மார்ச் 05, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 2

कञ्चन काञ्चीनिलयं करधृतकोदण्डबाणसृणिपाशम्
कठिनस्तनभरनम्रं कैवल्यानन्दकन्दमवलम्बे 2

கஞ்சன காஞ்சீ நிலையம் கரத்த்ருத கோதண்டபாண ஸ்ருணிபாம் |
கடினஸ்தனபர நம்ரம் கைவல்யானந்த கந்தம் அவலம்பே ||    (2)

வில்லும் அம்பும் அங்குசமும் பாசமும் கைகளில் தாங்கியுள்ளதும், இறுகிய மார்பகத்தின் சுமையால் முன்புறம் தாழ்ந்ததும் காஞ்சியில் மறைந்துள்ளதும், எக்குறிப்பீடுமில்லா பேரானந்த கிழங்குமானவொன்றை அண்டி நிற்கிறேன். (கிழங்கும், அதிலிருந்து வெளிவருவது ஒன்றே; சுவைக்கும்)

பொன்மயக் காஞ்சிவாழ் புண்ணியள் கைகளில் போதமளி
மின்னுவில் லும்பாண மேவிபா சாங்குச மேந்தியவள்
தன்முலை பாரத்தைத் தாளாமுன் சாய்ந்தாளாம் தாயவளை
வன்னப்பே ரானந்த வாரியை அண்டி வணங்குவனே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...