ஆகஸ்ட் 01, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 52

पाषाण एव हरिनीलमणिर्दिनेषु
प्रम्लनतां कुवलयं प्रकटीकरोति
नौमित्तिको जलदमेचकिमा ततस्ते
कामाक्षि शून्यमुपमनमपाङ्गलक्ष्म्याः 52

பாஷாண ஏவ ஹரி நீலமணிர் தினேஷு
ப்ரம்லனதாம் குவலயம் ப்ரகடீகரோதி |
நைமித்திகோ ஜலத மேசகிமா ததஸ்தே
காமாக்ஷி ூன்யமுபமனமபாங்கலக்ஷ்ம்யா: ||52||

ஹே காமாக்ஷீ! உன்னுடைய கடைக்கண் அழகுக்கு ஈடாகச் சொல்லக்கூடியது எதுவுமில்லை. நீலரத்தினமோ ஒரு கல்லைத்தவிர வேறில்லை. கருநெய்தல் மலரோ பகலிலே வாடக்கூடியது. மேகக்கருமையோ எப்போதாவதுதான் ஏற்படக்கூடியது.

மின்னும் இரத்தினம் மெய்யில் லொருகல்லே மிக்குவேறில்!
பொன்றிக் கருநெய்தல் போகுமே வாடி பொழுததற்குள்!
கன்றிடும் மேகத்தும் காமாட்சீ! நில்லா கருமையதாம்!

உன்கடைக் கண்ணுக்கு ஒப்பெனச் சொல்வது ஒன்றுமன்றே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...