டிசம்பர் 03, 2013

குறளின் குரல் - 595

4th Dec 2013

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
                            (குறள் 588: ஒற்றாடல் அதிகாரம்)

ஒற்று - ஒற்றரொருவர்
ஒற்றித் தந்த - உளவறிந்து சேகரித்துத் தந்த தகவல்களை
பொருளையும் - அவற்றின் பின்னணிப் பொருளதனை
மற்றுமோர் - மற்றுமோர்
ஒற்றினால் - ஒற்றரைக் கொண்டு
ஒற்றிக் - அதே பொருள் பற்றி ஒற்றரியச் செய்து,
கொளல் - இரண்டையும் ஒப்பு நோக்கியே உண்மை பின்புலத்தை அறிய வேண்டும்

முன்பே சொல்லப்பட்ட பொருள் என்றாலும், இக்குறள் ஒற்றாடலின் ஒரு இன்றியமையாத பொருளைச் சொல்கிறது. சொல்லப்படும் தகவலின் நம்பகத்தன்மையை அறிய ஒரே பொருள் பற்றி இரு வேறு ஒற்றர்களை ஒருவருக்கொருவர் அறிந்துகொள்ளாமல் ஒற்றச் செய்வது ஆள்வோருக்கு நன்மை பயப்பதாகும். பொதுவாகச் செய்யும் செயல்களுக்கு இவை தேவையில்லை எனினும், நாட்டின், குடிகளின், ஆள்வோரின் பாதுகாப்பு போன்றவற்றையும், நாட்டு மக்களின் சிந்தனை ஓட்டத்தையும் அறிந்து கொள்ள ஆள்வோருக்கு மிகவும் தேவையான ஒன்றாகும்.

இலக்கிய மேற்கோள்கள் பெருங்கதையிலும், சீவக சிந்தாமணியிலும் காட்டப்படுகின்றன. “ ஒற்று ஒற்றியவரை ஒற்றின் ஆய்ந்தும்”, “ஒற்று மாக்களின் ஒற்றரிந் ஆயா” என்ற வரிகளை பெருங்கதையில் (3.23:53,25.48) காணலாம். “ஒற்றர்தங்களை ஒற்றரின் ஆய்தலும் கொற்றங் கொள்குறிக் கொற்றவர்க் கென்பவே” என்ற வரிகளை சீவக சிந்தாமணியிலும் காணலாம் (சீவக 1921).

Transliteration:
oRRoRRi thanda poruLAiyum maRRumOr
oRRinAl oRRik koLal

oRR(u) – A spy
oRRi thanda – whatever information he collects and gives through spying
poruLAiyum – the underlying content and what it means to a rule
maRRumOr – with another spy
oRRinAl – with another spy
oRRik – spying on the same and verifying the two individual and independent sources
koLal – then mus be taken into consideration.

The thought of this verse is already a known one, nevertheless an important one to be said explicitly through another verse. Whatever information collected using a spy on important security matters, things pertinent to the state, citizens and its enemies, must be verified with another spy independently to be sure of the veracity and believability of the same. Sometimes, it is required to feel the pulse of the citizens too.

Literary exmaples of the same thought are seen in “Perunkadhai” and “Cheevaga ChinthAmaNI”

“Compare information collected through a spy
 With another spy to avert any mole acting sly”


இன்றெனது குறள்:

ஒப்புநோக்கி ஒற்றர்சொல் உள்ளலே ஒண்மையது
செப்பமுறச் செய்யும் செயல்

oppunOkki oRRarsol uLLalE oNmaiuadu
seppamuRa seyyum seyal

குறளின் குரல் - 594

3rd Dec 2013

மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.
                            (குறள் 587: ஒற்றாடல் அதிகாரம்)

மறைந்தவை - மற்றவர்கள் ஒளித்துச் செய்யும் செயல்களைப் பற்றி
கேட்க - கேட்டு அறியும் (தகவல்களை பலவாறு சேகரித்து)
வற்றாகி - வல்லவராகி
அறிந்தவை - அவ்வாறு அறிந்தவைகளின் துணைகொண்டு
ஐயப்பாடு - செயல்களில் ஈடுபடுகையில் சந்தேகப்பட்டுக்
இல்லதே - கொண்டிராமல் இருப்பதே
ஒற்று - நல்ல ஒற்றருக்கு அழகாகும்


நல்ல ஒற்றருக்கு அழகே மற்றவர்கள், குறிப்பாக பகையெண்ணத்தில் ஒளித்துச் செயல்களில் ஈடுபடுபவர்கள், செய்யும் செயல்களைப் பற்றிய தகவல்களை பல்வேறு வழிகளில் கேட்டறியும் வல்லவராகி, அவ்வாறு அறிந்த தகவல்களின் துணைகொண்டு, தக்கவாறு எதிர்வினையாற்றுகையில், செய்வது சரியா, தவறா என்னும் ஐயங்கள் கொள்ளாமல் செய்வதாகும். இதுவே இக்குறள் சொல்லும் கருத்து. ஒற்றருக்குண்டான இலக்கணக்கூறுகளை மேலும் கூறுவது.

