ஜூலை 11, 2012

குறளின் குரல் - 91

11th July, 2012

CHAPTER ON HOSPITALITY: (விருந்தோம்பல்)

[Welcoming the guests with a smile and providing them with food, clothes and place to stay are expected virtues of a householder.  Being compassionate and loving to people other than at home, are the prerequisites for those virtues. As vaLLuvar has said before ‘anbum aRanum uDaiththAyin, ilvAzhkkai paNbum payanum adhu’.  Being Hospitable is a great character borne out of virtue of compassion and hence this chapter has been kept in the order following the chapter on Love and compassion.]

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
                       (குறள் 81: விருந்தோம்பல் அதிகாரம்)

Transliteration:
irundhOmbi ilvAzhvadhellAm virundhOmbi
vELANmai seidhaR poruttu

irundhOmbi  - living gloriously
ilvAzhvadhellAm - in  a household, is all for
virundhOmbi -  welcoming the guests and feeding them
vELANmai - and the deeds of giving
seidhaR poruttu - to do them ( the deeds of giving)

The word “vELANmai” has come to be used for the agricultural pursuits in Tamizh. It has other meanings such as “the truth”, and “benevolence”.  In this verse, it is used as equivalent to “benevolence”.  Living a good life of a householder is to welcome the guests without hesitation or aversion, feed them to their hearts content and be benevolent to do all the things the guests may need to send them happy; of course, within the means of what is affordable.

 A home or a country is known to be prosperous based on how benevolent it is. The aboard of virtue is aboard of properity and the home of prosperity is the home of benevolence and happiness borne out of that, everything linked to one another. Hence this chapter is also part of the Canto of Virtues.

Living the life as a householder of great merit
Is to be hospitable and benevolent to any guest

தமிழிலே:

விருந்தினரை தகுந்தமுறையில் வரவேற்று அவர்களுக்கு வேண்டிய உணவு, இருக்கை, உடை இவற்றை மகிழ்வோடு செய்தல் இல்லறத்தோர்க்கு விதிக்கப்பட்ட அறக்கடமைகளில் ஒன்று. தம்மில்லத்தோர் மீது செலுத்தும் அன்பினைப் போலவே, மற்றவர்கள் மீதும் அன்பு செலுத்துபவர்களாலேயே, இக்கடமையைச் சரிவர செய்யவியலும். “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைப் பண்பும் பயனும் அது” என்று முன்னரே கூறியதுபோல, அன்பின் காரணமாக விளையும் பண்பு விருந்தோம்பல் என்பதும், பண்போடு வாழ்வாரே அறவாழ்க்கையும் வாழ்வார்கள், அதுவே அவர்கள் வாழும் வாழ்க்கையின் பயனும் என்பதால், இவ்வதிகாரத்தை அன்புடமைக்குப் பின்னால் வைத்தார் போலும்.

இருந்தோம்பி  - மனைவியோடு பொருந்தி சிறப்பாக
இல்வாழ்வதெல்லாம்  -  இல்லறத்தில் வாழ்வதெல்லாம்
விருந்தோம்பி  - வரும் விருந்தினருக்கு விருந்திட்டு
வேளாண்மை – அவர்களுக்கு ஈந்து
செய்தற்பொருட்டு. – வேண்டுவன செய்வதற்கே

வேளாண்மை என்ற சொல் விவசாயத்தினைக் குறிப்பதற்கே இப்போது புழக்கத்தில் இருந்தாலும், அதற்கு ஈகை, மெய் என்கிற பொருள்களும் உண்டு. இக்குறளில் ஈகை என்ற பொருளிலேயே வள்ளுவர் சொல்லியுள்ளார். ஒரு நல்ல இல்லறத்தை வாழுதல் என்பது, வரும் விருந்தினருக்கு வயிறார உணவளித்து, வேண்டுவன செய்வித்து, (ஈந்து) மகிழ்வோடு அனுப்புதலாம் – இதுவும் கூட தங்கள் வாழ்க்கை வசதிகளுக்கு உட்பட்டே!  ஒரு இல்லமோ, நாடோ, அதன் வளப்பமானது, அதன் வள்ளன்மை, ஈகைத்தன்மை இவற்றைக்கொண்டு அறியப்படும். அறம் வாழும் இடங்களிலே வளமும், வளம் வாழும் இடங்களிலே வள்ளன்மையும் என்று ஒன்றோடொன்று பிணைந்துள்ளதன் காரணமாக, இவ்வதிகாரம் அறத்துப்பாலின் கண் உள்ளது.

இன்றெனது குறள்:
ஏற்றமுடன் வாழுநல் வாழ்க்கை - விருந்தினர்க்கு
ஆற்றுமீகை நற்கடனுக் காய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...