அக்டோபர் 30, 2013

குறளின் குரல் - 560

30th Oct 2013

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.
                         (குறள் 553: கொடுங்கோன்மை அதிகாரம்)

தமிழிலே:
நாடொறும் - ஒவ்வொரு நாளும்
நாடி - நாட்டு மக்களின் குறைகளை, நாட்டின் நடக்கும் தீமைகளைத் தக்கவாறு ஆராய்ந்து
முறைசெய்யா - மக்களுக்கு வேண்டிய நீதிமுறையான ஆட்சியைத் தராத
மன்னவன் - நாட்டின் தலைவன்
நாடொறும் - ஒவ்வொரு நாளும்
நாடு கெடும் - தன்னுடைய நாட்டினரின் அன்பும், நாட்டுபற்றையும் இழந்து, விரைவில் தன் நாட்டையே இழந்து விடுவான்

இக்குறள், தன் நாட்டு மக்களின் குறைகளை, நாட்டில் நடக்கும் தீமைகளை ஒவ்வொரு நாளும் ஆராய்ந்து, அவற்றைத் தீர்க்கும்படியான நீதிமுறையான ஆட்சியைத்தராத ஒரு கொடுங்கோல் மன்னன் (கொடுங்கோல மன்னன் என்பதை நாமே உள்ளுரையாக பொருள் கொள்ளவேண்டியது), அதனாலேயே நாள்தோறும் சிறிது சிறிதாக தம் நாட்டையே இழந்துவிடுவான் என்கிறது.  அது எவ்வாறெனின், கொடுங்கோல் ஆட்சியால் நாட்டு மக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் இழக்கும் அரசன், உள்நாட்டிலேயே உருவாகும் எதிரிகளாலோ, அல்லது வெளிப்பகையினாலோ சிறிது சிறிதாக அழிந்துபடுவான்.

இக்குறளைக் கூர்ந்துபடித்தால், இதில் நீதிமுறையில்லா மன்னன் என்றது முறையறியா மன்னன், அறிந்தும் சரிவர தன்கடமையைச் செய்யாதவன் என்று கொள்ளலாமே தவிர கொடுங்கோல் மன்னன் என்பது தருவித்துக்கொள்ளப்பட்ட கருத்தேயாகும். செங்கோல் ஏந்தியமைக்கு முறை செய்யாத மன்னன் என்பதால், கொடுங்கோலான் என்பது தானாக வரும் பொருளெனில், பொருந்துகிறது.

முதுமொழிக்காஞ்சி, “ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம் முறையில் அரசன் நாடுதல் கூர்ந்தன்று” என்று இக்குறளை ஒட்டிச் சொல்கிறது.

திருமூலரின் திருமந்திரப்பாடல், ஒன்றும் இக்குறளின் கருத்தை ஒட்டியதே.

நாடோறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாடொறும் நாடி அவன்நெறி நாடானேல்
நாடோறும் நாடுகெடும் மூடம் நண்ணுமால்
நாடோறுஞ் செல்வம் நரபதி குன்றுமே"

"ஆவையும் பாவையும் மற்றற வோரையுந் தேவர்கள் போற்றுந் திருவேடத்தாரையுங் காவலன் காப்பவன் காவா தொழிவனேல் மேவும் மறுமைக்கு மீளா நரகமே" என்றும், செங்கோல்முறை தவறும் மன்னர்க்கு நரகமே என்றும், அவரே கூறுவார்!

Transliteration:
nADoRum nADi muRaiseiyA mannavan
nADoRum nADu keDum

nADoRum – Every day
nADi – keeping a vigil on citizens woes and problems
muRaiseiyA – not giving the just rule for his citizens
mannavan – such a ruler
nADoRum – day by day
nADu keDum – will lose the love and loyalty of his citizens and lose control of his country and lose his country itself

This verse alludes that a ruler who does not tend to his citizens woes on a daily basis, is directly or indirectly a despotic ruler and such a ruler will lose the love and loyalty of his countrymen to eventually lose his country itself to his enemies within and external. In a roundabout way, this verse defines what a despotic ruler would do and what would be the consequences for him and for his country.

On careful reading this verse seems to only talk about careless and cleless ruler, not a tyrannical ruler. There are poetical verses in Sangam literature “Mudumozhi kAnchi” and ThiurmUlar’s Thirumanthiram that reflect the idea of this verse also.

“Ruler not keeping vigil on his citizens woes daily, and renders justice promptly
 Will lose the love and loyalty of citizens, day by day and lose the country swiftly”

இன்றெனது குறள்:

நாட்டோர்க்கு நாள்தோறும் நீதிசெய்யான் நாடிழந்து

வாட்டமுற்று வீழும் விரைந்து

nATTOrkku nALthORum nIdiseyyAn nADizhandhu
vATTamuRRu vIzhum viraindhu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...