ஏப்ரல் 01, 2013

குறளின் குரல் - 354


1st April 2013

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.
                         (குறள் 345: துறவு அதிகாரம்)

Transliteration:
maRRum thoDarpADu evankol piRappaRukkal
uRRArkku uDambum migai

maRRum - other
thoDarpADu – attachments that are not natural to ascetic pursuit
evankol – why should have?
piRappaRukkal – the pusuit to be rid of another birth (renounced path)
uRRArkku – the pursuant (ascetic)
uDambum – when even the body they are carrying
migai – is excess

This verse asks a question: Those who are austere pursuants of penitence, seek to severe the chain of life on this earth to reach higher Godhead. For them even this body that’s bearing the soul is an excess and an annoyance. When such is the case, why should they indulge in other attacments or the connections that give them?

Now another question! Why is the body an excess? The senses of this body and the interests of these senses create attachments on worldly things and pleasures. Hence it becomes a burden and an excess for an ascetic pursuant. Why then, should there be other attachments of external world be for them? There should not be any - is what is implied by asking that question.

Though not directly connected to this verse, the questions that must be asked herem are a few! Does the body bear the soul or is it the otherway around? If we think deeply, life is the seed. When it forms in the womb, it grows a body around itself until it is ready to venture in to the world from the safe haven of the womb. When it is out in the world, it further grows the body, and succumbs to the desires of the body; when the body is finally incapacitated due to the gyrations of life, the body it so gleefully grew becomes a burden for the same and it gives it up and ready to  move on to yet another journey. The body that was the conduit of pleasure becomes a burden. Though the  body bears the life outwardly, the truth is that the soul bears the body and hence  the body is the burden for the soul.  This is also quite contrary to the rules of the physical world. That which is formless, or stateless on its owm, the life, only known by the body in which it resides, bearing the burdne of a formful body is a wonder of wonders

“Why have other attachments for austere pursuant for severance
Of life on earth, for whom even the body is an excess, annoyance”

தமிழிலே:
மற்றும் - வேறு பிற
தொடர்ப்பாடு - தொடர்புகளாகிய பற்றுகளும்
எவன்கொல் - ஏன் ஒருவருக்கு வேண்டும்?
பிறப்பறுக்கல் - மீண்டும் பிறக்கும் துன்பம் வேண்டாது,
உற்றார்க்கு - துறவறத்தில் நோற்பாருக்கு
உடம்பும் - அவர்களுக்கு அவர்களுடைய உடலும் கூட
மிகை - மிகுதியான சுமையன்றோ?

இக்குறள் கேட்கும் கேள்வி: துறவறத்தை மேற்கொண்டவர்களோ, பிறவிப்பிணியை அறுத்துப் பேரின்ப நிலையை அடைவதற்கான தவத்தை மேற்கொண்டவர்கள். அவர்களுக்கு, ஆத்மாவைச் சுமந்துக்கொண்டிருக்கும் உடலும் மிகுதியே. அவ்வாறு இருக்கையில், அவர்களுக்கு வேறு பிற தொடர்புகளும், அவற்றின் காரணமாய பற்றுகளும் ஏன்?

உடம்பு ஏன் மிகுதியாயிற்று? உடம்பின் கண்ணே பொறிகளும், பொறிகளின் வழி அவாக்களும், வேட்கைகளும், பற்றுகளும் உண்டாகக் காரணமாதலின், உடம்பே ஒரு அதிகமாகிறது, சுமையுமாகிறது. உயர் பொருளாம் பரமாத்ம பேரின்பத்தை அடைய துறவு மேற்கொண்டவர்களுக்கு, ஏன் புறம் நோக்கிய வேறு பற்றுகள் ஏற்படவேண்டும்? கூடாது என்பதைச் சொல்ல எழுப்பப்படும் கேள்வியிது.

இக்குறளுக்கு நேரடியாகத் தொடர்பில்லாவிட்டாலும், கேட்கப்படவேண்டிய கேள்விகள்: உடம்பு ஆன்மாவைச் சுமக்கிறதா? ஆன்மா உடம்பை சுமக்கிறதா? ஆழ்ந்து சிந்தித்தால் கரு என்பது உயிர், அது உருவாகி, தன்னைச் சுற்றி ஒரு உடலத்தை வளர்த்து, பிறகு அந்த உடல்வழி பொறிகளின் விருப்புக்கு ஆட்பட்டு, அவ்வுடலம் நைந்து போனபின், அதைவிட்டு பிரிந்தும் போவதால், உயிருக்கு உடல் ஒரு சுகமாகவும், பின்பு சுமையாகவும் போகிறது. உடம்பினுள் உயிர் இருந்தாலும், உடலைச் சுமப்பது உயிரே. இது பௌதீக விதிகளுக்கு மாறுபட்டது. உருவமில்லாது, தான் சார்ந்திருக்கும் உடலையே தானாக வெளிப்படுத்தும் உயிர் அருவமானது, அது உடலைத் தாங்குவது ஒரு பேரதிசயம்.

சடாயு உயிர் நீத்த படலத்தில், கம்பர் இக்குறளின் கருத்தின் போக்கிலே எழுதிய வரிகள் இவை: “உடலமும் மிகையென்றெண்ணுவீர்” என்றும், “உடற் பொறை துறந்துயர் பதம் புக்க”. வளையாபதியின் ஆசிரியர், முற்றுக்கருத்தையும் திருக்குறளையே மேற்கோள் காட்டி, “ மற்றுந் தொடர்பாடெவன் கொல் பிறப்பருக்கல் உற்றார் குடம்பும் மிகை இசையுள் வழி” என்று பாடியிருப்பார்.

இன்றெனது குறள்:
உடற்சுமை தானறுக்க நோற்பார்க்கு மற்றோர்
தொடர்புலகில் வேண்டல் எதற்கு?

uDarsumai thAnaRukka nORpArkku maRROr
thoDarbulagil vENDal edhaRku?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...