Transliteration:

maRaindavai kETkavaRRAki aRindavai
iayppADu illadE oRRu

maRaindavai – Deeds done in hiding by others (especially enemies).
kETka – listening to as said by others.
vaRRAki – become capable to (as described above)
aRindavai – using such information collected
iayppADu – doubting if the action taken on such information would be appropriate
illadE – not having such doubts
oRRu – those with such traits are true spies

Another verse that defines how spies should be! A great spy is one that listens to information from many sources, understands the deeds done in hiding by others, especially enemies, and is capable of taking appropriate actions when needed.without doubts if the information obtained and researched and the action takens are right or wrong.

“A good spy must bring out all hidden facts,
 Must be capable of acting without doubts”

இன்றெனது குறள்:

ஒளித்தவை கேட்டறிய வல்லராகி ஐயம்
தெளிந்தவற்றில் தேர்வதே ஒற்று

oLiththavai kETTaRiya vallarAgi aiyam
theLindavaRRil tErvadE oRRu

டிசம்பர் 02, 2013

குறளின் குரல் - 593

2nd Dec 2013

துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று.
                            (குறள் 586: ஒற்றாடல் அதிகாரம்)

துறந்தார் - பற்றற்றவர் (ஒற்றருக்கு துறவிகளைப் போல பற்றின்மை தேவை)
படிவத்தராகி - தவ ஒழுகுதல் போல நியமங்களைக் கொண்டவராக இருந்து
இறந்து ஆராய்ந்து - முற்றிலுமாக கிடைக்கும் தகவல்களை பிழை களைந்து ஆராய்ந்து
என்செயினும் - பகைவரிடம் சிக்கும் போது, அவர்கள் கொல்வதுபோல் துன்புறுத்திடினும்
சோர்விலது - தம்முடைய உறுதியில் தளறாது நிற்பவரே
ஒற்று - ஒற்றர்களாவர்கள்

ஒற்றருக்கு இருக்கவேண்டிய கட்டுபாடான வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும் குறளிது. அவர்கள் துறவிகளைப் போல் வேண்டியவர், வேண்டாதவர் என்ற பற்றுகளைக் அறுத்தவராக இருக்கவேண்டும். தவநெறிகளை கொண்டு சீரிய விரதங்களை மேற்கொண்டவர்கள் போல் நியமங்களைக் கொண்டவராக இருக்கவேண்டும். சேகரிக்கும் தகவல்களை அவற்றின் தரமும், பொருளும் ஆராய்ந்து இது நம்பத்தகுந்தது, அல்லதற்றது என்றறிய வேண்டும். பகைவரிடம் சிக்கிக்கொண்டால், அவர்கள் கொன்றே போடுமளவுக்குத் துன்பு செய்தாலும், உறுதி குலையாமல் இருக்கவேண்டும். அத்தகையவர்களே ஒற்றர்களாக இருக்கத்தக்கவர்கள்.

சீவகசிந்தாமணி படிவம் என்பதை வேடம் புனைதல் என்ற பொருளில் கையாளுகிறது. “பாத்தில்சீர்ப் பதுமுகன் படிவவொற்றாளர் சொற் கோத்தென்ன”  என்னும் வரிகள் கூறுவது இதுவே: “நீக்கம் இல்லாத புகழையுடை பதுமுகன் மறைந்த வேடங்கொண்ட ஒற்றர் ஒருவர் கூறிய சொற்கு மற்றும் இருவர் சொல்லும் சேர்ந்தது என்று கருதி”

Transliteration:

thuRandAr paDivaththarAgi iRandArAindhu
enseyinum sOrviladu oRRu
thuRandAr – those who are without desires, saintly
paDivaththarAgi – stringent in austerities
iRand(u) ArAindhu – completely researching the information gathered, obtained
enseyinum – even if the opponents give severe torture to the extent of death
sOrviladu – standing absolutely resolute
oRRu – are the people that are true spies.

This verse defines the structure of a spys’ life. Spies should be devoid of likes and dislikes when it comes to dealing with people, almost having a saintly posture; they must follow the rigors as penitents do; they must qualify and comprehend the data they gather, information they derive and decide the believability of the same; they must stay absolutely resolute not to give in to the pressures when caught by enemies, even if goes to the extent of getting killed. Only such hardened people can be good spies.

The word “paDivam” denotes “a disguise”, in some literary works.

“As detached as ascestic, stringent as penitents, well informed and enlightened,
 Resolute even when caught and tortured by enemies, are spies that are revered”


இன்றெனது குறள்:

பற்றற்று நற்றவத்தில் முற்றிலும் தெற்றொழுகி
செற்றினும் நிற்றவரே ஒற்று

(தெற்றொழுகி - ஆராய்ந்து ஒழுகி; செற்றினும் - கொன்றிடினும்; நிற்றவர் - உறுதியுடன் நிற்பவர்)

paRRaRRu naRRavathil muRRilum theRRozhugi
seRRinum niRRavarE oRRu

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...