ஆகஸ்ட் 03, 2012

குறளின் குரல் - 114


3rd Aug, 2012

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
                                 (குறள் 104:  செய்நன்றியறிதல் அதிகாரம்)

Transliteration:
thinaithuNai nanDRi seyinum panaiththuNaiyAk
koLvar payan therivAr

thinaithuNai - Even if it is only the size of a millet ( a very small grain aka “quinoa”)
nanDRi – help
seyinum – done for someone,
panaiththuNaiyAk – asbig as the size of a palm fruit
koLvar – will construe
payan – if the value of that help
therivAr – who understands (the value)

Exaggerated comparisons of this chapter are continuing in this verse also. “thinai” is a millet (grain) like rice or wheat. Tamil literature has ample citations to this as the staple food taken with honey, by old Tamil culture. This has gone out of vogue mostly in Tamil Nadu as rice became the main staple food of Tamils. In western countries recently this grain aka (Quinoa) is used as breakfast cereal as it has protein and a lot of health aware people have switched to this from rice as their main stay.  When you compare a single grain of this with the size of the palm fruit, both in size and the ability to quench hunger, it is very small.

When someone is helped, more than whom it was done for, and what measure, when it is done is very important. When someone is in extreme hunger, giving them a little bit of buttermilk with few grains of cooked rice and even a green chilli is construed bigger and better than a six course feast for somebody who is fed well without fail and is not hungry. Also the help should be for the discerning people that appreciate the timeliness of the help, not for nitwits who neither value nor appreciate the help.

Other sangam literature and later ones have taken the clue from vaLLuvar and have used the same comparison in similar contexts. Even vaLLuvar seem so fascinated by the rhyming of these two words “thinai” and “panai , he has used it in two other chapters, verses 433 and 1282. Having settled for slightly exaggerated comparisions, I have used the comparison between “anU” (atom) and “anDum” (universe ), in today’s verse.

Help, even the size of a grain is bigger than the palm fruit
For the discerning beneficiary, who values its true merit

தமிழிலே:
தினைத்துணை – தினையின் அளவு சிறியதாக ( அரிசி, கோதுமை போன்ற பழந்தமிழரது உணவு)
நன்றி - உதவியினை
செயினும் - செய்தாலும்
பனைத்துணையாக் – அதைப் பனங்காய் அளவுக்கு பெரியதாகக் (உருவிலே, பசியாற்றும் அளவிலே)
கொள்வர் - கருதுவர்
பயன்தெரிவார் – அவ்வுதவியின் விளைந்த பயனை நுகர்ந்தவர்

மிகையாகச் சொல்லப்படுகிற ஒப்புமைகளின் தொடர்ச்சியே இக்குறள்.  தினையெனப்படுவது ஒரு நெல்லுக்குள் இருக்கும் அரிசியைப்போல பருப்புவகை உணவு. பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படுகிற “தேனும், தினைமாவும்” என்று பேசப்படுகிற, பழந்தமிழ்நாட்டின் நிரந்தர உணவு, இப்போது முற்றிலுமாக வழக்கொழிந்து போனது. கீன்வா, அல்லது கினோவா என்று மேலை நாடுகளில் இப்போது கிடைக்கிறது. புரதச்சத்து நிறைந்தது. ஒரு தினைப்பருப்பை, பனங்காயோடு ஒப்பிட்டால் அது அளவிலும், பசியாற்றுந்திறனிலும், மிகவும் சிறியது.

ஒருதவியின் பயன் அது யாருக்காக செய்யப்பட்டது என்று ஒருபுறமிருந்தாலும், எப்போது செய்யப்பட்டது என்பது மிகவும் இன்றியமையாதது. பசித்தவேளையில், கரைத்தமோரும், கடித்துக்கொள்ள மிளகாயும் கொடுத்தால், அது பசியில்லார்க்குப் படைக்கப்படும் அறுசுவை விருந்தைவிட எவ்வளவு உயர்வாகக் கருதப்படுமோ, அதைப்போன்றுதான் தினையளவு செய்த உதவியை பனங்காயளவு கொள்வதும். அதுவும் கூட அவ்வுதவியின் பயனறிந்தவரே அதை உயர்வாகக் கருதுவர். பயனறியா மூடருக்கு மலையளவு உதவி, உற்ற நேரத்தில் செய்தாலும் அதன் உயர்வு புரியாது.

மிகைப்படுத்தலான ஒப்புமை என்னும்போது, கடுகு-ககனம், அணு-அண்டம் எல்லாமே ஒன்றுதானே, அளவை மட்டும் கொண்ட ஒப்புமையானால்! நாலடியாரும் இக்குறளின் கருத்தை ஒட்டியே, “தினையனைத்தே ஆயினும் செய்த நன்றுண்டால் பனயனைத்தா உள்ளுவர் சான்றோர்” (நாலடியார் 344). வள்ளுவருக்கு தினை-பனை எதுகை மிகவும் பிடித்திருந்திருக்கவேண்டும். குறள் 433 (குற்றங்கடிதல் அதிகாரம்), 1282 (புணர்ச்சி விதும்பல் அதிகாரம்) இதே ஒப்புமையினை செய்துள்ளார்.

இன்றெனது குறள்:
அணுவளவு நன்றியும் அண்டம்போ லாகும்
நுணுகி நுகர்வார் தமக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...