ஆகஸ்ட் 23, 2012

உள்ளத்தில் நல்ல உள்ளம்..


உள்ளத்தில் நல்ல உள்ளம்

விஜய்டீ.வியின் “ஏர்டெல் ஸூப்பர் ஸிங்கர்” நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிற தருணம் இது. ஒவ்வொரு சுற்றிலுமே யார் விலக்கப்பட்டு யாரெல்லாம் மேலும் செல்லப்போகிறார்கள் என்பது ஒரு  திகில் கலந்த எதிர்பார்ப்பு பலருக்கு. திகில் என்பது கூட தங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமான சிறுவனோ, சிறுமியோ, தவறில்லாமல் பாட வேண்டுமே, விலக்கப்படக்கூடாதே என்கிற கவலையினாலும் விலக்கப்படுவார்களோ என்கிற அச்சத்தினாலும்தான்.

நான் காலையில், என்னுடைய “ட்ரெட்மில்” மணித்துளிகளில் தவறாமல் பார்ர்கும் நிகழ்ச்சி. இன்று பாடிய கெளதம், உண்மையாக எல்லோரையும் நெகிழ வைத்தான். இப்பயணத்தில் அவனுக்கு விதிக்கப்பட்ட முடிவு எதுவாக இருந்தாலும் இன்றைய இசை வெளிப்பாட்டில், அவனுக்குள் இருக்கிற இசையின் ஆன்மா பேசியது, பாடியது, அழுதது, அழவைத்தது. குழுமியிருந்த இசைக்கலைஞர்கள் எல்லோரையும், அவனையுமே கண் கலங்க வைத்த பாடல்.

கண்ணனைக் கண்முன் நிறுத்திய பாடல்!  சுதா அவர்கள் சொல்லியது போல, அந்த சிறு நடுக்கம், கண்ணனின் குற்ற உள்ளத்தை, வாக்குமூலத்தை, அவனாலேயே தாங்கமுடியாத சோகத்தைச் சொல்லியபாடல். அதை உணர்ந்து அவனே இவனுள் இருந்து பாடினானோ என்று நினைக்கவைத்தான் கௌதம்.

அவனுக்கு முன் “எங்க ஊரு செல்லம்” ப்ரகதி பாடிய சிவசங்கரி என்கிற பாடலும் மிகவும் கடினமான பாடல். தலைப்பாகையைக் கழற்றி வந்தனம் செய்யத்தக்க ஒரு வெளிப்பாடு.

ஒரு சிறு வருத்தம், இவ்விரண்டு பாடல்களையும் பாடிய உன்னத தமிழிசைக் கலைஞர் அமரர் சீர்காழி அவர்களைப்பற்றி எதுவுமே குறிப்பிடாமல் போனதுதான்.  வெண்கலக்குரலிலே இப்பாடல்களுக்கு உயிர்கொடுத்தவர் அவர்.

யாழினிபாடிய நின்னைச்சரணடைந்தேன் பாடலும், அஞ்சனாபாடிய துன்பம்நேர்கையில் பாடலும், மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பதை இருவரிடத்திலுமே காட்டின. யாழினியின் நுணுக்கமான கவனிப்பும், அஞ்சனாவின் குரலின் குழைவும். பயிற்சியினால் மட்டும் விளைந்த பயிர்கள் இவர்களில்லை! இவர்களை நல்ல இசைச் சூழலில் வளர்த்த இவர்களுடைய பெற்றோர்களுக்கு நன்றி! உங்களுடைய உயர்ந்த இசை நுகர்வுணர்வுக்குப் பாராட்டுக்கள்.

ஆர்வத்தில் அருணா அவர்கள் குழலினிது யாழினிது குறளைப், பழமொழி எனச் சொல்லிவிட்டார். ஆனாலும் பொருத்தமாகவேதான் இருந்தது.

உன்னிக்ருஷ்ணன் அஞ்சனாவின் பாடலுக்கு நெகிழ்ந்தது, பாம்பே சகோதரிகளில் சரோஜா, கெளதமின் பாடலுக்கு பாராட்ட வந்து, வார்த்தைகளைச் சொல்லமுடியாமல் குரல் கம்மியது, யாழினி போன்ற குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுப்பது ஒரு வரம் என்ற அனந்த் அவர்களின் உள்ளத்திலிருந்து வந்த சொற்கள், நடுநாயகமாக அமர்ந்து தாளக் கருவிகளில் அரவணத்துச் சென்றதோடல்லாமல், நெகிழ்ந்த உமாசங்கர் அவர்கள், வீணை யோகியாகவே பத்மாஸனத்தில் அமர்ந்து இனிமை என்னும் சொல் இவருக்காகவோ என்னும்படி வீணையிசைத்த ராஜேஷ் வைத்தியா, என்று ஒவ்வொருவருமே இன்றைய நிகழ்ச்சியை நினவில் வெகுநாளைக்கு நிற்கும்படியான நிகழ்ச்சியாகச் செய்துவிட்டனர்.

இசையோடிணைந்து இசைபட இச்சிறுவர்கள் வாழ வாழ்த்துக்கள்! இவ்வினிமை இளைக்காமல் இருக்கட்டும்.

3 கருத்துகள்:

  1. பெயரில்லாPM 8:23:00

    On your comment on Aruna it is common at times words gets twisted as she herself was crying when gautam was singing. if u hv noticed Rajesh Vaidya stopped playing in last charanam (Senjotrukadan Theerka). In fact the vibrophone person gave kudos to the composer of ullathil nalla ullam and forgot to mention Seerkazhi's rendering.Kids have amazing talent and our bay area celebrity Pragati was at her peak in both Mannavanan Vandanadi and Sivasankari - agreed Waiting to watch the last episode of the classical round tmw from my DVR.

    Raja Renganathan

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லாAM 11:01:00

    I would like to ask you about this phrase that you wrote 'தலைப்பாகையைக் கழற்றி வந்தனம் செய்யத்தக்க ஒரு வெளிப்பாடு'. I know this was meant to indicate 'Hats off performance'. My question is more on Tamil literary. Was this literal translation of the English phrase has an equivalent in original Tamil language? Or how will you express this in Tamil.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. The idea has been in our culture too. In competitions if somebody loses, they will remove their turban as a sign of submission or accepting the defeat. Also, before the respectable people or elders, people would remove their turban and bow their heads. The idea is "Hats off" which implies taking the hat off the head and holding it on the side with lifted hand. Vandanam is more respectful and bowing down. There is nothing that I have read in Tamil usage like that. It occurred to me write it that way :)

      நீக்கு

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...