பிப்ரவரி 09, 2015

குறளின் குரல் - 1027

103: (Ways to upkeep the family - குடி செயல்வகை)

[The chapter is about upkeeping and even uplifting the family in stature or at least preserve and prevail. Since sense of shame is one of the important and fundamental aspects of how to keep the stature high and glorious, this has been kept after the chapter of “sensitivity to shame” ]

10th Feb 2015

கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும்
பெருமையிற் பீடுடைய தில்.
                    (குறள் 1021: குடி செயல்வகை அதிகாரம்)

கருமம் செய ஒருவன் - எடுத்துக்கொண்ட செயலை செய்யும்போது
கை தூவேன் - நடுவில் ஓய்வு கொள்ளேன் (வேலை முடியும் வரை)
என்னும் பெருமையிற் - என்று ஒருவர் கொள்ளும் குடிப்பெருமையினும்
பீடுடையது இல் - வலிமையுடையதும், மேலான பெருமை எதுவும் இல்லை.

ஒருவர் தாம் எடுத்துக்கொண்ட செயல்களில் சலிப்பில்லாமலும் ஓய்வு எடுத்துக்கொண்டு தொய்வு செய்யாமலும் இருக்கும் பெருமையிலும் மேலான பெருமை வேறு ஏதும் இல்லை. இதுவே ஒருவன் தாம் பிறந்த குடியின் பெருமையை நிலை நிறுத்தும் செயலுமாகும்.

Transliteration:

Karumam seyavoruvan kaithUvEn ennum
perumaiyiR pIDudaiya thil

Karumam seya oruvan – In doing what is undertaken
Kai thUvEn – having the resolve not to rest until completion
Ennum perumaiyiR – more than the glory that comes out of such resolve
pIDudaiya thil – greater glory is nil

There is no greater glory than having the resolve not to cease the effort or rest until complete, the undertaken, says this verse. Such resolve is the one which upkeeps the glory of the family too.
“No glory is greater than the resolve not to cease or rest
 Until the undertaken is complete to keep family the best”


இன்றெனது குறள்:

செய்யும் செயலை செயலொழியாச் செய்பீடின்
மெய்யாம் மேற்பெருமை இல்

seyyum seyalai seyalozhiyAch seipIDin
meyyAm mERperumai il

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...