ஏப்ரல் 14, 2013

குறளின் குரல் - 367


14th April 2013

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.
                            (குறள் 359: மெய்யுணர்தல் அதிகாரம்)

Transliteration:
chArbuNarndhu – understanding attachments are against the pursuit to higher truth
chArbu keDa – for such attachments to be quelled
ozhugin – if a person (ascetic) practices and treads the austere path
maRR(u) azhiththuch – further to be doomed
chArtharA – will not give attachments
chArtharu – that which gives attachments
nOi – the misery yielding (though seem pleasurable) worldly draws

The verse has been cleverly framed with the word “chArbu” meaning, ”attached to something”. The first word “chAbuNarndhu” can be interpreted in two different ways.  Most commentators interpret this as “realizing the higher truth”, which is said in the context of ascetics, though generally applicable to everyone.

In other places in the verse, the same word “chArbu” means, attachment to something.  Hence we can intrepret this as “understanding the repurcussion of having attachment”.

The meaning of this verse is: Holding on to the higher truth and understanding it, for those who are practicing detachment, the lures of this world which are nothing but the source misery, will not be able to lure with anymore attachments.

If the previous paragraph is confusing, it is intended to be so, by the way vaLLuvar has constructed the verse. Though he is frugal in word usage, the meaning is rather convoluted in this verse.

The same concept has been said citing the verse of vaLLuvar in “thirukkaLiRRuppaDiyAr” of “uyyavandha thEvA nAyanAr”.

“Realizing the higher truth, if an ascetic practiced, the detachement,
 The lures that are misery otherwise won’t bring more attachment”

தமிழிலே:
சார்புணர்ந்து - பற்றென்பது மெய்ப்பொருளுணதற்கு ஒவ்வாதென்றுணர்ந்து (இதை சார்ந்திருக்க வேண்டுவதான மெய்ப்பொருளை அறிந்து என்றும் கொள்ளலாம்)
சார்பு கெட - அத்தகையப் பற்றென்பது கெடுமாறு
ஒழுகின் - ஒருவர் பழகி அதன்வழி நடந்திட
மற்று அழித்துச் - பின்னும் கெடும்படியாகப்
சார்தரா - பற்றுகளைத் தந்திடா
சார்தரு - பற்றுகளைத் தருகின்ற
நோய் - துன்பமேயான (இன்பம் போல் தோன்றினாலும்) உலகியல் ஈர்ப்புகள்.

“சார்பு” என்றச் சொல்லைச் சார்ந்து இக்குறளைப் புனைந்திருக்கிறார் வள்ளுவர்.  முதற்சீரான “சார்புணர்ந்து” என்ற சொல்லை இருவிதமாகப் பொருள்கொள்ளமுடியும். “துறவறம் மேற்கொண்டவர்கள் (பொதுவாக எல்லோருமே) சார்ந்திருக்க வேண்டியதான மெய்ப்பொருளை அறிந்து” என்பது பொதுவாக அனைத்து உரையாசிரியர்கள் கொண்டிருக்கும் பொருள்.

மற்ற இடங்களில் சார்பு என்ற சொல், பற்றினைக் குறிப்பதால், பற்றினைப் பற்றியுணர்ந்து என்ற அளவிலும் பொருள் செய்யலாம். அதாவது “பற்றென்பது மெய்ப்பொருளுணதற்கு ஒவ்வாதென்றுணர்ந்து” என்றும் கொள்ளலாம்.

பற்றிக்கொள்ளவேண்டியதான மெய்ப்பொருளை உணர்ந்து, பற்றென்பது இல்லாமல் கெடுமாறு பழகி, அதன் வழி நடந்திட, பின்னும் கெடும்படியாக எவ்விதப்பற்றினையும் தந்திடா, பற்றுகள் என்னும் துன்பமேயான உலகியல் தூண்டில்கள், ஈர்ப்புகள். 

சொல்லவேண்டிய கருத்தைச் சுருக்கமாகக் குறள்வடிவில் வார்த்தைச் சிக்கனத்தோடு சொன்னாலும், பொருளளவில் மூக்கைச் சுற்றித் தொட்டவகைதான் இக்குறள்.

திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார் இயற்றிய மெய்கண்ட சாத்திரங்களில் ஒன்றாம் திருக்களிற்றுப்படியாரில், இக்குறளை மேற்கோளாகக்கொண்டே கீழ் காணும் பாடல் வருகிறது

“சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகின் என்றமையால்
சார்புணர்தல் தானே தியானமுமாம் - சார்பு
கெடஒழுகின் நல்ல சமாதியுமாம் கேதப்
படவருவ தில்லைவினைப் பற்று”

இன்றெனது குறள்:

பற்றவருந் துன்பங்கள் பற்றாவாம் மெய்ப்பொருளை
முற்றுணர்ந்து பற்றறுத்த வர்க்கு.

paRRavarun thunbangaL paRRAvAm meipporuLai
muRRuNarndhu paRRaRuththa varkku

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...