ஜனவரி 25, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 26

बिम्बोष्ठद्युतिपुञ्जरञ्जितरुचिस्त्वन्मन्दहासच्छटा
कल्याणं गिरिसार्वभौमतनये कल्लोलयत्वाशु मे
फुल्लन्मल्लिपिनद्धहल्लकमयी कामाक्षि मालेव या 
श्रीकाञ्चीश्वरि मारमर्दितुरुरोमध्ये मुहुर्लम्बते २६॥

பி³ம்போ³ஷ்ட² த்³யுதி புஞ்ஜ ரஞ்ஜிதருசிஸ்த்வன் மந்த³ஹாஸச்ச²டா
கல்யாணம் கி³ரி ஸார்வபௌம தனயே கல்லோல யத்வாஶு மே
பு²ல்லன் மல்லி பினத்³ஹல்லகமயீ காமாக்ஷி! மாலேவ யா1
ஸ்ரீகாஞ்சீஶ்வரி மார மர்தி³துருரோமத்யே முஹுர்லம்ப³தே 26

1-ஹல்லகமயீ மாலேவ யா பேஶலா என்றும் பாடம்;

திருக்காஞ்சியின் ஈசுவரி! மலையரசன் மகளே! காமாட்சியே! எந்த  மென்னகையானது, கோவைப்பழம் போன்ற உதடுகளின் ஒளிக்கதிர்களின் கூட்டால் செம்மையடைந்த அழகை உடைத்து, மலர்ந்த மல்லிக்கைப்பூவொடு தொடுத்த செங்கழுநீர் மலர்களாலான மாலைபோல், மாரனை வதைத்தார்தான் மார்பில் தொங்குகிறதோ, அது என் நலத்தை விரைவாய் பெருக்கட்டும்!

மன்னும் திருக்காஞ்சி மாதே!கா மாட்சி! மலைமகளுன்
மென்னகை, கோவைபோல் மின்னத ரச்செவ் விதழொளிகொள்
நன்மலர் மல்லி நறுவுற் பலமாலை, நாரவரன் 
இன்மார் பிலங்குமே; என்நல மும்மண்டி ஏற்றுகவே!


மன்னும்- இலங்கும்; உற்பலம்-செங்கழுநீர் மலர்; நாரன்-மன்மதன்; நாரஅரன் - நாரனை சம்ஹரித்தவன், சிவன்; மண்டி-விரைந்து! ஏற்றுதல்-பெருக்குதல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...