மார்ச் 01, 2013

குறளின் குரல் - 322


1st March 2013

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
                       (குறள் 314:  இன்னாசெய்யாமை அதிகாரம்)

Transliteration:
innAsei dhArai oRuththal avarnANa
nannayanj seidhu viDal

innA seidhArai – A person that causes harm, hurt to another
oRuththal – to punish that person
avar nANa – is to make him feel ashamed (for his hurtful deeds)
nannayanj – unexpected good
seidhu viDal – doing it the person caused harm.

Most often quoted advice and the one which proves to preach is easier than to practice, including for the people that preach. Very often this question of why unlike in other world cultures and languages,there is so much of emphasis, importance and literary works on morality, coms to mind. We often answer to ourselves  with pride that we have been so evolved for over many thousand years. May be the answer has a component that indicate the moral deficiency of society during all these centuries by people of elevated thinking during these times. Unless there was a need to write about something, why would people imagine moral deficiencies and keep writing how to correct them and how to live well as human beings etc!

This is the substance of this verse: When someone does harm causing hurt to another, it is very natural to think about retaliating and punish. The best punishment would be to do extreme and unexpected good and make the person feel ashamed for the deeds that caused harm to others .

Therer is a beautiful poem expressing the same thought in Sangam lore “Kurunthogai” , by a poet “OrampogiyAr”. In his poem on land “Marudham”,  he depicts a scenario, where the man of the house, forgetting that his life partner has been instrumental for his wealth and success, goes to other women and comes back to his wife with the tell-tale signs.  Wife hides this “ignoring deed” that is hurtful and harm done to her and marriage, welcoms him with a smile, hiding her hurt too. This makes the man of the house to feel ashamed. “kaNchiyUran koDumai karandhanaLAgalin nANiya varumE”

Naladiyar, another Sangam time literary work, has expressed the same thought. “upakAram seydhadhani OrAdhE thangkaN apakAram ARRach cheyinum – upakAram thAm seiva dhallAl thavaRRinAl thIngkUkkal vAnthOi kuDippiRandhArk kil” Interesting to note the usage of Sanskrit words upakAram and abakAram” in early AD works.

“To best punish the person that does harm
 is to do extreme good to put him in shame”

தமிழிலே:
இன்னா செய்தாரை - துன்பஞ் செய்யும் ஒருவரை
ஒறுத்தல் - தண்டிப்பது என்பது
அவர் நாண - அவர் வெட்கும்படியாக
நன்னயஞ் - அவருக்கு நன்மை தருவனவற்றைச்
செய்து விடல் - செய்துவிடுவதுதான்

மிகவும் அறிவுரையாகக் கூறப்படும் குறள் இது. ஆனால் ஒருவரும் இவற்றை பழக்கத்தில் கொண்டுவருவது இல்லை, அறிவுரை கூறுபவர்கள் உட்பட. மற்ற கலாச்சாரங்களிலும், மொழிகளிலும் இல்லாத அளவுக்கு, ஏன் இந்திய மொழிகளான சமஸ்க்ருதத்திலும், தமிழிலும் மட்டும் நீதி நெறி நூற்கள் ஏராளமாக எழுதப்பட்டன என்ற கேள்விக்கு, நாம் சிந்தனையில் உயர்ந்திருந்த சமுதாயத்தினர் என்று மார்தட்டிக் கொள்ளுகிறோம். மக்களிடையே கண்ட ஒழுக்கக்குறைபாடுகளை, மானுட வாழ்வியல் சிக்கல்களின் காரணங்களைக் கண்ட அறிவில் உயர்ந்தோர் மக்களுக்கு மீண்டும் மீண்டும் எழுதிவைத்துச் சென்ற அறிவுரைகள்தாம் இவை.

இக்குறள் சொல்லும் கருத்து: தமக்குத் துன்பம் விளைவிக்கும் செயல்களை ஒருவர் செய்தால், அவரைத் தண்டிக்கவேண்டும், சரியான எதிர்வினையாற்ற வேண்டும் என்கிற முனைப்பு ஏற்படும். தண்டனை என்பது, அறிவுறுத்தித் திருத்துவதற்காகத்தான். துன்பம் விளைவித்தவரே வெட்கித் தலைகுனிந்து, வருந்தும்படியாக அவருக்கு நன்மைகளை செய்வதே தகுந்த தண்டனை என்கிறார் வள்ளுவர்.

கி.வா.ஜ அவர்களின் ஆராய்ச்சி உரைத் தொகுப்பு, குறுந்தொகையிலிருந்து ஓரம்போகியாரின் மருதநிலப்பாடலை எடுத்துக்காட்டுகிறது. அதில் மருதநிலத் தலைவன், தன்னுடைய செல்வத்துக்கும் வெற்றிக்கும் காரணமான தலைவியை விட்டுப்பிரிந்து பரத்தையரிடம் கூடி, அதன் அடையாளங்களுடன் தன்மனைக்குத் திரும்பினான். அவனுடைய புறக்கணிக்கும் கொடுமையை பிறர்க்குத் தெரியாதவண்ணம் மறைத்து, அவனை இன்முகம் காட்டி வரவேற்று, அவன் செயலுக்கு, அவனையே நாண வைக்கிறாள். அதைச் சுவையாகக் கூறுகிறது இந்த இலக்கியப்பாடல்.

“யாயா கியளே விழவுமுத லாட்டி
பயறுபோ லிணர பைந்தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்
காஞ்சி யூரன் கொடுமை
கரந்தன ளாகலின் நாணிய வருமே. “

நாலடியாரின் ஒருபாடலும் இக்குறளின் கருத்தையொட்டியுள்ளது. பொருள் எளிதில் விளங்கக்கூடிய பாடல். நாலடியார் எழுதப்பட்டகாலத்திலேயே வடமொழிச் சொற்கள் பாடல்களின் விரவியிருந்ததைக் காட்டும் பாடலும் கூட. உபகாரம், அபகாரம் போன்றவை சமஸ்க்ருதச் சொற்கள்.

உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண்
அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரம்
தாம்செய்வ தல்லால் தவற்றினால் தீங்கூக்கல்
வான்தோய் குடிப்பிறந்தார்க் கில்.

இன்றெனது குறள்:
துன்புசெய்வோர் வெட்குமாறு நன்மையினைச் செய்தலினும்
பின்னுமொரு தண்டனையே இல்
thunbuseyvOr veTkumARu nanmaiyinaich cheidhalinum
pinnumoru thaNDanaiyE ili

மாற்றாக 02/15/2022 அன்று எழுதியது:
=============================
துன்புசெய்வோ வெட்கமுறத் துய்க்கநலம் செய்தலினும்
இன்னுமொரு தண்டனையே இல்
thunbuseyvOr veTkamuRat tuykkanalam cheidalinum
innumoru daNDanaiyE ill

2 கருத்துகள்:

  1. Dear Ashok Subramaniam
    I accidentally stumbled upon your blogspot on a rare free sunday while seraching for anger in tamil. I have no words describe enormity of your work I appreciate the great work you are doing.
    Dr.d.srinivasan
    Coimbatore

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Dear Dr. Srinivasan:

      I appreciate your taking time to write encouraging words. This has become part of my daily routine and I enjoy sharing my reading and understanding with others.

      நீக்கு

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...