ஜனவரி 01, 2014

குறளின் குரல் - 624

2nd Dec 2014

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்.
                            (குறள் 617: ஆள்வினையுடைமை அதிகாரம்)

மடியுளாள் - சோம்பலின் கண் இருப்பது
மாமுகடி என்ப - கரு நிறத்தளான மூதேவியாம் (தவ்வை)
மடியிலான் - அச்சோம்பல் இல்லாது தளராத தாளாண்மை (முயற்சி) உள்ளாரின்
தாளுளாள் - அடியிலே சேவகமும் செய்ய விரும்பியிருப்பாள்
தாமரையினாள் - தாமரையைக் கையில் ஏந்தியுள்ள திருமகள்

திருமகளின் அக்காளான மூதேவி (தவ்வை) என்பவள் சோம்பி இருப்பவள். அச்சோம்பலைத் தன்னகத்தே கொள்ளாமல், தாளாண்மையாகிய இடைவிடா முயற்சியுடையவர்களின் அடியிலே சேவகமும் செய்வாள் தங்கையான தாமரை மலர்களைக் கையிலேந்திய திருமகள். “மடியிலான் தாளுளாள்” என்றதினால், முயற்சியுளாரின் காலடியில் திருமகள் இருக்கிறாள் என்று பொருள் கொள்ளக்கூடாது. இறைக் குணம் என்பது தன்னடியார்களுக்கு சேவகம் செய்கின்ற குணமாகையால், அதைத்தான் முயற்சியுளார் தாளுளாள்  திருமகள் என்கிறார் வள்ளுவர்.

பொன்.சரவணன் என்கிற ஆய்வாளர் வள்ளுவரின் சமயச் சார்பின்மையை நிறுவும் வகையிலே, சில கேள்விகளை முன்வைத்து திருத்தங்களையும் முன் வைக்கிறார். சிந்திக்கவேண்டியவைதான். அவர் படிமம் எடுத்ததிலே பிழைகள் இருந்திருக்கலாம் என்ற பார்வையில், முகடி என்பதை முகரி (எருமை மாடு) என்றும், தா மரையின் ஆள்  (தாவிச் செல்லும் மான் போன்றவர்) என்று பிரித்தும் பொருள் கொண்டு, அதை நிறுவவும் செய்திருக்கிறார். ஆர்வமுள்ளவர்கள் கீழ் காட்டப்படும் இணையத் தொடர்பை சுட்டுங்கள், தட்டுங்கள் பொருளுக்கு (http://thiruththam.blogspot.in/2011/08/blog-post.html). ஆனால் இவருடைய நிறுவுகோளில் செய்துகொண்ட கருதலான “வள்ளுவர் கூறியது கூறலாகிய குற்றத்தைச் செய்திருக்கமாட்டார்”  என்பது ஒப்புக்கொள்ள முடியாதவொன்று. இதற்கு வலுவான காரணங்கள் உள்ளன; அவற்றை குறளுரையை நிறைவு செய்யும் நாளில் தனிக்கட்டுரையாக வெளியிடுவேன்.

Transliteration:
maDiyuLAL mAmugaDi enba maDiyilAn
thALULAL thAmaraiyi nAL

maDiyuLAL – The laziness is the place of
mAmugaDi enba – darker, elder sister (mUdEvi) of Goddess of wealth (sridEvi)
maDiyilAn – those who have persistent effort and are relentless, are not laggards
thALULAL – she serves under them (who)
thAmaraiyinAL – the goddess of wealth seated on lotus holding lotuses in her hands

Elder sister (mUdEvi) of Goddess of wealth (srIdEvi) is the symbol of lethargy, laggardness. Those who are on the move constantly, with zeal to take on more tasks to accomplish something significant in their lives will be served by the goddess of wealth that is seated on lotus holding lotuses in her hands. The expression of “maDiyilAn thALuLAL” should not be considered deragotory as if the Goddess is at the feet of zealous person of persistent effort. The Godliness as sung by many poets is in having the utmost humility to serve the people that worship. This is what is probably meant by vaLLuvar here.

Pon. SaravaNan, a researcher, to establish secularity of vaLLuvar, asserts that there could have been mistakes when people transcribed ThirukkuraL from palm leaves to paper earlier. He says the word “mAmugaDi” and “thAmaraiyinAL” must have been “mAmugari” and “thA marayin AL” respectively, meaning, “buffallo” and “hopping and running fast like a deer”. His interpretation is that laggards are likened to buffalos whereas zealous people of consistent, persisent effort are likened to a deer which is a symbol energy and action. The URL link, where this idea is written about is given above.  However his assumption that vaLLuvar would not have done the mistake repeating himself, is entirely wrong as it can be very easily established otherwise with strong reasons. When I complete this effort of mine, I will publish an article to that effect.

“Goddess of misfortune dwells with the idelers;
 wealth Goddess serves the persistent leaders“


இன்றெனது குறள்(கள்):

திருமகள் தாளாண்மை கொண்டார்க்கே அக்காள்
கருந்தவ்வை சோம்புவார்க் கண்

thirumagaL thALANmai koNDArkkE akkAL
karunthavvai sOmbuvAr kaN

To reflect the alternate thought expressed by the aforementioned researcher, here is another verse. Of course, by mentioning “kAlan Urthi”, it directly mentions a religious thought, but a well understood one!

தூங்கினோர் காலனூர்த்தி போன்றோர் முயற்சியில்
ஓங்கினோர் ஓடும்மான் போன்று

thUnginOr kAlanUrththi pOnROr muyarchiyil
OnginOr ODummAn pOnRu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...