25th April 2013
ஆரா இயற்கை
அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை
தரும்.
(குறள் 370: அவாவறுத்தல் அதிகாரம்)
Transliteration:
ArA iyaRkai avAnIppin annilaiyE
peRa iyaRkai tharum
ArA – insatiable, ravenous
iyaRkai – nature it has (which has that?)
avA – desire (it is by nature insatiable)
nIppin – If relinguished
annilaiyE – that state itself (the relinquished state)
peRa - permanent
iyaRkai – nature
tharum – will give.
As the
last verse of this chapter, vaLLuvar gives the nature of desire being a
permanent lure and by that he suggests that it is an arduous and continuous
task on somebody’s part to keep it under check; to keep rejecting it.
Successfully having removed the onslaught of desires, one gets it in nature to
be placed in a lasting life of happiness, suggesting heavenly abode and the
state of not being born again.
Insatiable quench is desire’s
nature, and if renounced
Gives a lasting presence, and in
heavens to be placed
தமிழிலே:
ஆரா - எப்போதும் தீராத,
இயற்கை - இயல்பை உடையது
அவா - ஆசையெனப்படுவது
நீப்பின் - அந்த ஆசையெனும் தொடரும்
தூண்டிலை துறந்தால்
அந்நிலையே
- அத்துறந்த நிலையே
பேரா - நிலைத்திருக்கும் (வாழும்
வானோருலகில் வாழும் என்று கொள்ளலாம்)
இயற்கை - இயல்பைத்
தரும் - கொடுக்கும்
இவ்வதிகாரத்தின் இறுதியாக இக்குறளில், வள்ளுவர் ஆசையின்
இயல்பே, அது தீராமல் தொடரும் ஈர்ப்பாக இருப்பதுதான் என்கிறார். மேலும் அவ்வீர்ப்பைத்
துண்டித்துவிட்டால், நிலையான வாழ்வை (இது பிறந்து
முடிந்து வானோருலக வாழ்வு என்று முன்பே பலமுறை சொல்லியிருக்கிறார்) இயல்பாகத் தரும்
என்று சொல்லி முடிக்கிறார்.
ஆசை என்பது மேலும் மேலும் தூண்டி ஒருவரை தன்னிலிருந்து
நீங்காத்தன்மையைத் தருவது. பரிமேலழகர் உரை மிகவும் விரிவாய் இக்குறளைப் பற்றி பேசுகிறது.
அவரது உரையில் “பேரா இயற்கை என்பதற்கு அளிக்கும் விளக்கம் இது. “களிப்புக்கு கவற்சிகளும்
பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களும் முதலாயின இன்றி, உயிர் நிரதிசய இன்பத்தாய் நிற்றலின்
வீட்டினை 'பேரா இயற்கை' என்றும், அஃது அவாநீத்த வழிப்பெறுதல் ஒரு தலையாகலின், 'அந்நிலையே
தரும்' என்றும் கூறினார்.”
மேலும் திருவாய்மொழியிலிருந்து அவர்கூறும் மேற்கோள்:
“ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ் உலப்பிலதனை உணர்ந்துணர்ந்து, சென்றாங்கு இன்பத்துன்பங்கள்
செற்றுக்களைந்து பசையற்றால், அன்றே அப்போதே வீடும் அதுவே வீடு வீடாமே. (திருவாய்
78-6)”. வேட்கையின் ஆராமையைப்பற்றி மணிமேகலை கூறூவது: “வேட்கை விரும்பி நுகர்ச்சி ஆராமை”.
இன்றெனது குறள்:
நிறைவேயில் வேட்கைகள் நீங்கிட நீங்கா
துறைந்திடும் இன்பம் வரும்
niRaivEyil vETkaigaL nIngiDa nIgA
thuRaindhiDum inbamum varum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam