ஆகஸ்ட் 03, 2013

குறளின் குரல் - 472


3rd Aug 2013

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.
                          (குறள் 465: தெரிந்துசெயல்வகை அதிகாரம்)
Transliteration:
vagaiyaRach ChUzhA dhezhudhal pagaivaraip
pAththip paduppadhoa rAru

vagaiyaRach – the ways to quell
ChUzhAdh(u) - without assessing
ezhudhal – rising against (enemies)
pagaivaraip – Such enemies
pAththip paduppadh – To place permanently in their ground
OrAru – a way


One must completely think about the consequences of what rising against the presumed or real enemies would bring forth. If not, the enemies will stand in their enmity, on the grounds and stay put permanently so. vaLLuvar does not preach not to rise against the enemies, but to think about the consequences completely. Kambar also says to be clear about the enemies and what will befall as bad” before charging against.

In a later chapter of knowing the strength of enemies, another verse, “ vagaiyaRindhu thaRseidhu thaRkAppa mAyum pagaivargaL paTTa serukku”. Only when somebody thinks through and strengthens self appropriately and finds ways to protect self, the arrogance of enemies will be subdued.

Rising against the enemies, without fully, assessing how to quell
Makes them stay put in the ground they stand, permanenltly well.

தமிழிலே:
வகையறச் - இல்லாமால் இருக்கும் வகையினை (பகைவர்கள்)
சூழா(து) - ஆராயாமல்
எழுதல் - அவர்களை வெற்றி கொள்ளுவோம் என்று எழுதல்
பகைவரைப்  - அப்பகைவர்களை
பாத்திப் படுப்ப(து) - அப்பகை நிலையிலேயே நிறுத்துகிற
ஓராறு - ஓரு வழியாகும்

தமக்கு எதிராக பகையும், பகைவர்களும் இல்லாதிருக்கும் வழிகளை முற்றிலுமாக ஆராயாமல் பகையென்று கொண்டவர்களுக்கு எதிராக எழுதல்,  அப்பகையினையும், அப்பகைவரையும் உறுதியாக்கி, அவர்களைப் பகை நிலையிலேயே நிலையாக இருத்தி வைப்பதாகும்,  “என்னென்றூம் தெளிதல் தேற்றாம் யாவதீ தென்று ஓராம்” என்பார் கம்பர்.

பின்பு வரப்போகும் பகைத்திறம் தெரிதல் அதிகாரத்தில் வள்ளுவர் கூறுகிறார் இவ்வாறு: வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கண் பட்ட செருக்கு”. வழிவகை உணர்ந்து, தன்னையும் வலிமைப்படுத்திக் கொண்டு, தற்காப்பும் தேடிக் கொண்டவரின் முன்னால் பகையின் ஆணவம் தானாகவே ஒடுங்கி விடும்

இன்றெனது குறள்(கள்):

முற்றவெண்ணா மூள்வ தறியாது செற்றவுன்னல்
பற்றிநிலை யாக்கும் பகை
muRRumeNNAr mULva dhaRiyAdhu seRRavunnal
paRRinilai yAkkum pagai

முற்றுமெண்ணார் மூள்வ தறியார் படையெடுத்தால்
பற்றிநிலை யாக்கும் பகை
muRRumeNNAr mULva dhaRiyAr paDaiyeDuththAl
paRRinilai yAkkum pagai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...