ஜூலை 24, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 44

कामाक्षि तावककटाक्षमहेन्द्रनील-
सिंहासनं श्रितवतो मकरध्वजस्य
साम्राज्यमङ्गलविधौ णिकुण्डलश्रीः
नीराजनोत्सवतरङ्गितदीपमाला 44

காமாக்ஷி தாவக கடாக்ஷ மஹேந்த்ர நீல-
ஸிம்ஹாஸனம் ஶ்ரிதவதோ மகரத்வஜஸ்ய |
ஸாம்ராஜ்ய மங்கல விதௌ மணிகுண்டலஸ்ரீ:
நீராஜனோத்ஸவ தரங்கித தீபமாலா ||44||

காமாக்ஷி! உன்னுடைய கடைக்கண்ணாம் நீலரத்தின அரியாசனம் அமர்ந்திருக்கும் மன்மதனுக்கு பேரரசின் மகுடாபிடேகம் செய்கையில் உனது இரத்தின குண்டலத்தின் ஒளியானது, ஆலத்தியெடுக்கும் விளக்கு வரிசைபோல் விளங்குகிறது.

இந்திர நீல இரத்தின சிம்ம இருக்கைவீற்ற
சந்திரச் சத்தியான் தாம்முடி சூடும் தருணமதில்
உந்தன் இரத்தின ஊசற் குழையதன் ஓள்ளொளியோ
விந்தையா லத்தி விளக்கா வளிபோல் விளங்கிடுதே!


சத்தி - குடை; சந்திரச்சத்தியான் - மன்மதன்; விந்தை - அழகு; ஆவளி - வரிசை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...