ஏப்ரல் 21, 2014

குறளின் குரல் - 732

21st Apr 2014

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
                        (குறள் 726: அவை அஞ்சாமை அதிகாரம்)

வாளொடு என்? - கொல்லும் படைக்கருவி என்ன தொடர்பு இருக்கமுடியும்?
வன்கண்ணர் அல்லார்க்கு - வீரமில்லாத ஒருவருக்கு?
நூலொடு என்? - கல்வியறிவு தரும் ஏட்டறிவோடு என்ன தொடர்பு இருக்கமுடியும்?
நுண் அவை - நுண்ணிய அறிவுளோர் நிறைந்த அவைதனில்
அஞ்சுபவர்க்கு - வாய் திறந்து பேச பயப்படுபவர்களுக்கு?

தீட்டிய கூர்வேலும் வாளும் வீரமற்ற ஒருவர் கையில் எதற்கு? அதுபோல, கற்றோர் நிறைந்த அவையில் பேச அஞ்சுபவர்க்கு நுண்ணிய நூலறிவோடு என்ன தொடர்பு இருக்கமுடியும்?  அருகதை இல்லாத ஒருவரிடத்தில் அவரது இயல்புக்கு ஒவ்வாத ஒன்று இருப்பதால் என்ன பயன் என்று கேட்பதன் வழியாக, நூலறிவுளோர், அவை அஞ்சாதிருக்க வேண்டியத் தேவையை வலியுறுத்துகிற குறள்.

இன்னா நாற்பது, வீரமிலார் கை படைக் கருவியைப்பற்றி, “ஆற்றல் இலாதான் பிடித்த படை இன்னா” என்று சொல்கிறது. திரிகடுகம் இதேபோன்று, “பல்லவையுள் அஞ்சுவான் கற்ற அரு நூலும், இம்மூன்றும் துஞ்சூமன் கண்ட கனா” என்கிறது. இவ்வதிகாரத்திலேயே பின்னால் வரும் குறளொன்று, கல்லாதவரை விடவும் கீழானவர், கற்றறிந்தும் கற்றோர் அவையினை அஞ்சு பேசாதிருப்பவர் என்று பொருளைச் சொல்லுகிறது.

Transliteration:

vALoDen vankaNNar allArkku nUloDen
nuNNavai anju bavarkku

vALoD(u) en – What would be the connection with a killing weapons
vankaNNar allArkku – to someone who is cowardly?
nUloD(u) en – With the great books of knowledge what would be the connection
nuNNavai – the assembly of deep erudtion
anjubavarkku – to someone who fears to open up and speak in such an assembly?

What use is it to have a sharp weapon for a coward who does not have the courage to face the opponent? Similarly what use is to be deeply studied in scriptures and books of knowledge for someone who cannot face an erudite assembly? In short, why should a precious and valuable thing be in the hands of somebody who does not deserve it in the first place – asks this verse to underline that though well versed with knowledge of books, a person who does not use it in a scholarly congregation, is not worth having such knowledge.

Reflecting the same thought, InnA nARpadhu says that one who does not have valor is unfit to handle a weapons. What vaLLuvar conveys here, is also said ThirikaDugam, another work on ethics, more directly. In a later verse in the present chapter also, vaLLuvar says even more forcefully that a leaned is worse than a lowly being when he cannot speak in the assembly of scholars.

“What use is to have weapons for someone who does not have courage and valor?
  What use it to be studied, if fearful of an assembly with knowledge spectacular?

இன்றெனது குறள்:


தீட்டியவேல் கோழைக்கேன்? முற்றவை அஞ்சுவோர்க்கு
ஏட்டறிவால் என்ன பயன்?

thITTiyavEl kOzhaikkEn? muRRavai anjuvOrkku
ETTaRivAl enna payan?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...