அக்டோபர் 24, 2012

குறளின் குரல் - 195


24th October, 2012

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.
                              (குறள் 186: புறங்கூறாமை அதிகாரம்)

Transliteration:
piRanpazhi kURuvAn thanpazhi yuLLum
thiRantherindhu kUrap paDum

piRanpazhi  - slanderous talk about others
kURuvAnthan – that who does so
pazhiyuLLum – among his misdeeds
thiRantherindhu – the worst of them that will bring pain to him
kUrappaDum – will be talked about by others

 “As you sow so shall you reap” is a simpler form of a quote from New Testament, taken from Paul’s letters to Galatians. In Indian compendium of old adages, the same is said in many ways – “muRpagal seyyin piRpagal viLaiyum”, “thanvinaith thannaic chudum”, ‘iTTArkku iTTapalan”, “vinaividhaiththavan vinaiyaruppAn” etc.

 All the commentators have interpreted along the same line of thought. However, the verse does not fit, vaLLUvar’s thought process very well. It is one of those verses, the words have no clarity and so are  the interpretations by commentators, especially by Parimelazhagar. vaLLuvar could have himself done the commentary for such verses!

The verse is interpreted to say this: People will be observing very closely the slanderer and will find the mistakes of the slanderer’s deeds and speak about him/her to others too – tatamount to sayig the slanderer will be paid back by his/her own coin.

The word joins can lead to interpret the meaning differently “kUruvAn than pazhi” or “kUruvAnthan pazhi” can mean two different things.

“Slanderer shall be watched for his slips closely
  And be slandered by others for him to pay dearly”

தமிழிலே:
பிறன்பழி – பிறர் பற்றி தூற்றுதலாக
கூறுவான்தன் - பேசுகின்றவனுடைய
பழியுள்ளும் - குற்றங்களுள்
திறன்தெரிந்து – அவனையும் வருத்தப்படுத்துவன எவையோ, அவை அறிந்து
கூறப்படும் – மற்றவர்களால் அவனுக்கும் சொல்லப்படும்

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்”, “தன்வினைத் தன்னைச் சுடும்”, “இட்டார்க்கு இட்ட பலன்”, “வினைவிதைத்தவன் வினையறுப்பான்” என பலவாறு வழங்கிவருவதற்கு ஏற்றவாறு உரையாசிரியர்கள் எல்லோருமே பொருள் செய்திருந்தாலும், வள்ளுவரின் சிந்தனைத்திறனுக்கு ஏற்றவொரு இக்குறள் இல்லை என்பதுதான் உண்மை. உரையாசிரியர்களைக் குழப்பும்விதமான செய்யுளமைப்பு. அவரே பொருளும் எழுதிவிட்டு போயிருக்கலாமே என்று நினைக்க வைக்கும் குறள்.

புறங்கூறும் ஒருவன் செய்யும் குற்றங்களைப் பிறரும் உற்று நோக்கிக் கொண்டிருப்பர். அவர்கள் செய்யும் குற்றங்களைப் எதைப்பற்றி பிறரிடத்தில் பேசினால் அவனுக்கு மிகவும் வருத்தம் தருமோ, அதைப்பற்றி பிறரும் பேசத்தான் செய்வார்கள், என்பது கொள்ளப்படும் பொருள்.

குறிப்பாக சொற்களைப் பிரிக்கும் வழியினாலே பொருள் மாறிவிடக்கூடிய வாய்ப்புள்ள குறளிது. “கூறுவான் தன் பழி உள்ளும் திறன் தெரிந்து” என்று படித்தால், அப்படி புறங்கூறுவான் தன்னுடைய குற்றங்களை நினைந்து வருந்தக் கூடுமென்று அறிந்து, பிறரும் அவனைப்பற்றி பேசுவார்கள் என்று கொள்ளலாம். “கூறுவான்தன் பழிஉள்ளும் திறன் தெரிந்து” என்று படித்தால் கூறுபவனுடைய குற்றங்களை நினவுகூறி அவனையும்பற்றி மற்றவர்கள் பேசுவார்கள் என்றும் கொள்ளலாம்.

இன்றெனது குறள்:
புறந்தூற்றிச் சொல்வார்தம் குற்றம் நினைந்து
பிறர்தூற்றிச் சொல்லிடு வர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...