டிசம்பர் 03, 2013

குறளின் குரல் - 594

3rd Dec 2013

மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.
                            (குறள் 587: ஒற்றாடல் அதிகாரம்)

மறைந்தவை - மற்றவர்கள் ஒளித்துச் செய்யும் செயல்களைப் பற்றி
கேட்க - கேட்டு அறியும் (தகவல்களை பலவாறு சேகரித்து)
வற்றாகி - வல்லவராகி
அறிந்தவை - அவ்வாறு அறிந்தவைகளின் துணைகொண்டு
ஐயப்பாடு - செயல்களில் ஈடுபடுகையில் சந்தேகப்பட்டுக்
இல்லதே - கொண்டிராமல் இருப்பதே
ஒற்று - நல்ல ஒற்றருக்கு அழகாகும்


நல்ல ஒற்றருக்கு அழகே மற்றவர்கள், குறிப்பாக பகையெண்ணத்தில் ஒளித்துச் செயல்களில் ஈடுபடுபவர்கள், செய்யும் செயல்களைப் பற்றிய தகவல்களை பல்வேறு வழிகளில் கேட்டறியும் வல்லவராகி, அவ்வாறு அறிந்த தகவல்களின் துணைகொண்டு, தக்கவாறு எதிர்வினையாற்றுகையில், செய்வது சரியா, தவறா என்னும் ஐயங்கள் கொள்ளாமல் செய்வதாகும். இதுவே இக்குறள் சொல்லும் கருத்து. ஒற்றருக்குண்டான இலக்கணக்கூறுகளை மேலும் கூறுவது.

Transliteration:

maRaindavai kETkavaRRAki aRindavai
iayppADu illadE oRRu

maRaindavai – Deeds done in hiding by others (especially enemies).
kETka – listening to as said by others.
vaRRAki – become capable to (as described above)
aRindavai – using such information collected
iayppADu – doubting if the action taken on such information would be appropriate
illadE – not having such doubts
oRRu – those with such traits are true spies

Another verse that defines how spies should be! A great spy is one that listens to information from many sources, understands the deeds done in hiding by others, especially enemies, and is capable of taking appropriate actions when needed.without doubts if the information obtained and researched and the action takens are right or wrong.

“A good spy must bring out all hidden facts,
 Must be capable of acting without doubts”

இன்றெனது குறள்:

ஒளித்தவை கேட்டறிய வல்லராகி ஐயம்
தெளிந்தவற்றில் தேர்வதே ஒற்று

oLiththavai kETTaRiya vallarAgi aiyam
theLindavaRRil tErvadE oRRu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...