ஜூலை 10, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் -91

तमोविपिनधाविनं सततमेव काञ्चीपुरि
विहाररसिका परा परमसंविदुर्वीरुहे
कटाक्षनिगलैर्दृढं हृदयदुष्टदन्तावलं
स्थिरं नयतु मामकं त्रिपुरवैरिसीमन्तिनी ९१॥

தமோவிபின தாவினம் ஸததமேவ காஞ்சீபுரி
விஹார ரஸிகா பரா பரமஸம்விது³ர் வீருஹே
கடாக்ஷ நி³லைர் த்³ருʼம் ஹ்ருʼ³ய து³ஷ்டத³ந்தாவலம்
ஸ்திரம் நயது மாமகம் த்ரிபுரவைரி ஸீமந்தினீ 91

முப்புரப் பகையோன் மனைவியும், காஞ்சிபுரியில் விளையாடுவதில் மகிழ்பவளும், பரதேவதை,  அறியாமை இருட்காட்டில் அலைந்தோடுமென் மனமாம் பொல்லா ஆனையை, தனது கடைக்கண் சங்கிலிகளால், பேருணர்வு என்னும் மரத்தில், எப்போதும் திடமாகக் கட்டி அசைவற்று இருக்கச் செய்யட்டும்

அறியாவல் அத்தம் அலைந்தோடும் பொல்லா அகக்கரியை,
நெறிசெய்க டைகண் நிகளத்தால் நாமயம் நேர்மரத்தில்,
செறியப் பிணைத்து, திரியாமைச் செய்யும், திரிபுராரி,
செறியில்லே! காஞ்சியில் சென்றாடி இன்புறு தேவதையே!

அறியாமை-அஞ்ஞானம்; அல்-இருள்; அத்தம்-காடு; அகம்-மனம்; கரி-யானை; நெறி-நல்லொழுக்கம்; நிகளம்-சங்கிலிகள்; நாமயம்-போதம்,பேருணர்வு; நேர்-நிகழும்; செறிய-இறுக; திரியாமை-அலையாமை; செறி-புணர்; இல்-மனைவி.

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


அறியா அல் அத்தம் அலைந்தோடும் பொல்லா அகக் கரியை, நெறி செய், கடைகண் நிகளத்தால் நாமயம் நேர்மரத்தில், செறியப் பிணைத்து, திரியாமைச் செய்யும், திரிபுராரி, செறியில்லே! காஞ்சியில் சென்றாடி இன்புறு தேவதையே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...