ஜூலை 01, 2012

குறளின் குரல் - 81

1st July, 2012


[மக்கட்பேறு அதிகாரத்திற்கு பின் வரும் அதிகாரம் அன்புடமை ஆகும். அன்புடமை பலநிலைகளிலும் வைத்துப்பேசத்தக்கது. ஏற்கனவே “இல்வாழ்க்கை” அதிகாரத்தின்கண் “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைப் பண்பும் பயனுமது” என்று கண்டிருக்கிறோர். காதலர் இருவர் கருத்தொருமித்து, அன்பின் வழி நின்று கலந்து, திருமணவாழ்வில் இணைந்து, சமூகத் தொடர்சங்கிலியாக இருப்பதற்கு மூல வித்து “அன்பே”யாம்.  உறவுகளிலும், நட்பிலும், பொதுவான சமூக வாழ்விலும், வாழ்க்கைத்துணை, மக்கள், சுற்றம், நட்பு, நாம் வாழும் சமூகத்தினர் என்று பலரோடு, இணைந்து வாழ்வுக்கு அடிப்படை ஆதாரமாவது அன்பே.

இவ்வதிகாரம், அன்பெனப்படுவது இல்வாழ்வினருக்கு மட்டும் என்ற வரையிலிருநு விரிந்து பரந்து, பொதுவாக எல்லா உயிர்களின்மேலும் அன்புபூணுதலையும், மற்றும்அன்புடையார். அன்பிலார் இயல்பு இவற்றினைப்பற்றியும் பேசுகிறது.]
 **********************************************************************************************************
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
                       (குறள் 71: அன்புடைமை அதிகாரம்)

Transliteration:
anbiRkkum uNdO aDaikkumthAz Arvalar
punkaNIr pUsal tharum

anbiRkkum – for someone to not display love (towards somebody they have utmost affection for)
uNdO  - is there
aDaikkumthAz  - a latch that can keep it locked? (even if they want to not show for any reason)
Arvalar – those who have immense love (affection) for someone
punkaNIr – tear drops that trickles down
pUsal tharum – will announce it loudly (for others to know it)

When there is affection for somebody, sometimes it may not be possible to reveal it explicitly for various reasons. But the trickling tear drops reveal more than words can express, when we think of them or talk about them or may have to part them for any reason or no reason.  Similarly, when there is a reunion with someone we love, that was away for a long time, words dry up, joy overwhelms, eyes well up.   Likewise, when we hear painful news about somebody that we love and care for, our eyes cannot help but build screen of tear drops.

Pure love and affection, melts the hearts, and gives inexplicable, unexplainable emotions of happiness, longing, pain, and sadness and that can result in tears in eyes. During such moments, it is impossible to latch up the overwhelming emotional outburst of love and affection. For such weak attempts, the trickle of tears will reveal the love loud and clear. This is what is expressed by this verse.

Once again, unlike how vaLLuvar has been depicted as a saint in pictures and statues, we can see through the past and ensuing chapters, that he possibly lived a life to the fullest extent to understand these various facets and aspects of human life

“Is there a latch that can shut the love’s expression?
When tear trickles make  a loud and clear revelation!”

தமிழிலே:
அன்பிற்கும்  - ஒருவர் மேல் கொண்ட அன்பை வெளிக்காட்டாமல் இருக்க
உண்டோ – இருக்கிறதா (வலிமை)
அடைக்குந்தாழ் –பூட்டிவைக்கும் தாழ்பாள்?
ஆர்வலர் – அன்பினால் கட்டுண்டவருக்கு (அவர் எத்துணதான் ஏதோ காரணங்களுக்காகக் கட்டுப்படுத்தினாலும்)
புன்கணீர் – அவர்கள் கண்களிலே துளிர்த்து சிந்தக்கூடிய சிறு கண்ணீர்த் துளிகளே
பூசல் தரும் – உரத்துச் சொல்லிவிடும்.

ஒருவர் பிறரிடம் அன்பு கொள்ளும் போது, சிலநேரங்களில் அவ்வன்பை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள முடியாமல் போவதற்கான நிலையில் இருக்கலாம்.  ஆனாலும், அவர்களைப் பற்றிய நினைவும், அவர்களைப் பற்றி பிறரிடம் பேசும் போதும், அவர்களைப் பிரிய நேரும் போதும், கண்களின் நீர் முட்டிக்கொள்வது பலரும் உணர்வது; அல்லது மிகவும் நெருக்கமானவர்களை, வெகுநாள் பிரிந்திருந்துவிட்டு மீண்டும் சந்திக்கும் போது, வாய்சொற்கள் வற்றிப்போய், மகிழ்ச்சிப்பெருக்கில், கண்களில் நீர் பெருகிவிடும். மேலும், நமக்கு மிகவும் அணுக்கமானவர்களைப் பற்றிய துன்பம்தரக்கூடிய செய்திகளை கேட்ட நொடியிலும், நம்மை அறியாமல் விழிகளில் நீர் துளிர்த்து விடுகிறது.

தூய அன்பு நெஞ்சை நெகிழ்த்தி, ஒரு விவரிக்க இயலாத மகிழ்வு, ஏக்கம், வருத்தம், துன்பம் என்கிற உணர்ச்சிகளை ஏற்படுத்தி கண்களில் நீரை வரவழைத்துவிடும். அத்தகைய தருணங்களில், நெஞ்சில் ஏற்படும் அன்பு உணர்ச்சி மேலீட்டினை தாழிடவோ, அதன்காரணமாக வரும் கண்ணீருக்கு அணைபோடவோ இயலாது. அவ்வாறு கண்களில் பெரும் கண்ணீரே, அன்புடையார் நெஞ்சதன்பை உரக்கச் சொல்லிவிடும் என்பதையே இக்குறளும் சொல்லுகிறது

இன்றெனது குறள்:
பூட்டிவைக்க கூடிடுமோஅன்பதனை – நன்கதனை
காட்டிவிடும் கண்பெருகும் நீர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...