ஏப்ரல் 19, 2013

குறளின் குரல் - 372


19th April 2013

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது

வாஅய்மை வேண்ட வரும்.
                            (குறள் 364: அவாவறுத்தல் அதிகாரம்)

Transliteration:
thUuymai enbadhu avAvinmai maRRadhu
vAaymai vENDa varum

thUuymai enbadhu – that which shows a purity in a person
avAvinmai – is the desireless state of mind;
maRRadhu – other than that
vAaymai – the truthfulness that ascetics seek
vENDa varum – it will come to a only when desire that higher truth

The purity in a person comes with the desireless state of mind. The desireless stated of mind comes only when the person desires to seek and learn the higher truth. The people that are desire free will have no compulsions to say lies and hence the desireless state of mind is said to the foremost to practice. When practiced it makes a person pure; hence both purity while living and the attaining higher truth in order not to have any more birth are related and tied to each other.

“Purity of heart and mind is born out of desireless state;
 Also it is attained only when the higher truth is sought”

தமிழிலே:
தூஉய்மை என்பது - ஒருவரைத் தூயவராக காட்டுவது
அவாவின்மை - அவரது மனத்துக்கண் ஆசையாம் மாசின்மையே
மற்றது
 - தவிரவும் அது
வாஅய்மை - உண்மைபொருளாம் மெய்ப்பொருளை
வேண்ட வரும் - மட்டுமே விரும்புதலால் ஒருவருக்குக் கிடைக்கக்கூடியது

ஒருவரின் தூயத்தன்மை என்பது, அவரது மனத்துக்கண் ஆசையெனும் மாசு இல்லாமையே. அதுவும்கூட, (ஆசையற்ற நிலை) மெய்ப்பொருளைத் வேண்டிப் பெறுவோருக்கே கிடைக்கப்பெறும்.  ஆசைகளற்ற ஒருவருக்கு பொய்களைச் சொல்லவேண்டிய கட்டாயங்கள் இல்லை. இதனாலேயே ஆசையற்ற மனத்தராகும் பயிற்சி ஒருவருக்கு இன்றியமையாததாகிறது. அப்பயிற்சி ஒருவரை தூயவராக ஆக்குகிறது. வாழும்போது தூய்மையும், உயர் மெய்ப்பொருளைத் தேடி அடைவதும், மீண்டும் பிறவாது வீட்டுப் பேற்றினை அடைவதற்கான வழிகள்.

இன்றெனது குறள்:
மனத்துக்கண் மாசின்மை ஆசையறல்- வாய்மைத்
தனத்திலது வாய்க்கப் பெறும்

manaththukkaN mAsinmai AsaiyaRal vAimaith
thanaththiladhu vAikkap peRum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...