அக்டோபர் 27, 2015

குறளின் குரல் - 1286

27th Oct, 2015

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.

                           (குறள் 1279: குறிப்பறிவுறுத்தல் அதிகாரம்)

பெண்ணினால் - பெண்ணவளால் (பெண்மையின் என்பதே பொருந்தும்)
பெண்மை உடைத்தென்ப - பெண்மை மிக்க கொண்டதுபோலாம்
கண்ணினால் - தம்முடைய கண்ணசைவாலேயே
காமநோய் சொல்லி - தன்னுடைய காதல் துன்பத்தை கூறி
இரவு - வேண்டுதல் (தலைவனோடு உடன் போகுதலை)

இக்குறளின் முதற்சொல் சற்று குழப்புவதாக உள்ளது. மூன்றாம் வேற்றுமை உருபான “ஆல்” விகுதி பெண் என்ற சொல்லோடு சேர்ந்து, “பெண்ணைக் கொண்டு” என்று பொருளாகிறது. “பெண்ணைக்கொண்டு பெண்மை உடைத்து என்ப” பொதுவாக, சரியானச் சொற்றொடராகத் தெரியவில்லை.  ஒருவேளை, பெண்களே கூறிப் பெருமைகொள்ளத்தக்க பெருமை என்று வேண்டுமானாலும் கொள்ளலாம்.

மணக்குடவர், பரிமேலழகர் முதல் மற்ற நவீன உரையாசிரியர்கள் வரை, எல்லோரும் இதைப் விளக்காமல், “பெண்மைக்கே பெண்மை கொண்டாற்போல” என்று பொதுவாக பொருள் தோன்ற உரை செய்துள்ளனர். இது குருட்டுத்தனமாகச் செய்யப்பட்டதாகவே தோன்றுகிறது. குறளைப் படிமம் எடுத்ததில் தவறிருந்திருக்கலாம்.  எவ்வாறிருந்தாலும் வள்ளுவர் சொல்லவந்த கருத்து இதுவாக இருக்கலாம்.. இதுவும் அனுமானமே!

காதற்தலைவனுடைய பிரிவால் வந்த காதல் துன்பத்தை, வாயால் கூறி வேண்டாமல், கண்களின் அசைவாலேயே குறிப்பால் உணர்த்துகிற பெண்மை பெண்மையினும் சிறந்த பெண்மையை உடைத்ததாகிறது. அதாவது பெண்களே போற்றுகிற பெண்மையை உடையவளாக இருக்கிறாளாம் காதற்தலைவி. தம்மைவிட மற்ற பெண்களை எதிலும் சிறந்ததாகக் கொள்வது பெண்களுக்குப் பொதுவாக அரிதான செயல் என்பதால், வள்ளுவர், இவ்வாறு சிறப்பித்துச் சொல்லியுமிருக்கலாம். அதாவது, பெண்மையே சிறப்பு. அதனினும் சிறந்த பெண்மையை அப்பெண் உடைத்தவளாகிறாள்.  இக்குறளைத் தலைவனிடம் வேண்டுவதாகவும் கொள்ளலாம், அல்லது தோழியிடம் கூறி உடன்போகுதலுக்கு உதவக் கேட்பதாகவும் கொள்ளலாம்.

Transliteration:

peNNinAl peNmai uDaittenba kaNNinAl
kAmanOi solli iravu

peNNinAl – because of the lady (“Penamyin” would be meaningful here)
peNmai uDaittenba – has the quality that makes a fine lady
kaNNinAl – with movements in her eyes
kAmanOi solli – she would suggest and convey her pain of separation from beloved
iravu – and would request (to go with her beloved)

The first word of this verse is rather confusing; The 3rd declension in Tamil language is “Al” ending for common nouns, proper nouns and pronouns. When conjugating with the word “PeN” it would mean “with the girl”; it does not make sense to form a sentence “having finesse with the girl”; In a round about way, we may make sense out of the original tamil phrase as follows: “Even other ladies would praise her as one having finesse of a fine lady”. Since it is difficult for ladies in general to accept the finesse in other ladies in their own group, whole-heartedly, he could have used such a phrase. A little mischievous side of VaLLuvar! Regardless, the meaning of the verse is perhaps this:

Not saying out in words, about how much she would miss her lovers’ separation, her gesture using her eyes would convey that she was asking to go with him. Even other ladies would praise her finesse as a fine lady. Why is it so special? Perhaps because, it is rare for ladies to accept finesse in other ladies!

None from the earlier commentators such as ManakkuDavar, Parimelazhagar to present commentators have explained this properly; the commentary has been done rather blindly without clarifying the confusing usage in the first phrase. Perhaps the verse itself could have been wrongly copied to begin with. This verse again leaves an ambiguity and could be construed as being said to her friend or beloved, by the maiden.

“Hinting the painful disease of love through her eyes, to go with her beloved,
the maiden whose feminine finesse better than itself, would request subdued”

இன்றெனது குறள்:

கண்களால் காதலைச் சொல்லியுடன் செல்லவேண்டும்
பெண்மையின் பெண்மைகொள் பெண்

kaNgaLAl kAdalaich cholliyuDan chellavENDum
peNmaiyin peNmaikoL peN.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...