டிசம்பர் 02, 2014

குறளின் குரல் - 957

96: (Noble Lineage -குடிமை )

[This chapter on noble lineage carries the general category name of the next section of thirteen chapters on lineage in this final part of canto on knowledge and practice. This chapter in particular deals with people of good lineage and their conduct. This applies to all classes of people (the four varNAs) as categorically declared by Parimelazhagar. Though later and neo interpreters of this work, in order to imply a social justice, because they have accepted and adopted and portrayed vaLLuvar as the foremost of all social scientists too, have ignored the concept of nobility by birth as well as lineage, and interpreted in general and nebulous terms, it is very obvious pouring through the work, it many places, vaLLuvar implies birth and lineage as factors of good traits]

2nd Dec 2014

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.
                                    (குறள் 951: குடிமை அதிகாரம்)

இற்பிறந்தார்கண் - நற்குடியில் பிறந்தவர்களிடம்
அல்லது இல்லை - அன்றி பிறரிடம் இல்லை
இயல்பாகச் - பிறப்போடு ஒட்டிவருவதாகிய, செயற்கையாக உருவாக்கப்பட்டதாக இல்லாமல்
செப்பமும் - நடுவு நிலைமை,
நாணும் - பழி மற்றும் பாவங்களுக்கு அஞ்சுகிற உள்ளம், சிந்தை
ஒருங்கு - அதுவும் இரண்டுமே ஒன்றாக (ஒன்றிருந்து மற்றொன்று இல்லாமல் இல்லை)

நற்குடிப் பிறப்பு பிறந்தார்க்கன்றி இயல்பிலேயே நடுவாண்மையான சிந்தனையும், பழி பாவங்களுக்கு அஞ்சி வாழுகிற நாணமுடமையும் ஒருங்கே இராது, என்கிறது இக்குறள்.

ஊராரை அடித்து உலையில் போட்டு உண்பவர்களும், பட்டம், பெரும்பதவி இவற்றால் சமூகத்தில் உயர்ந்தோரைப் போன்று தோற்றமளிப்பவர்களும், செல்வந்தர்களாகவும், சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களில் பலருக்கும் நடுவாண்மை கிடையாது, பழி பாவங்களுக்கு அஞ்சும் நாணமும் கிடையாது. நல்ல குலத்தில் பிறப்பது என்பதோ ஒருவருடைய ஊழ்வினை நற்பயன்களால் மட்டுமே என்று ஏற்கனவே வள்ளுவர் கூறியுள்ளார். கடவுள் நம்பிக்கை, ஊழ்வினை இவற்றில் நம்பிக்கை இல்லாதவர்களாக தம்பட்டம் அடித்துக்கொள்பவர்களும் கூட, ஊழ் அதிகாரத்தை கடக்காமல் திருக்குறளைப் படித்திருக்கமுடியாது.  சிலப்பதிகாரத்தின் “ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்” என்பதை நினைவில் கொள்ளாதிருக்கவும் முடியாது.

பிறப்பினாலே வருவதால் என்பதால், “இயல்பாக” என்று நயமாகக் கூறுகிறார்.வளர்ந்த சூழ் நிலைகளோ, கற்று வருவனவோ உண்டாக்கப் பட்டவை, செயற்கையானவை. அதேபோல், ஒருங்கு என்று சொல்வதால், நடுவு நிலைமையும், பழி பாவத்துக்கு அஞ்சுகிற தன்மையும் ஒன்றாக வருவதைக் குறிக்கிறார். இரண்டில் ஏதேனும் ஒன்று என்று சொல்லாமல், இரண்டையும் குறிப்பது சிறப்பாகும்.

சீதையைப்பற்றி அனுமன் வாயிலாகக் கூறும் கம்பர்,இற்பிறப் பென்பதொன்றும் இரும்பொறை என்பதொன்றும் கற்பெனும் பெயரதொன்றும் களிநடம் புரியக் கண்டேன்” என்று நற்குடிப் பிறப்பை முதலாவதாக வைக்கிறார். “குலம் தரும் செல்வம் தரும்” என்கிறது ஆழ்வார் பாசுரம். “வடிவும் தனமும் மனமும் குணமும், குடியும் குலமும் குடிபோகியவா” என்கிறார் அருணகிரிநாதர் கந்தரநூபூதியில். ஏற்கனவே அன்பு உடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்து அவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு” என்ற 681-ம் குறளையும் கண்டிருக்கிறோம். குலம், குடி என்பவை இரண்டு ஒரே பொருளைக் குறிப்பதை பல்வேறு இலக்கியங்கள் வாயிலாக அறிந்திருக்கிறோம். “இன்மை தீர்க்கும் குடி பிறந்தோயே”, என்று புறநானூறும், “குடிப்பிறப்பழிக்கும் விழுப்பங்கொல்லும்” என்று மணிமேகலையும் கூறுகின்றன.

Transliteration:

iRpiRandAr kaNalladu illai iyalbAga
seppamum nANum orungu

iRpiRandAr kaN – people of noble birth
alladu illai – but for them others don’t have
iyalbAga – in nature
seppamum – being impartial and fair
nANum – being shameful of blame and sin
orungu - together

Unless a person is of noble birth, mostly it is not in nature of a person to be impartial and fair; nor will he or she have a sense of shame for blames or sins.

There are many that swindle, loot the society that live with big decorations and positions; they also are rich and considerd elite of the society. In reality they have no fairness in them nor fear of blame or shame or sin. vaLLuvar has said,  noble birth is because of good deeds of earlier births. Even the persons that boast to have no faith in divinity or Godhead, could not have skipped the chapter on Fate in ThirukkuraL and the one of three tenets of ChilappadikAram – “Fate follows and decides the destiniy” (Uzhvinai urtthuvandhu Uttum)

The usage of word “iyalbAga” implies that good traits are the natural gifts of noble birth; What we learn as good traits are created or nurtured later.

The stress of “good lineage” is in many a literary works such as Kamba ramaayanam, AzhwAr pAsuramas, works of ArunagirnAthar, puraNanURu. The very word “iRpiRappu” has ben used by Kambar in his verse “iRpiRap penbadonRum irumpoRai enbadonRum”

“But for the people of noble birth, being impartial, and fair
 shameful of blame, and sin together are not in any heir”

இன்றெனது குறள்:

நாணம் நடுவாண்மை என்றொன்றாய் இல்லியல்பில்
மாண்குடித் தோன்றினார்க்கன் றி

nANam naDuvANmai enROnRAi illiyalbil

mANkuDit thOnRinArkkan Ri

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...