மார்ச் 02, 2014

குறளின் குரல் - 682

2nd Mar 2014

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.
                        (குறள் 676: வினைசெயல்வகை அதிகாரம்)

முடிவும் - செயல் முடிவுறும் வகையும்
இடையூறும் - செயல் செய்யுங்கால் வரும் தடையும்
முற்றியாங்கு - முடிந்து ஆங்கே
எய்தும் - அடைகின்ற
படுபயனும் - பெரும் பயனும்
பார்த்துச் - இன்னின்னவை என்றறிந்து
செயல் - வினையாற்றுக

இக்குறள் படிப்பதற்கும் பொருள் செய்வதற்கும் சற்று குழப்பமானதே. “முடிவும்” என்பது, “வினையின்” முடிவு என்ன என்பதைத் தெரிந்துகொள்ளுதல்; “இடையூறும்” என்பது, அவ்வினை செய்யுங்கால் பலவகையான் வரும் தடைகளும், இடையூறுகளுமாம்; “முற்றி ஆங்கு” என்பது முதலிரண்டு சொற்களோடு இணைந்து வருவதாகத் தோன்றினால் பொருள் சரியாக வராது. அது பின்னால் சொல்லப்படுகிற “எய்தும் படுபயனோடு” அதாவது “அடையும் பெரும் பயனோடு” சேர்த்து பொருள் கொள்ளப்படுவதாகும். வினையைச் செய்து முடிக்கும்போது, அதாவது, இவ்வினை இவ்வாறு செய்யப்பட்டு, இவ்வாறு முடியும் என்று அறிந்து, வரும் தடைகளையெல்லாம் நீக்கி, முடிவில் அடைகின்ற பெரும் பயனையும் இவையென்பதைக் கண்டு செய்வதே ஒரு வினைக்கு அழகு என்பதே இக்குறளின் பொருள்.

கி.வா.ஜாவின் ஆராய்ச்சிப் பதிப்பிலே இரண்டு பாடல்கள் முற்றுக் கருத்துத்தையும் காட்டுவதாகச் சுட்டப்படுகின்றன. ஒன்று பழமொழிப்பாடல், தெரிந்து செயல்வகை அதிகாரத்தின் எட்டாம் குறளுக்கு மேற்கோளாகச் முன்பே சுட்டப்பட்டது. (“ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப்படும்”).

 தற்றூக்கி, தன் துணையும் தூக்கி, பயன் தூக்கி,
மற்றவை கொள்வ, மதி வல்லார்; அற்று அன்றி,
யாதானும் ஒன்று கொண்டு, யாதானும் செய்தக்கால்,
யாதானும் ஆகிவிடும்.”

மற்றொறு பாடல் கம்பராமாயணத்தில் மந்திரப்படலத்தில் வருவது:

நல்லவும் தீயவும் நாடி நாயகற்கு
எல்லையில் மருத்துவன் இயல்பின் எண்ணுவார்;
ஒல்லை வந்து உறுவன உற்ற பெற்றியில்
தொல்லை நல்வினை என உதவும் சூழ்ச்சியார்”

பரிமேலழகர் உரையில், “முடிவு” என்பதை முயற்சி என்று கொண்டு, முயற்சி, தடைகள் இவற்றின் அளவினும் பயன் பெரிதாயின் அவ்வினையைச் செய்க என்று முடிக்கிறார். இது உண்மையே எனினும், முற்றிலும் தருவித்துக்கொள்ளப்பட்ட பொருளாகத்தான் எண்ணவேண்டியுள்ளது.

Transliteration:

muDivum iDaiyURum muRRiyAngu eidhum
paDupayanum pArththuch cheyal

muDivum – the way the undertaken task will end
iDaiyURum – while executing the task, the obstacles that are on the way
muRRiyAngu – when completes, there
eidhum - what one gets as
paDupayanum – big benefit
pArththuch – must be visualized and
cheyal – and the the task must be done

This verse is a little confusing to understand and write commnentary for, as it reads. Most commentaries are somewhat based on what Parimelazhagar wrote. The “um” ending in words “muDivu” and  “iDaiyURu” and the following word “muRRi” create that confusion. “mUDivum” should be taken as “the knowledge as to how the undertaken task will end”; “iDaiyURum” means “understanding of obstacles while doing the task”;  the phrase “muRRi Angu eidhum paDu payan” means, “understanding what the big benenfits it yields when the the task ends”;  Now when the verse is read, it means the following. When a task or project is done with the understanding of when and what will its end be, the obstacles while doing it (which in turn will give the knowledge to tackle them), and what would the big benefits be, by doing the project, then the project will yield the desired benefits.

Ki.vA.jA in his research edition, has cited two verses as reflecting the same thought – one from pazhamozhi nAnURu and the other one from Kamba RamAyaNam.

Parimelazhagar also interpretes the word “muDivu” as “effort” and further says, understand the effort and the obstacles in doing a projects if the outcomes is bigger that the combined effort and obstacles, one must undertake the project.

“Understand the end of, nature of obstacles and the big benefits
 of a taks before to do the it successfully to reap what it yields”


இன்றெனது குறள்:

செய்யும் வினையின் நிறைவு தடைமுடிவில்
எய்துபயன் கண்டறிந்து செய்

seyyum vinaiyin niRaivu thaDaimuDivil
eidhupayan kaNDaRindu sei

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...