுனிந்து
பொய்மயக்கம் சூதின்கண் தங்கல் இவை மூன்றும்
நன்மையி லாளர் தொழில்.”

Transliteration:

irumanap peNDirum kaLLum kavaRum
thirunIkkap paTTAr thoDarbu

irumanap peNDirum – whores that share their heart and the body with two different persons
kaLLum – the toddy
kavaRum – and gambling are,
thiru nIkkappaTTAr – with those who have made to lose their wealth,
thoDarbu – in friendship

The harlots that keep their body and the soul in two places, the intoxicating toddy and the gambling are the three vices that are in friendship with someone who is out to lose his wealth. In other words, one will lose all that he has if he succumbs to the three vices mentioned here.

A poem in ThirikaDugam echoes the same thought. Those who do not tread the virtuous ways will have lowly act of being with whores, drink toddy which is like tasting what others have tasted, and gamble which forces them to lie.

Company of whores, toddy and gamble are with
those that are destined to lose all their wealth”

இன்றெனது குறள்:

வஞ்சப் பரத்தையர் கள்சூது மூன்றுமே
தஞ்சம் திருதொலைத்தார் பால்

vanjap paraththaiyar kaLsUdhu mUnRumE

thanjam thirutholaiththAr pAl

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...