செப்டம்பர் 03, 2012

குறளின் குரல் - 144


3rd  Sep, 2012
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.
                  (குறள் 135:  ஒழுக்கமுடைமை அதிகாரம்)

Transliteration:
azhukkA RuDaiyAnkaN AkkampOndRu illai
ozhukka milAnkaN uyarvu

azhukkARu -  jealousy, (also means muddled river ( connotes the thoughts of mind )
(u)DaiyAnkaN – one who has that (jealous or impure mind?)
Akkam pOndRu  - like his weath (the next word will imply, there will be none)
Illai – there will not be
Ozhukkam ilAnkaN – one who is devoid of the righteous conduct!
uyarvu - glory

In this verse, vaLLuvar says, that those who are jealous will not accumulate wealth. He does not necessarily allude to the material wealth alone, but the wealth of knowledge, good family, glorious children, fame etc. Those stray the path of righteous conduct do not get to see progress in their lives.

The word “AzhukkARu” can also mean “Azhukku ARu” meaning meddeld waters of a river, metaphorically implying, progress impeding, disease spreading, stagnant and almost poisonous waters in a river, contrast to the crystal clear flow of a river which is likened to a clear thinking, pristine minds.

Later in the chapter of “Not being envious”, he will say the older sister of Goddess Lakshmi (known as Moodevi – Goddess of Poverty) will go to those who are jealous.

This verse also is indicative of vaLLuvar’s faith in/of God, as well the religious landscape of people that age. As has been said earlier, vaLLuvar would not have cited or quoted something that he did not believe in. In the same chapter, another verse also says, “Jealousy will destroy the wealth and subject a person to the fire of misery”.

Other sangam works and old Tamil poems like AchArakkOvai, thirikaDugam and iniyavai nArppadhu have poems that talk about “Jealousy” as an avoidable quality.

“There will be no wealth for a person of Jealousy and Envy
   For persons of no righteous conduct, no progress or glory”

அழுக்காறு – பொறாமை, அல்லது அழுக்கினால் ஓட்டவொழுகு தடைப்பட்ட ஆறு போன்ற மனம்
உடையான்கண் – அது உடையவர்களிடத்தில் (பொறாமை, அழுக்கு மனம்)
ஆக்கம்போன்று – செல்வம் போல (அவர்களிடன் செல்வம் சேராது என்று அடுத்த சொல் உணர்த்தும்)
இல்லை - இல்லையாம்
ஒழுக்கம்மிலான்கண் – ஒழுக்க நெறிகளிலிருந்து தவறியவருக்கு
உயர்வு – வாழ்வில் உயர்வான நிலையும்.

பிறரைக்கண்டு பொறாமை படுகிறவர்களுக்கு செல்வம் சேராது (பொருள் சேர்ந்த செல்வமில்லாது, மற்றவைகளான அறிவு, தகைமை, நல்ல இல்லறம், மக்கட்பேறு, புகழ்). அதே போல ஒழுக்கநெறிகளிலிருந்து தவறியவர்களுக்கு வாழ்வில் உயர்வு என்பது கிடையாது.

அழுக்காறு என்னும் சொல் “அழுக்கு ஆறு” என்று பிரித்து பொருள் கொள்ள, மனம் என்பது தெளிந்த நீரோடையாய் இல்லாமல், அழுக்குகள் நிறைந்து, தேங்கி பல நோய்களைத் தரும் ஒரு நஞ்சாறாக இருப்பதை குறிக்கிறது.

பின்னால் வரப்போகிற அழுக்காறாமை அதிகாரத்தில் கூறப்போவதன் கருத்தை ஒட்டியே இக்குறள் உள்ளதை கவனிக்கவும். அக்குறளாவது, “அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும்”. அழுக்காறு உடையவனுக்கு திருமகள் தன்னுடைய மூத்தவளைக் காட்டிவிடுவாள் என்பதே இதன் பொருள்.

இக்குறளானும் வள்ளுவரின் இறை நம்பிக்கையும், அவரது காலத்திய தமிழகத்தின் மதம் சார்ந்த மனச்சித்திரங்களையும் காணமுடிகிறது.  முன்னரே சொல்லியிருந்தபடி வள்ளுவர் தான்நம்பாத செய்திகளை மேற்கோளாகவோ, உவமையாகவோ பயன்படுத்தியிருக்கமாட்டார் என்பது நிச்சயம்.

அதே அதிகாரத்தில் மீண்டுமொருமுறை சொல்லியிருக்கிறார், “அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும்” (பொறாமை என்னும் பாவம் செல்வமழித்து துன்பத்தீயில் வாட்டிவிடும் என்று).

ஆசாரக்கோவை “பொய், குறளை, வெளவல், அழுக்காறு, இவை நான்கும் ஐயம் தீர் காட்சியார் சிந்தியார்” என்கிறது. திரிகடுகம், “என்றும் அழுக்காறு இகந்தானும், - இம் மூவர்நின்ற புகழ் உடையார்.” என்கிறது. இனியவை நாற்பது, பாடல் எண் 36-ல் “அவ்வித்து அழுக்காறு உரையாமை முன் இனிதே” (மனதிற்கு கேடான பொறாமைச் சொற்களை சொல்லாமல் இருத்தல் இனிது என்கிறது).

இன்றெனது குறள்:
பொறாமை உடையார்க்கில் செல்வம் – ஒழுக்கம்
உறாதவர்க்கு இல்லை உயர்வு


poRamai uDaiyArkkil selvam - ozhukkam
uRAdhavarkku illai uyarvu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...