ஜூலை 01, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் -82

जडाः प्रकृतिनिर्धना जनविलोचनारुन्तुदा
नरा जननि वीक्षणं क्षणमवाप्य कामाक्षि ते
वचस्सु मधुमाधुरीं प्रकटयन्ति पौरन्दरी-
विभूतिषु विडम्बनां वपुषि मान्मथीं प्रक्रियाम् ८२॥
                                                  
ஜடா:³ ப்ரக்ருʼதி நிர்தனா ஜனவிலோசனாருந்துதா³
நரா ஜனனி வீக்ஷணம் க்ஷணமவாப்ய காமாக்ஷி! தே
வசஸ்ஸு மதுமாதுரீம் ப்ரகடயந்தி பௌரந்த³ரீ-
விபூதிஷு விட³ம்ப³நாம் வபுஷி மான்மதீ²ம் ப்ரக்ரியாம் 82

தாயே! காமாக்ஷி!  அறிவிலிகளும், பிறவியில் ஏழைகளாயும், நோக்கும் மக்களின் கண்களுக்கு வெறுப்பூட்டும் தோற்றமுடையவர்களும், கண நேரம் உன் கடைக்கண் வீச்சைப் பெற்றால், தேன்போல் இனிப்பவராக, இந்திரனின் செல்வப் பகட்டைப் பெற்றவராக, மன்மதனுக்கும் ஒப்பான உடலழகைப் பெறுகிறார்கள்.

அறிவற்றோர், பூமியில் ஆண்டிப் பிறவியர், ஆங்குமக்கள்
வெறிகொள் உருவினர், வெல்வருன் கண்கடை வீசுகணம்,
செறிவுடன் இந்திரச் செல்வராய்! தேனெனத் தீயமுற்று!
செறிந்து, மதனெழில் சீர்த்தி!தாய் காமாட்சி! திண்ணமன்றே

அறிவற்றோர்-மூடர்; ஆண்டி-ஏழை; வெறி-வெறுப்பு;  செறிவு-மிகுந்து; தீயம்-இனிப்பு; செறிந்து-மிகுந்து; திண்ணம்-உறுதி

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


அறிவற்றோர், பூமியில் ஆண்டிப் பிறவியர், ஆங்குமக்கள் வெறிகொள் உருவினர், வெல்வர் உன் கண்கடை வீசு கணம், செறிவுடன் இந்திரச் செல்வராய்! தேனெனத் தீயமுற்று! செறிந்து, மதனெழில் சீர்த்தி! தாய் காமாட்சி! திண்ணமன்றே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...