மே 25, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 85

मदजलतमालपत्रा वसनितपत्रा करादृतखानित्रा
विहरति पुलिन्दयोषा गुञ्जाभूषा फणीन्द्रकृतवेषा 85

மதஜல தமால பத்ரா வஸனித பத்ரா கராத்ருத கனித்ரா |
விஹரதி புலிந்தயோஷா குஞ்ஜாபூஷா பணீந்த்ர க்ருதவேஷா ||85||

யானையின் மதநீரும் பச்சிலையும் குழைத்துத் திலகமிட்டவளும், இலைகளையே ஆடையாக தரித்தவளும், மண்வெட்டியைக் கையில் கொண்டவளும், குந்துமணி மாலை பூண்டவளும், பாம்புகளை அணியாகப் பூண்டவளுமாக வேடுவப் பெண்ணாய் தேவீ (காமாட்சி) விளையாடிக் கொண்டிருக்கிறாள். இதில் அர்சுனனின் தவவலியை மெச்சி பாசுபதாஸ்திரத்தை தருவதற்காக அப்பனும் அம்மையும், வேடுவ ஆண், பெண்ணாகப் வேடம் புனைந்து அவ்வேடங்களுக்குரிய சின்னங்களோடு வந்தபோது, தேவி எப்படியிருந்தாளோ, அதை வருணிக்கிறார் மூககவி.

மதநீ ரொடுகுழை மட்டிலைப் பொட்டிடுவாள் மாவேடச்
சிதழையா டைதன்னைச் சீராய் தரிப்பாளாம்; செங்கையில்மண்
சிதைத்தகழ் வெட்டியாள்; செங்குன்றி மாலைச் சிகழிகையாள்
அதமாய் அரவாம் அணிபூண்ட வள்கேளி ஆடுவளே


மட்டிலை - பச்சிலை; தழை - இலை; அதமாய் - இணையற்று; சிகழிகையாள் - சிரஞ்சுற்றி அணிந்தவள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...