ஜூன் 21, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் -72

आधून्वन्त्यै तरलनयनैराङ्गजीं वैजयन्तीम्
आनन्दिन्यै निजपदजुषामात्तकाञ्चीपुरायै ।
आस्माकीनं हृदयमखिलैरागमानां प्रपञ्चैः
आराध्यायै स्पृहयतितरामादिमायै जनन्यै ॥ ७२॥

ஆதூ⁴ன்வந்த்யை தரல நயனைராங்க³ஜீம் வைஜயந்தீம்
ஆனந்தி³ன்யை நிஜபத³ஜுஷா மாத்த காஞ்சீபுராயை ।
ஆஸ்மாகீனம் ஹ்ருʼத³யமகி²லை ராக³மாநாம் ப்ரபஞ்சை:
ஆராத்⁴யாயை ஸ்ப்ருʼஹயதிதராமாதி³மாயை ஜனன்யை ॥ 72॥

அலையும் கண்களால், அங்கசனின் கௌரவத்தை அசைப்பவளும், தனது திருவடியை அடைந்தவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பவளும், காஞ்சிபுரத்தை அடைந்தவளும், அனைத்து வேதங்களாலும் உலகத்தில் பூசனைக்குரியவளும், ஆதி மாயையும் அன்னையுமானவளை நமது இதயம் மிகவும் விழைந்து இருக்கிறது.

அலையும் விழிகளால் அங்கசன் மானம் அசைத்திடுவாள்;
கலைக்காஞ்சி சேர்ந்து, கழலணைந் தார்க்குக் களிப்பருள்வாள்;
நிலைமறை யெல்லாமும் நித்தம்பூ சிப்பவள்; நின்றவள்பால்
வலைப்பட்டு தாயாதி மாயையை வீக்கும் மனம்நமக்கே!

அலையும்-சஞ்சலிக்கும்; அங்கசன்-மன்மதன்; மானம்-கௌரவம்; கழல்-திருவடிகள்; அணைதல்-சேர்ந்தார்க்கு; வலைப்பட்டு-ஆட்பட்டு; வீக்கும்-விழையும்

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


அலையும் விழிகளால் அங்கசன் மானம் அசைத்திடுவாள்; கலைக் காஞ்சி சேர்ந்து, கழல் அணைந்தார்க்குக் களிப்பருள்வாள்; நிலை மறையெல்லாமும் நித்தம் பூசிப்பவள்; நின்றவள்பால் வலைப்பட்டு தாய் ஆதி மாயையை வீக்கும் மனம் நமக்கே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...